ஸ்ரீ நீலமணி துர்கா

Sree Neelamani Durga Ammavari Temple - Pathapatnam

ஆந்திர மானிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டணம் கிராமத்தில் உள்ளது நீலமணி துர்கா தேவி ஆலயம். ஸ்ரீகாகுளம் மற்றும் ஒடிசா மானிலம் கஜபதி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. மிகப்பழமையான பட்டணம் என்று பொருள்படும் பத்தாப் பட்டணம் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் பாதபட்டணம் என்று மருவியது.

sri-neelamani-durgamma-temple-pathapatnamமஹிஷாசுரனை வதைக்கும் பொருட்டு பார்வதி தேவி துர்காவாக ஆவிபவித்து அசுரனை வதைத்து மஹிஷாசுரமர்த்தின்யாகப் போற்றப்பட்டாள். மஹிஷனுடன் போரிடும்போது சும்ப நிசும்பன் ரக்தபீஜன் போன்ற அரக்கர்கள் தோன்றினர். ரக்தபீஜன் என்ற அசுரனனின் ரத்தத்துளியிலிருந்து புதிது புதிதாக அரக்கர்கள் தோன்றிக்கொண்டிருந்தபோது தேவியின் அம்சமாக் பத்ரகாளி ஆவிர்பவித்து அவனை வதம் செய்தாள். அப்போது தேவிக்கு உதவியாக தோன்றிய ஸ்ரீ மஹாகாளியே நீலமணி துர்கா என்ற திரு நாமத்தோடு இக்கோயிலில் அருள்பாலிக்கிறாள்.

neelamani-durga-templeஒரு காலத்தில் சுங்க வம்சத்தைச் சேர்ந்த கஜபதி மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த வரலாற்றுப்பெருமையும் பழைமையும் கொண்ட வயல்வெளிகள் சூழ்ந்த ஓர் அழகிய கிராமம் பாதபட்டிணம். மஹேந்திரகிரி மலையில் உற்பத்தியாகும் வம்சதாரா ஆற்றில் கலக்கும் ஒரு நதியான மஹேந்திரதனயா நதிக்கரையில் அமைந்துள்ளது இந்தத் தலம்.

01_big1992ஆம் ஆண்டு ஆந்திர மானிலத்தின் கஞ்சம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது ஸ்ரீகாகுளம் தோன்றியது. அப்பகுதியை அக்காலத்தில் ஆண்டு வந்த மஹாராஜா ஸ்ரீ கிருஷ்ண சந்த்ர கஜபதி நாராயண் தேவ் பெயரால் கஜபதி மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது. கஜபதி மன்னர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தபோது பாதபட்டிணத்தில் நீலமணி துர்கா தேவி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. மன்னரின் கனவில் தேவி தோன்றி தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு ஆணையிடவே மன்னர் இந்த ஆலயத்தைக் கட்டியதாக புராணம்.

pathapatnam-sree-neelamani-durge-templeகலிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒடிஷா மானிலத்தின் பல பகுதிகள் தற்போதைய ஆந்திர மானிலத்தின் பகுதிகளாக இருந்தன. எனவே ஸ்ரீ நீலமணி துர்கா தேவி ஆலயத்தின் அமைப்பு ஒடிஷா ஆலய அமைப்பு போலவே உள்ளது. ஒடிஷா ஆலயங்கள் போன்றே இந்த ஆலயத்தின் நுழைவாயிலிலும் இரண்டு சிங்கங்கள் காணப்படுகின்றன.

நுழைவாயிலை அடுத்து  கொடிமரத்தின் பீடத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு சிறிய துர்கை விக்ரகத்துக்கு பெண்களே திருமஞ்சனம் செய்து மலர்கள் சூட்டி வழிபடுகின்றனர். அடுத்து உள்ள மஹா மண்டபத்தின் நடுவே பாணம் மட்டுமே உள்ள ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மீண்டும் ஒரு சிறிய துர்கை விக்ரகம் உள்ளது அதற்கும் பெண்களே தேங்காய் உடைத்து நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.  மஹா மண்டபத்தின் வெளிப்புறத்தின் மேலே பல்வேறு தெய்வங்களின் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகியரின் சுதை வடிவங்க கருவறையில் ஸ்ரீ நீலமணி துர்கா தேவி சுதை ரூபமாக வடக்கு  நோக்கி அருள்பாலிக்கிறாள். நாலு கரங்களுடன் அமர்ந்த நிலையில் பின்னிரு கரங்களில் திரிசூலம் டமருகம் முன் வலக்கையில் குறுவாள் இடக்கையில் குங்குமபரணியோடு வெள்ளிக்கிரீடம் ஆபரணங்கள் துலங்க காட்சியளிக்கிறாள்.

neelamanidurga-temple-pathapatnamசாந்தம் தவழும் கண்களும் நெற்றியில் துலங்கும் மூன்றாவது கண் போன்ற பொட்டும் பக்தர்களையும் பரவசப்படுத்தும் காட்சியாகும். கருவறைக்குள் பெண்களே தூப தீபம் காட்டி நைவேத்யம் செய்து வழிபடுவது இத்தலத்தின் சிறப்புல்  ஸ்ரீ நீலமணி துர்கா தேவியின் பின்புறம் கருவறையின் சுவற்றையொட்டி சுதையில் செய்த இன்னொரு துர்கா தேவி விக்ரகம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த  தேவியும் நாலு கரங்களோடு ஏழு தலை நாகம் குடை பிடிக்க பின்னிரு கரங்களில் திரிசூலம் டமருகம் முன் வலக்கை அபய ஹஸ்தம் இடக்கையில் குங்கும பரணி ஆகியவற்றோடு அருள்பாலிக்கிறாள். ஆலய வளாகத்தில் ஸ்ரீ சுப்ரமணியர்  ஸ்ரீ வினாயகர் சன்னதிகளும் உள்ளன.

sree-neelamani-durga-templeதசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகிறார்கள். யுகாதி போன்ற திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு வருகை தருகின்ற பக்தர்கள் தேவியிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்து அவை நிறைவேறியவுடன் கடாலு சமர்ப்பணம் என்ற பிரத்யேக நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.  தென்னம் பூக்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண் பானைகளில் பொங்கல் நிரப்பி அதற்கு மேல் உள்ள தட்டில் ஒரு தீபத்தை வைத்து தேவியின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீ நீலமணி துர்கா தேவிக்கு ஜூன் மாதம் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது திருக்கல்யாணம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

DRPGBC Coconut flower blossom
DRPGBC Coconut flower blossom

நன்றி  தீபம்

Advertisements

One thought on “ஸ்ரீ நீலமணி துர்கா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s