இரண்டு டிக்கெட்டும் மூன்று க்ளிக்கும்

r7

ரொம்ப புத்திசாலிகள் கூட சில சமயத்தில் அல்லது சின்ன வயதில் மிகவும் மண்டுகளாக இருந்திருக்கிறார்கள் என்பது தான் இந்தப் பதிவு.  என் இரண்டு பெண்களின் அதி புத்திச்சாலித்தனமான  நிகழ்ச்சிகளை இப்போது [ அவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்டுதான் ] உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.Secunderabad_Railway_Station_Ptatform

அப்போது என் பெண் ப்ளஸ் 2 வில் படித்துக்கொண்டிருந்தாள்.  நானும் என் கணவரும் அவசரமாக சென்னை செல்லவேண்டி வந்ததால் அவளை கல்லூரியிலிருந்து ரயில் நிலையம் வரச்சொல்லியிருந்தோம். வந்தவளுக்கு நாங்கள் இரண்டு நாட்கள் இல்லாதபோது அவளும் தங்கையும் எப்படி இருக்கவேண்டும், என்ன செய்யவேண்டும் என சொல்லிக்கொண்டிருந்தேன்.   வண்டி ஸ்டேஷனுக்கு வந்து விட்டது. வண்டி ஏறுமுன் என் கணவர் அவளிடம் “ பிளாட்பாரம் டிக்கெட் வாங்கினாயா?” எனக் கேட்டார். “ ஓ வாங்கிக்கொண்டேனே ”  என இரண்டு டிக்கெட்டுகளை காண்பித்தாள். “ எதற்கு இரண்டு டிக்கெட்டுகள்/” என்று நான் கேட்டதற்கு அவள் சொன்னபதில் “ பிளாட்பாரம் உள்ளே வர ஒன்று திரும்பிப் போக ஒன்று “ என்றாளே பார்க்கலாம். சிரிப்பை அடக்கமுடியாமல் அவளுக்கு உள்ளே வர டிக்கெட் அவசியமில்லை வெளியே செல்ல மட்டும் ஒரு டிக்கெட் போதும் என விளக்கி விட்டு  வண்டி ஏறினோம்.Platform

பிறகு அவள் எம் பி ஏ.,  எம் எப் எம் எல்லாம் முடித்து மூன்று தங்கப்பதக்கங்களுடன் தங்கமகளாக வெளிவந்தது தனிக்கதை.studio

என் இரண்டாவது பெண் அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். அப்போதெல்லாம் ஏழாம் வகுப்பின் முடிவில் முழுபரிட்சை அரசு பரிட்சையாகத்தான் இருந்தது. அதற்கு படிவம் எழுதி  போட்டோ ஒட்டிக் கொடுக்கவேண்டும். அவள் வகுப்பு ஆசிரியை மூன்று போட்டோக்கள் வேண்டும் என சொல்லி அனுப்பினார். எனவே அவளை மாலை போட்டோ ஸ்டுடியோவிற்கு அழைத்துப்போனேன்.  பாஸ்போர்ட் சைஸ் என சொல்லி போஸ் கொடுக்க அமர்ந்தாள். புகைப்படக்காரர் வழக்கப்படி தலையை அசைத்து  கழுத்தை வளைத்து சிரிக்கும்படி சொல்லி கேமராவை க்ளிக்கினார்.  எழுந்திரு என்று சொன்னால் அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்  போட்டோ எடுத்தாகிவிட்டது என்று சொன்னபின்னும் அப்படியே இருந்தாள். பிறகு போஸ் மாறாமல் சொன்னாள் “டீச்சர் மூன்று போட்டோக்கள் கேட்டார்  இவர் ஒன்று தானே எடுத்தார்  மூன்று முறை க்ளிக் செய்யவில்லையே “என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்.  ஒரு முறை எடுத்தாலே எத்தனை காப்பி வேண்டுமானாலும் போடலாம் என விளக்கி வீட்டுக்கு அழைத்து வந்தேன். பிறகு அவள் தங்கப்பதக்கங்களுடன்  பி எஸ்ஸி  எம் எஸ்ஸி  படித்து திருமணம் ஆனதும் எம் பில்  பி எட் எல்லாம் முடித்து இன்று சென்னையில் ஒரு பிரபல பள்ளியில் 12ம் வகுப்புக்கு இரசாயன ஆசிரியையாக இருப்பது தனிக்கதை.

இந்த நிகழ்ச்சிகளை அவர்கள் இருவருக்கும் திருமணமான பிறகு அவர்கள் கணவர்களுக்கும் சொல்லி மகிழ்ந்தோம். இப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் அண்ணா அவர்களை கேலி பண்ணிக்கொண்டிருப்பான்.  கொஞ்ச நாட்களுக்கு அவர்கள் இருவரையும்  2 டிக்கெட்ஸ்  3 க்ளிக்ஸ் என்றே அழைத்துவந்தோம்.   பெரியவள் அதிகம் பாராட்டமாட்டாள்   சிறிது நேரம் உம்மணாம் மூஞ்சியாக இருப்பாள்  சின்னவளுக்கு ரொம்ப கோபம் வரும்   எப்போது நினைத்தாலும் அடக்கமுடியாத நகைச்சுவை நிகழ்ச்சிகள் இவை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s