வாதம் போக்கும் வாத நாராயணன்

delonix-1-150x150

வாத நாராயணன் ……………………. இதற்கு ஆதி நாராயணன்,  வாதமடக்கி , வாதரகாட்சி, வாதரசு, தழுதாழை என பல பெயர்கள் உண்டு.  வாத நோய்களை விரட்டுவதில் வாத நாராயணன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலையை நல்லெண்ணெயில் வதக்கி …… உளுந்து பூண்டு இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லிதழை மிளகாய் உப்பு புளி சேர்த்து துவையலாக அரைத்து வாரம் ஒரு நாள் உணவோடு சேர்த்து சாப்பிட…………..  பேதியாகும். இதனால் வாத நோய்கள் விலகும். மேலும் வேலைப்பளு, அலைச்சல் காரணமாக ஏற்படும் கை கால் வலி உடல் வலி சரியாகும். இதே பிரச்னைகளுக்கு வாத நாராயணன் இலைகளை நீர்விட்டு கொதிக்கவைத்து பொறுக்கும் சூட்டில் வலி உள்ள இடங்களில் ஊற்றினாலே நிவாரணம் கிடைக்கும். வாதப்பிடிப்பு வாய்வுப்பிடிப்பு உள்ள இடங்களில் இதே நீரை ஊற்றி வந்தாலும் பிரச்னைகள் சரியாகும். வீக்கம், கட்டி ஏற்பட்டால் வாத நாராயணன் இலையுடன் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பொறுக்கும் சூட்டில் பூசி வந்தால் பிரச்னைகள் விலகும்.vadha madakki

வாதக்கோளாறு உள்ளவர்கள் கை கால் பிடிப்பு சுளுக்கு உள்ளவர்கள் மற்றும் பொதுவாக எல்லோருமே வாத நாராயணன் இலையை சமைத்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நன்றாக மலம் கழிவதோடு வாதநீர் துர்நீர் எல்லாம் வெளியேறும். மூட்டுவலி மற்றும் வாதக்கோளாறு உள்ளவர்கள் வாத நாராயணன் இலையுடன் முருங்கைக்கீரை  லெச்சக்கொட்டை கீரை எனப்படும் நச்சுக்கெட்ட கீரை சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

Advertisements

2 thoughts on “வாதம் போக்கும் வாத நாராயணன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s