ஆஹா தகவல்

download

வைட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தைவிட நெல்லிக்காயில் 20 மடங்கு அதிகமிருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காயாவது சாப்பிடுவது நல்லது. சாப்பிட பிடிக்காதவர்கள் நெல்லிக்காய் சாறை தினசரி ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உடல் களைப்பு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் சோர்வு ஏற்படாது.

ஃபீல்டு மார்ஷல் நிகோலஸ் அகஸ்டி என்பவர் நூற்றுக்கணக்கான போர்களில் ப்ங்கு கொண்டு தம் வீரத்தை நிலை நாட்டியவர். இவரது காலம் 1646 முதல் 1715 வரையிலாகும். ஒரு முறை நண்பர்களுடன் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மேஜை மேலிருந்த உப்புக் கிண்ணம் கைபட்டுத் தவறி விழுந்து உப்பு சிதறிவிட்டது. இதைப் பெரும் அபசகுனமாகக் கருதிய நிகோலஸ் அந்த அதிர்ச்சியிலேயே இறந்து விட்டார்.PaperRecycling

ஒரு மெட்ரிக் டன் காகிதத்தை மறு சுழற்சி செய்வதன் மூலம் 17 மரங்கள் காப்பாற்றப்படும். உலகில் 93 சதவிகித காகிதங்கள் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. காகித மறுசுழற்சியில் சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியா இந்தப்பட்டியலில் 40வது இடத்தில் உள்ளது.19-Nehru.jpg.image.975.568

ஜவஹர்லால் நேரு அவர்கள் ஜப்பான் குழந்தைகளின் வேண்டுகோளுக்கு இணங்கி 1960ம் ஆண்டு  இந்திரா என பெயர் சூட்டிய ஒரு யானைக்குட்டியை ஜப்பானிற்கு அனுப்பி வைத்தார். இதில் என்ன அதிசயம் என்றால் இந்திரா காந்தி அவர்கள் சுடப்பட்டு இறந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி ஜப்பான் மிருகக்காட்சி சாலையில் இருந்த அந்த இந்திரா யானையும் இறந்து போனதாம்.john-d-rockefeller-225

உலகின் முதல் கோடீஸ்வரர் அமெரிக்காவை சேர்ந்த ஜான் டி ராக்பெல்லர்  1918ல் அவரது  சொத்து மதிப்பு 125 கோடி டாலர்கள். ஒரு முறை பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் “ நீங்கள் உலகின் பெரும் பணக்காரர் ஆகி விட்டீர்களே மேலும் எதற்காக உழைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார் அதற்கு ராக்பெல்லர் “ நாம் விமானத்தில் பயணிக்கிறோம்  விமானம் மேலெ,ழும்பி வானில் பறக்கத் தொடங்குகிறது. அப்போது மேலே வந்தாயிற்றே பிறகென்ன என்று விமானத்தின் எஞ்சினை அணைத்து விட முடியுமா? தொடர்ந்து பயணித்தால் தானே இலக்கை அடைய முடியும்/ “ என்றதும் பத்திரிக்கையாளர் கப்சிப் ஆகிவிட்டார்.James_Abram_Garfield,_photo_portrait_seated

ஜேம்ஸ் கார்ஃபீல்டு என்பவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளுள் ஒருவர். இவர் ஒரே சமயத்தில் ஒரு கையால் லத்தீன் மொழியில் எழுதிக்கொண்டிருக்கும்போதே மறு கையால் கிரேக்க மொழியிலும் எழுதும் திறமை கொண்டவர்.download (1)

தையல் இயந்திரங்களின் விலை 1850களில் நடுத்தர வர்க்கதினரின் ஒரு மாதச் சம்பளத்ஹ்டில் நான்கில் ஒரு பங்காக இருந்தது. இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்க முன்வருவர். எனவேதான் எட்வர்ட் கிளார்க் எனப்வர் தவணை முறையில் பணம் செலுத்தி பொருளை வாங்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் தவணை முறையில் பொருட்கள் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s