எதை நம்புவது?

ahob

சமீபத்தில் DECCAN CHRONICLE தினத்தாளில்  “ TO VITAMIN OR NOT TO VITAMIN “ என்ற கட்டுரையைப் படித்தேன். படித்தபின் குழப்பம்தான் அதிகமானதே தவிர எதை நம்புவது எதை விடுவது என புரியவில்லை.  அதில் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உணவைப் பற்றி சொல்லியிருந்தார்கள். சரிவிகித உணவு பற்றியும் வளரும் குழந்தைகளுக்கு தேவையான புரதம் தாதுப்பொருட்கள் சத்து நிறைந்த முளை கட்டிய பருப்புக்கள் கீரை வகைகள் மற்றும் அதிகம் கொழுப்பு இல்லாத உணவை தினமும் அவர்களுக்கு எப்படியெல்லாம் கொடுக்கலாம் என விவரமாக எழுதியிருந்தார்கள்  ஆனால் இதையெல்லாம் சரியாக பார்த்து பார்த்து செய்து கொடுக்க தாய்மார்களுக்கு இப்போது நேரம் எங்கே இருக்கிறது. அதிலும் அலுவலகம் செல்லும் தாய்மார்களுக்கு நேரமும் பொறுமையும் அறவே கிடையாது என்பது தான் உண்மை. திடீர் உணவுகளும்  ஏற்கனவே பாதி சமைத்து அடைக்கப்பட்ட உணவுகளும் தான் பிள்ளைகளுக்கு காலையும் மாலையும் மதிய உணவு டப்பாக்களிலும் அடைக்கப்படுகின்றன. இதில் சரிவிகித உணவுக்கு எங்கே போவது?download (1)

அப்படியே கொடுத்தாலும் 90% குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பதைத் தான் பார்க்கிறோம். இதற்கு ஒரே தீர்வு   எல்லா சத்துக்களையும் உள்ளடக்கிய விட்டமின் மாத்திரைகள். இதை எப்படி கொடுப்பது?  இதை டாக்டர்கள் பரிந்துரைப்பதைவிட சில பள்ளிகளில் ஆசிரியர்களே பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

எங்கள் அடுத்த வீட்டு பையன் ஒரு மிக பிரபலமான பள்ளியில் படிக்கிறான். அவனுக்கு அவன் அம்மா முக்கால்வாசி சமயம் இரவு சமைத்த உணவையே காலை சூடு பண்ணி டப்பாவில் அடைத்து அனுப்பி விடுகிறாள். அது பாதி நாட்கள் சாப்பிடமுடியாமல் வீணாகி அவன் பள்ளியிலேயே கொட்டிவிட்டு வந்துவிடுவான். இதனைப் பார்த்த அவன் ஆசிரியை  அவனுக்கு தினமும் ஏதாவது ஸ்னாக் மாதிரி அனுப்புங்கள்  சத்துக்கு விட்டமின் மாத்திரைகள் கொடுத்து அனுப்புங்கள் என அறிவுரை சொன்னாராம்.  எந்த குழந்தைக்கு எந்த விட்டமின் தேவை எது அதிகமாக உள்ளது  எந்த விட்டமின் அவனுக்கு தேவை என அந்த ஆசிரியைக்கு எப்படி தெரியும்? என்ன அறிவுரை இது.download

என் சினேகிதியின்  பிள்ளை பி டெக் மூன்றாம் வருடம் படிக்கிறான். ஒரே பிள்ளை என ஒரே செல்லம். ஒரு சில கறிகாய்களை மட்டுமே திருப்பி திருப்பி பண்ண வேண்டும்  பழங்களில் எத்தனை வகை உள்ளது அதனை எப்படி சாப்பிடவேண்டும் என்பதே அவனுக்கு தெரியாது.  ஆனால் படிக்க தெம்பு வேண்டுமே என பிரபலமான  கம்பெனி தயாரிக்கும் விட்டமின் மாத்திரைகளை [ காய்கறி பழங்களின் சத்துக்களால் செய்யப்பட்டவை} முப்பது மாத்திரை அடங்கிய பாட்டில் 2000 ரூபாய்  அதை வாங்கிக் கொடுக்கிறாள். எல்லோராலும் இப்படி பணம் செலவழிக்க இயலுமா?

சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு எல்லாவிதமான காய்கறிகள் பழங்கள் கீரைகள் என சாப்பிட பழக்கவேண்டும். வயதான பிறகு சத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதபோது அதை நிறைவு செய்ய கண்டுபிடித்த விட்டமின் மாத்திரைகள் இப்போது  எல் கே ஜி குழந்தைகளுக்கு அத்தியாவசமான ஒன்றாக மாறி வருவது மனதிற்கு வேதனையாக உள்ளது. இந்த நிலை மாறுமா?

Advertisements

3 thoughts on “எதை நம்புவது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s