ஜன்னல் சிவன்

கடலூர் அருகிலுள்ள நல்லாத்தூரில் சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் மூலவரை ஜன்னல் வழியாகத் தரிசிக்கிறார்கள்.large_125123676

திரு நாவுக்கரசரால் வைப்புத்தலமாகப் பாடப்பட்ட தலம் நல்லாத்தூர். இங்கு சிவன் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அக்னி சக்தியுடன் விளங்கும் இவருக்கு எதிரில் கல் பலகணி உள்ளது. மூலவரை பலகணி வழியாக தரிசிக்கவேண்டும்  அவர் அக்னி வடிவானவர். அவரிடம் இருந்து வெளிப்படும் ஆற்றலை பக்தர்கள் தாங்க இயலாது என்பதால் பலகணியை உருவாக்கியுள்ளனர். இது அக்னி சக்தியை ஈர்த்து பக்தர்களுக்கு தேவையான அளவு மட்டுமே வெளியிடும் சக்தி கொண்டது. பலகணி வழியே மூலவரைத் தரிசிப்பவர்களுக்கு சூரிய மண்டலத்தில் வசிக்க்கும் யாக்ஞவல்க்யர்  ரைவதர் பைரவர் ஆகிய மகரிஷிகள் தங்களின் நவசக்தியின் சிறு பகுதியையும் அளித்து ஆசி தருவதாக ஐதீகம்.Nallathur Shiva Koil Logo

திரிபுரம் எனப்படும் மூன்று பறக்கும் கோட்டைகளை தாரகாட்சன்  கமலாட்சன் விதுயுன்மாலி என்ற அசுரர்கள் சிவனை நினைத்து தவம் செய்து பெற்றிருந்தனர். ஆனால் இந்தக் கோட்டைகளை நன்மைக்குப் பயன்படுத்தாமல் விண்ணிலும் மண்ணிலும் அதிக நடமாட்டமுள்ள இடத்தில் இறக்கி விடுவார்கள் கோட்டையின் அடியில் சிக்குபவர்கள் இறந்து போவார்கள். தான் அளித்த கோட்டைகளை தவறான வழியில் பயன்படுத்திய  அசுரர்களை சிவன் வதம் செய்தார். அப்போது அம்பாளும் உடன் சென்று சிவனுக்கு உதவினாள். இதனால் திரிபுர சுந்தரி என்று பெயர் பெற்றாள். இந்த அம்பாளே இங்கு காட்சியளிக்கிறாள். இவள் மிகவும் சக்தி மிகுந்தவள் என்பதால் பாதத்தில் ஸ்ரீசக்ர மஹாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்தி அதில் தேக்கப்பட்டுள்ளது. இவளுக்கு அர்ச்சனை செய்து மஞ்சள் குங்குமம் தானம் செய்தால் செயல்பாடுகளில் தடை நீங்கும்.T_500_1190

திரிதையை  திதியும் மக நட்சத்திரமும் சேர்ந்த நாளில்  பலா மரத்தடியில்  பிறந்தவர்கள் எம தர்ம ராஜா. இவர் சொர்ணபுரீஸ்வரருக்கு கட்டுப்பட்டவர். திரிதியை திதியன்று சொர்ணபுரீஸ்வரையும் வழிபட்டு பலாப்பழ தானம் செய்தால் எம தர்ம ராஜா நம் அருகில் நெருங்க அஞ்சுவார்   மார்க்கண்டேயருக்காக எமனை காலால் உதைத்த் காலசம்ஹார மூர்த்தியும் இங்கு இருக்கிறார். G_T1_120

வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகனார் 12 கைகளுடன் மயிலில் அமர்ந்திருக்கிறார். சஷ்டியன்ரு முருகனுக்கு அபிஷேகம் செய்த பாலை குழந்தை இல்லாதவர்கள் பருகினால் விரைவில் மழலை பாக்கியம் கிடைக்கும் நிலப்பிரச்னை தீர முருகனிடம் 108 வெற்றிலை மாலை சூட்டி வழிபடுவது  நன்மை தரும்.

சிவன் ஆனந்த நடனம் ஆடியபோது தேவகணங்கள் ஒலித்த இசையை ஏழு ஸ்வரங்களாக மாற்றியவள் கர்ண விதாயினி சரஸ்வதி. இவள் இங்குள்ள மஹாமண்டப தூணில் சிற்பமாக இருக்கிறாள். சப்தமி  நவமி   தசமி   புதன்கிழமை  புனர்பூசம் நட்சத்திர நாட்களில் கல்கண்டு  படைத்து இவளை வழிபட்டால் இசை ஆற்றல் பெருகும். இங்குள்ள சுந்திரமூர்த்தி  வினாயகர் சுந்தரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். கோயிலை நிர்மாணித்த சங்கு சாயிமுனிவர்களின் திருவுருவமும் உள்ளது.G_T6_120

கடலூரில் ஆங்கிலேய கலெக்டராக இருந்தவர் பகோடா. இவரது மகளுக்கு பார்வை இல்லை. சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டதால் பார்வை கிடைக்கப்பெற்றாள். மகிழ்ந்த கலெக்டர் 1907 ல் சொர்ணபுரீஸ்வரர் கோயிலுக்கு நஞ்சை நிலம் தானம் அளித்ததோடு இங்கிலாந்தில் செய்த மணி ஒன்றையும் கொடுத்தார். மூன்று கி மீ தூரம் வரை ஓசை கேட்கும் இந்த மணி இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

நான் எட்டு அல்லது ஒன்பது வயதாக இருந்தபோது என் அப்பாவிற்கு இந்த ஊரில் மருத்துவமுகாம் ஒன்றில் பயிற்சிமுகாம் இருந்தது. அப்போது என் அம்மா அப்பா தம்பியுடன் சென்று பலகணி வழியாக சிவனை தரிசித்தது ஞாபகத்தில் இருக்கிறது    இக்கோயிலைப் பற்றி  ஆன்மீக மலரில் படித்தபோது நினைவுக்கு வந்தது.

இருப்பிடம்

புதுச்சேரி   கடலூர் ரோட்டில் உள்ள தவளகுப்பத்தில் இருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது

Advertisements

One thought on “ஜன்னல் சிவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s