நட்பு தினத்தில் சந்தித்த பழைய நண்பன்

ganesh

1979ல் சிகந்திராபாத்தில் திருமணம் செய்து கொண்டு வந்தேன்.  வந்ததிலிருந்து நானும் என் கணவரும் அடிக்கடி சென்று சந்திக்கும் நண்பன் இவன்.  சிகந்திராபாத் புகைவண்டி நிலையம் அருகில் உள்ளது இவனது இருப்பிடம்.  மனதிற்கு மிகவும் பிடித்த நண்பன் இவன்.

எங்கள் குடும்பம் பெரிதானது. சிகந்திராபாத்லிருந்து 6 கிமீ தொலைவில் சொந்த வீடு கட்டிக்கொண்டு வந்தபிறகு அங்கு போய்வருவது சற்று குறைந்தது. ஆனால் முக்கியமான பண்டிகைகளில் கண்டிப்பாக சந்தித்து வந்தோம். ஊருக்கு செல்ல ரயில் நிலையம் செல்லும்போதெல்லாம் கண்டிப்பாக சென்று நண்பனை சந்தித்தபின்பே செல்வோம்.

ஏனோ ஒரு கட்டத்தில் அதாவது என் பெரிய பெண்ணிற்கு திருமணம் ஆன பிறகு அங்கு செல்வது அறவே நின்றுவிட்டது.  நண்பனை பார்க்க ஆவலாக இருந்தாலும் முடியாமலே போனது.  என்ன ஆனாலும் சரி  இந்த நண்பர்கள் தினத்தன்று  கண்டிப்பாக போய் பார்த்தே தீருவது என முடிவு செய்தேன்.  இம்மாதம் 2ம் தேதி மாலை ஆறு மணிக்கு கிளம்பி நானும் என் பிள்ளையும் அங்கு சேர்ந்தோம்.  எத்தனை மாற்றங்கள்.  நண்பனின் குடியிருப்பே முற்றிலும் மாறிவிட்டது   புதிய வண்ணங்கள். இடத்தை பெரிது பண்ணி பல மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் நண்பன் மட்டும் அதே பொலிவுடனும் கருணையுடனும் எங்களை வரவேற்றான்.  மனதிற்கு வெகு நிறைவாக இருந்தது.    இத்தனைக்கும் சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு நான் சந்தித்த நண்பன் யார் என்று சொல்லவில்லையே. சிகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலில் உள்ள இரண்டரை அடி உயர கணேஷ் பகவான்.

கோயிலின் வளாகத்தில் எங்கள் குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் அனுபவித்த காட்சிகளை சற்று அசைபோட்டுவிட்டு கணேஷ்ஜிக்கு ஒரு அர்ச்சனை செய்து கொண்டு  நீண்ட நாள் நண்பனை சந்தித்த மன நிறைவோடு வீடு திரும்பினோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s