எங்காத்து கொள்ளுப்பாட்டி

DSC06536

போன வாரம் என் அம்மாவின் சதாபிஷேகத்திற்கு பாண்டி போயிருந்தேன். அங்கு என் தங்கையின் பேத்தியை பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்டேன். இரண்டரை வயது தான் ஆகிறது. என்ன பேச்சு என்ன பேச்சு?  எல்லோரையும் பேர் சொல்லித்தான் அழைக்கிறாள்.  என் அம்மாவை கமலா என்றும் என் தங்கையை ராஜி என்றும் அவள் அம்மாவை இந்து என்றுமே அழைத்து பேசுகிறாள்.  ஆனால் அவள் அப்பாவையும் பாட்டியையும் மாத்திரம் பேர் சொல்வதில்லை. ரொம்ப மரியாதையாக பேசுவாள்  ஒரு சின்ன குழந்தைக்கு இத்தனை தெரியுமா என்றிருக்கும்.DSC06535

புகைப்படங்கள் எடுத்தால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். ரொம்ப அழகாக அதற்கு போஸ் கொடுப்பாள். கோலமாவில் மிக அழகாக கோலம் போடுவாள். விட்டல் எப்படி இருப்பான் என கேட்டதற்கு அவள் கொடுத்த போஸ்தான் புகைப்படத்தில் இருப்பது.DSC06631

அவள் அம்மாவிற்கு வேலை விஷயமாக 10 நாட்கள் லண்டன் போக வேண்டி வந்தது.  இவள் 3 மாத குழந்தையாக இருந்தபோது ஒரு முறை  ஒரு வாரம் போய்வந்தாள். ஆனால் இப்போது விவரம் தெரிவதால் அவள் இவளை தாஜா பண்ணி பாட்டிகளிடம் விட்டுவிட்டு போகலாம் என நினைத்து  அவளிடம் ஏதேதோ வாங்கி வருவதாக வாக்களித்தாள். எல்லாவற்றையும் மிக அழகாகக் கேட்டுக்கொண்டு “ அதெல்லாம் எனக்கு ஒன்றும் வேண்டாம் இந்து  எனக்கு நீதான் வேண்டும் இந்தூ…………………” என அவள் கெஞ்சியதைப் பார்க்கவேண்டுமே  கொள்ளை அழகு.

மளிகைக் கடையிலிருந்து சாமான்கள் வந்தால் அவற்றையெல்லாம் எடுத்து வைப்பதில் என் அம்மாவிற்கு மிக அழகாக உதவி செய்வாள். அவளுக்குப் பொட்டுகடலை தின்பதென்றால் கொள்ளைப் பிரியம். அதனை டப்பாவில் கொட்டி வைக்கும்போது என் அம்மா கீழே சிந்திவிட்டால் “ என்ன தலையெழுத்தோ இந்தக் கமலாவிற்கு ஒரு வேலை செய்யத்தெரியாது  இப்படியா கீழே கொட்டுவார்கள்?” என அவள் அலுத்துக்கொள்வது  பார்க்கவும் கேட்கவும் மிக அழகாக இருக்கும்.DSC06533

கைப்பேசியை அவள் இயக்கும் வேகம் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது.  பாட்டு போடுவாள்  எல்லோருடனும் செல்ஃபி எடுத்துக்கொள்வாள். நம்மை அதில் மிக லாவகமாக போட்டோ எடுப்பாள். நிஜமாக இந்தக் கால குழந்தைகள் எல்லாவற்றிலும் ரொம்ப ஸ்மார்ட்டாகத்தான் இருக்கிறார்கள். எல்லோருடனும் ரொம்ப ஒட்டுதலாக இருப்பாள்.

அருகிலிருக்கும் ஒரு பள்ளியில் அவளை சேர்த்திருக்கிறார்கள். ஒரு நாள் அவள் டீச்சர் அவளை முறைத்துப் பார்த்தாள் என அடித்துவிட்டு வந்திருக்கிறாள். அவள் டீச்சர் இந்துவிடம் “ இந்தக் கோபக்காரியை நீங்கள் வீட்டில் எப்படி மேய்க்கிறீர்கள்?’ என கேட்டாளாம்

 எனக்கு மட்டும் சில நாட்களே இருந்ததாலோ என்னவோ ரொம்ப மரியாதைதான் அன்பாக விஜி பாட்டி என அழைப்பாள். பிரிய மனமில்லாமலே ஊர் திரும்பினேன். நான் வந்தபிறகு கூட விஜி பாட்டி தாத்தாவையும் அழைத்துக்கொண்டு பெட்டிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு ஊர் போய்விட்டாளே என சொல்லிக்கொண்டிருக்கிறாளாம்.  தொலைபேசும்போதெல்லாம் என்னை ஊருக்கு வரும்படி அழைக்கிறாள்  இதனால் தானோ குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள்.  இத்தனைக்கும் எங்காத்து கொள்ளுப்பாட்டியின் பெயரை சொல்லவில்லையே  அவள் பெயர்  மோக்ஷிதா மோகன்.  செல்லமாக மோப்பு என எல்லோரும் கூப்பிடுகிறார்கள்.

Advertisements

2 thoughts on “எங்காத்து கொள்ளுப்பாட்டி

  1. உண்மையிலேயே நீங்கள் உங்கள் கொள்ளுப்பாட்டி பற்றித்தான் சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன். இந்தக் காலக் குழந்தைகள் நிஜமாகவே அதி புத்திசாலிகள் தான். என் அக்கா பேத்தியும் இப்படித்தான்!
    அதேசமயம் இந்தக் குழந்தைகள் படிப்பிலும் படு சுட்டியாக இருக்கின்றன.
    நீங்கள் ஆசிரியை என்று தெரியுமோ என்னவோ, உங்களுக்கு அத்தனை மரியாதை!
    குழந்தைக்கு ஆசிகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s