இது தவறல்ல

download (1)

திருவனந்தபுரம் பத்ம நாபசுவாமி மீது பக்திகொண்ட ஒரு பக்தர் “ பத்ம நாபோ அமரப்பிரபு “ என்று மந்திரம் சொல்வதற்கு பதிலாக “ பத்ம நாபோ மரப்பிரபு “ என்று சொல்லி வணங்கி வந்தார்.  பத்ம நாப சுவாமியே தெவர்களின் தலைவர் என்பது இதன் பொருள். ஆனால் அந்த பக்தரோ பத்ம நாபன் மரங்களுக்கு தலைவனாக இருக்கிறான்” என்பது தான் இந்த மந்திரத்தின் பொருள் போலும் என்று  நினைத்துக்கொண்டு ஒரு அரசமரத்தை தினமும் சுற்றி வந்தார். பண்டிதர் ஒருவர் இதைக் கவனித்து விட்டார்.

“ ஐயா  நீங்கள் உச்சரிப்பது தவறு . பத்ம நாபோ அமரப்பிரபு என்றுதான் சொல்லவேண்டும் எனக்கூறி விளக்கம் அளித்தார். இது நாள் வரை தவறாக உச்சரித்து விட்டதை எண்ணிய பக்தர் வருந்தினார். அதன் பின் திருத்திச் சொல்லத் தொடங்கினார். அன்று இரவு பண்டிதரின் கனவில் வந்த பெருமாள்  வனானி விஷ்ணு  என்று பராசரர் சொன்னது உமக்குத் தெரியாதா/ மரங்களுக்கும் நானே தலைவன். பக்தியோடு அரசமரத்தை பூஜித்த பக்தரின் மேன்மையை நீர் உணரவில்லையே என்று கோபமாகச் சொன்னார். தவறான மந்திரம் சொன்னாலும் தூயபக்தி இருக்குமானால் குழந்தையின் மழலை கேட்டும் மகிழும் தாய்போல் கடவுள்  நம் அன்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்.

Advertisements

One thought on “இது தவறல்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s