சரணம் பிறந்த கதை

சபரிமலையான் பக்தர்கள் “ சாமியேயேயே சரணமய்யப்பா “ என்று எழுப்பும் ஒலிக்கு காரணக் கதை உண்டு.images

ஐயப்பனின் அவதார நோக்கம் முடிவடைந்தபோது அவர் பந்தள் மன்னன் ராஜசேகர பாண்டியனிடம் “ எனக்கு சபரிமலை மேல் ஓர் ஆலயம் எழுப்பு “ என்று அருளி, ஏதாவது இடர் ஏற்பட்டால் இந்த க்ஷூரிகாயுதம் மன்னனுக்கு உதவும் என்று தனது ஆயுதத்தை மன்னனது உடலில் குப்தமாகப் பொருத்தி ஆலயத்துக்கான இடத்தை அம்பெய்து காட்டிவிட்டு மறைந்தார்.

திருப்பணியைத் துவக்கினான் பந்தள மன்னன். இந்திரன் தமக்கு சொந்தமான ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் பந்தள மன்னனுக்குக் கொடுத்துவிடுவார் ஸ்ரீபூத நாதன் அதற்கு முன்பே இந்த மன்னனை அழித்துவிடவேண்டும் என்று பொறாமை கொண்டு வேடுவன் உருவில் வந்தான். “ மன்னா எனக்கு சொந்தமான வனத்தில் இருந்து வெளியேறு “ என்றான். ராஜசேகர பாண்டியனோ  “ ஹரிஹரசுதனாரின் ஆணைப்படி அவருக்கு ஆலயம் கட்டும் இந்த திருப்பணியில் நீங்களும் இணையுங்கள் வேடுவரே “ என்று அழைக்க சினம்கொண்ட இந்திரன் தனது வஜ்ராயுதத்தை ஏவினான்.

மன்னன் செய்வதறியாமல் கைகளை வானோக்கி உயர்த்திக் கூப்பி “ சாமியேயேயே சரணமய்யப்பா” என்று பெரும் குரலெழுப்பினான். அப்போது அவனது உடலில் மணிகண்டனால் ஒளித்து வைக்கப்பட்ட க்ஷூரிகாயுதம் விர்ரென புறப்பட்டு வஜ்ராயுதத்தை தவிடுபொடியாக்கி இந்திரனை நோக்கி விரைந்தது. இந்திரன் தப்பிக்க பிரம்மன் உமாபதி திருமால் அனைவரிடமும் அடைக்கலத்துக்கு ஓடி இறுதியாக பூத நாதனிடமே சரணடைந்தான். பூத நாதனோ “ ஆயுதத்தை உத்வாஸனம் செய்யும் சக்தி மன்னனுக்கே “ என்று கூறிவிட்டார்.’ayyappa

வஜ்ராயுதம் ஏவப்பட்டதிலிருந்து நடந்த எதையும் உணராத மன்னன் தன்னை மறந்த நிலையில் சாமியேயேயே சரணமய்யப்பா…………………….. என்று விளித்துக்கொண்டிருக்க இந்திரன் தனது சுய உருவில் மன்னன் கால்களில் விழுந்து வணங்கி  தன்னைக் காப்பாற்ற வேண்டினான்.  பந்தள மன்னனும் பூத நாதனை மனதில் வேண்ட அந்த ஆயுதம் சாந்தமடைந்து மீண்டும் மன்னனின் உடலில் பொருந்திக்கொண்டது. இந்திரன் தேவசிற்பியான விஸ்வகர்மாவை மன்னன் கட்டும் சபரிமலைக் கோயில் திருப்பணிக்கு உடனிருந்து உதவும்படி பணிந்து மறைந்தான்.

அன்று பந்தள மன்னன் தன்னைக் காப்பாற்ற வேண்டி தீனார்த்தியாய் கூவி அழைத்த ஐயனின் சரணங்களையே இன்றும் பக்தர்கள் கூவி நலம் பல பெறுகிறார்கள்.

நன்றி    சி ராஜேஸ்வரி    திருப்பதி

Advertisements

2 thoughts on “சரணம் பிறந்த கதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s