தென்னாங்கூர் விஜயம்

DSC06578

ஜூலை 26 ம் தேதி என் அம்மாவின் நட்சத்திர பிறந்த நாள்.  ஜூலை 28 என் அம்மாவின் பிறந்த தேதி.  அதனால் நானும் என் இரண்டாவது தங்கையும் என் கணவருடன் வந்தவாசி அருகிலுள்ள தென்னாங்கூர் அழைத்துச் செல்ல முடிவு செய்தோம்  இந்தக் கோயிலைப் பற்றி முன்பே என் பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்.DSC06587

28ம் தேதி மதியம் இரண்டு மணிக்கு  நாங்கள் நால்வரும் ஒரு கார் அமர்த்திக்கொண்டு கிளம்பினோம். நாலு மணிக்கு தென்னாங்கூர் போய் சேர்ந்தோம். இது மிகவும் சின்ன கிராமம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்று வயல்கள் கண்ணுக்கு விருந்தாக இருந்தது.

DSC06588 அன்று ஆடி மாத ஏகாதசிக்கு [தொலி ஏகாதசி என இது பண்டரிப்புரத்தில் மிக விசேஷம் ]  மறு நாள் துவாதசி அதனால் பாண்டுரங்கனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தியிருந்தார்கள்  மிக அமைதியான அருமையான தரிசனம். தென்னாங்கூர் மதுரை மீனாட்சியின் பிறந்த ஊர் என்பது இம்முறை அங்கு போனபோது அங்குள்ள அர்ச்சகர் சொல்லித்தான் தெரியும்.DSC06605

அங்குள்ள தமலா என்ற அரியவகை மரம் இந்தியாவிலேயே மூன்று இடங்களில்தான் உள்ளன ஒரிசாவிலும் காசியிலும் மற்ற இரண்டு மரங்கள் உள்ளன. அதனை 12 பிரதட்ணங்கள் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை  நாங்களும் பிரதட்ணம் செய்தோம்.DSC06623

அருகிலேயே உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலையும்  வேத நாராயணன் கோயிலையும் தரிசித்துக்கொண்டு இரவு சுமார் ஏழரை மணிக்கு வீடு திரும்பினோம்.  இம்முறை என் பாண்டி பயணம் மிக இனிதாகவும் ஆன்மீகமாகவும் இருந்ததில் மனம் நிறைவடைந்தது.DSC06618

Advertisements

3 thoughts on “தென்னாங்கூர் விஜயம்

  1. மிகவும் நன்றாகப் பராமரிக்கப்பட்ட கோவிலாகத் தெரிகிறது. சுற்றுபுறம் மிகவும் சுத்தமாக இருக்கிறதே. பாண்டுரங்க விட்டலன், ருக்குமாயியுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். அனுமனிடம் இருக்கும் விநயம் நாம் எல்லோரும் கற்க வேண்டிய ஒன்று. இதுவரை போனதில்லை இந்தக் கோவிலுக்கு. புகைப்படங்களும், தகவல்களும் அளித்ததற்கு நன்றி.
    உங்கள் அம்மா ரசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

  2. இந்தக் கோயில் கட்டி ஏழு வருடங்கள்தான் ஆகிறது. மிகவும் தூய்மையாக இருக்கிறது. என் அம்மா தங்கைகள் முன்பே மூன்று முறை பார்த்திருக்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி இங்கு இரவு முழுவதும் பஜனையுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படுமாம் நான் பார்க்க வேண்டும் என என்னோடு அவர்களும் வந்தார்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய கோயில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s