இந்தியாவின் தவபுதல்வன்

abdul_kalam_1

ஏ பி ஜே அப்துல்கலாம் என்ற சகாப்தம் முடிந்து இன்று பத்து நாட்கள் ஆகிவிட்டன.  தனது  முதல் குடிமகனாக இருந்தவரை இழந்து இந்தியத்தாய் இரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறாள் என்பதுதான் உண்மை. கலாம் என்றாலே நம் நினைவுக்கு வருவது முன் நெற்றியில் தவழும் வெள்ளி முடிக் கற்றைகளும் கள்ளமில்லா சிரிப்பும்தான்.  ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு குழந்தைகளையும் மாணவர்களையும் அதிகம் நேசித்த தலைவர் இவராகத்தான் இருப்பார். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தனது கல்வியால், உழைப்பால்,தளராத முயற்சியால், உயரிய பண்புகளால்  இராமேஸ்வரத்திலிருந்து புதுடெல்லி வரை உயர்ந்த இந்த அரிய மனிதர் இன்று நம்மிடையில் இல்லை என்பதை நம்பவே கடினமாக இருக்கிறது.abdul-kalam-2

“ கனவு காணுங்கள்.  தூக்கத்தில் வருவதல்ல கனவு  உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு “ என்ற அவரது வாசகம் அனைத்து இளைஞர்களையும் தட்டியெழுப்பிய தாரகமந்திரம்.  ஆசிரியப் பணியை வெகுவாக  நேசித்தவர் கலாம் அவர்கள்.  குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றபிறகும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பலவகை பல்கலைக்கழகங்களுக்கும் சென்று மாணவர்கள் சந்தித்து உரையாடி அவர்கள் முன்னேற வழி வகுத்தார். இறுதி மூச்சுவரை மாணவச் செல்வங்களுக்காகவே அவர் செலவிட்டார். மேகாலயாவில் மாணவர்களிடையே அவர் உரையாடும்போதே அவரது இறுதி சுவாசம் நின்றது. இன்று கலாம் அவர்கள் நம்மிடையே இல்லையென்றாலும் அவரது நினைவுகளும், அவர் நம்மைக் காணச்சொன்ன கனவுகளை நிறைவேற்றி நமது தாய்த்திரு நாட்டை ஒரு வல்லரசாக மாற்றவேண்டும் என்ற உறுதியும் நம் நெஞ்சில் நீங்காமல் நிலைத்திருக்கும். ஒரு இந்தியக்குடிமகனாக மட்டுமல்லாமல்  ஓர் ஆசிரியையாகவும்  அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s