காந்தியின் பேத்தி

Manilal

காந்திஜியின் இரண்டாவது மகனான மணிலால் காந்தி இந்தியாவில் பிறந்தாலும் தென் ஆப்பிரிக்காவிற்கு தன் தந்தையுடன் சென்று குடியேறினார். மகாத்மா காந்தி அறிஞர் ஜான் ரஸ்கினின்  UNTO THIS LAST  என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு டர்பனுக்கு அருகில் உள்ள பீனிக்ஸ் செட்டில்மென்ட் ஆசிரமத்தில் வாழ்க்கையை ஆரம்பித்ததும் அவருடன் கூடவே இருந்தார் மணிலால்.

இவரும் காந்திஜியைப் போலவே அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுத்து பலமுறை சிறைக்குச் சென்றார். மணிலால் காந்தியின் மகள் தான் ஏலா காந்தி. இவர் தென் ஆப்பிரிக்காவின் பினிக்ஸில் பிறந்தார்.  நேட்டால் பல்கலைக்கழத்தில் படித்து சிறந்த சமூக சேவகியாகி ‘ காந்தி டிரஸ்ட் ‘ எனும் அமைப்பை நடத்தி வருகிறார். தென் ஆப்பிரிக்க பார்லிமென்ட் மெம்பராக இருந்தவர். நெல்சன் மண்டேலாவின் ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸில் இணைந்து பல பணிகள் ஆற்றியவர்.van athen tree

காந்திஜியின் சுதந்திரப் போராட்டத்திற்குப் வித்திட்டது தென் ஆப்பிரிக்க மண்தான். அங்கு காந்தி ரயிலில் பயணித்தபோது  நிற வெறியரால் ரயிலிலிருந்து கீழே தள்ளிவிடப்பதன் விளைவாக எழுந்ததுதான் சத்தியாகிரகப் போராட்டம்.images

சில வருடங்களுக்கு முன் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவிற்கு இந்தியர்கள் பலரை ஏலா காந்தி தென் ஆப்பிரிக்காவிற்கு அழைத்திருந்தார். ஏலா காந்தியும் தன் தாத்தாவைப்போன்றே மென்மையானவர். “ நான் இரண்டு சுதந்திர தினங்களைப் பார்த்திருக்கிறேன். ஒன்று நம் பாரத சுதந்திரம்  அப்போது பெற்றோருடன் இந்தியா வந்திருந்தேன். பாட்டி வீட்டிற்குச் சென்றபோது அந்த கிராம மக்கள் காந்தியின் பேத்தி என்று சின்னப் பெண்ணான என்னைக் கொடியேற்றச் சொன்னார்கள்  நான் பார்த்த இரண்டாவது சுதந்திரம்  தென் ஆப்பிரிக்காவின் சுதந்திரம் “ என்று நினைவு கூர்ந்தார் ஏலா.Mahatma-Gandhis-granddaughter-honoured-in-South-Africa

இப்போது பல போராட்டங்கள் வன்முறைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் எங்களின் அறப்போர்கள் எல்லாம் காந்திய வழியில் இருந்தன. ஏழை எளியவர்களுக்கு நன்மை செய்யக்கூடியதை நாம் செய்யவில்லை என்றால் நாம் எதையும் சாதிக்கவில்லை என்றே அர்த்தம். என்று ஏலா காந்தி பேசியது இன்றைக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது.  2007ல் இந்திய அரசு பத்ம பூஷண் விருதளித்து ஏலா காந்தியை கௌரவப்படுத்தியது.

Advertisements

One thought on “காந்தியின் பேத்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s