எனது அம்மாவின் சதாபிஷேகம்

DSC06525

ஜூலை 26  2015   என் அம்மாவிற்கு 80 வயது பூர்த்தியாகிறது.  இந்த முறை இதனை நாங்கள் ஐவரும் [ நான் எனது இரண்டு தம்பிகள் இரண்டு தங்கைகள் ] சேர்ந்து கொண்டாட நினைத்தோம்.  சிறு வயதிலேயே எங்கள் தந்தையை நாங்கள் இழந்துவிட்டதால் என் அம்மா 60, 70 என எதையும் கொண்டாட மறுத்துவிட்டார். ஆனால் இதை எப்படியாவது கொண்டாட நினைத்த நாங்கள்  கஷ்டப்பட்டு எங்கள் அம்மாவை சம்மதிக்கவைத்தோம்.  ஆனால் அவர் ஹோமங்கள் எதுவும் செய்துகொள்ள மறுத்துவிட்டார். எனவே நாங்கள் அனைவரும் சேர்ந்து குலதெய்வம் கோயிலான வைதீஸ்வரன் கோயிலுக்கு மட்டும் போய் வருவதென முடிவு செய்தோம்.DSC06480

என் தம்பி தங்கைகள் பாண்டிச்சேரியிலேயே இருக்கிறார்கள் நான் மட்டுமே ஹைதிராபாத்திலிருந்து போக வேண்டும். 22 வருடங்களுக்குப் பிறகு நானும் என் கணவரும் சேர்ந்து [ [இடையில் இருவரும் தனித்தனியாகத்தான் பாண்டி போனோம் ]  25ம் தேதி காலை 10 மணி விமானத்தில் கிளம்பி 11 மணிக்கு சென்னை சென்றோம். அங்கிருந்து டாக்ஸி வைத்துக்கொண்டு மதியம் 2 மணிக்கு பாண்டியை அடைந்தோம்.DSC06431

மறு நாள் காலை 6 மணிக்கு என் அம்மாவுடன்   நாங்கள்  ஐந்து பேரும்  எங்கள் குடும்பத்தினருடன் ஒரு பஸ்ஸில் வைதீஸ்வரன் கோயிலுக்கு கிளம்பினோம்.   வழியில் கொள்ளிடம் அருகில் பஸ்ஸை நிறுத்தி காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டோம். கோயிலை அடைந்தபோது மணி பத்தரை.  எல்லா சன்னதிகளிலும் அர்ச்சனை செய்து கொண்டு  நல்ல தரிசனம் செய்துகொண்டு அங்கிருந்து கிளம்பி திருக்கடவூர் சென்றோம்.  அங்கும் சௌகர்யமாக அர்ச்சனை தரிசனம் முடித்துக்கொண்டோம்.  வரும் வழியில் சீர்காழி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மாலை நாலு மணிக்கு வீட்டை அடைந்தோம்.DSC06500

நாங்கள்  ஐந்து பேரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சேர்ந்து இருந்து பழைய நினைவுகளையெல்லாம் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாக இருந்தது என் அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷமாகவும் 80 வது வயது பிறந்த நாள் பரிசாகவும் அமைந்தது.  அனைவருக்குமே இது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது என்றால் மிகையாகாது.DSC06519

Advertisements

3 thoughts on “எனது அம்மாவின் சதாபிஷேகம்

  1. தாய்க்கு மரியாதையும்,கௌரவமுமளித்து, குலதெய்வகோவிலுக்குச் சென்று, உடன் பிரப்புகளுடன் நல்ல விதமாகக் கொண்டாடியது மிக்க மகிழ்சிக்குறிய விஷயம். சகோதரிக்கு என் அன்பும் , நட்பும். சொல்லவும். அன்புடன்

  2. ஒரு அம்மாவிற்கு இதை விட சந்தோஷம் வேறென்ன வேண்டும்? அவருக்கு எங்களது நமஸ்காரங்களைச் சொல்லுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s