நவகிரஹ லிங்க கோயில்

navagrahas

நவகிரக கோயில் என்றதும் வேலூர் மாவட்டம்  வேலூர் அருகே பொன்னை என்ற கிராமத்தில் அமைந்துள்ள நவகிரக கோட்டை தான் வாசகர்கள் பலருக்கும் நினைவுக்கு வரும். தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள நவகிரக கோயில்கள் திரு நெல்வேலியில் அமைந்துள்ள நவகிரக கோயில்கள்  இப்படி சிந்தனை நீளும். ஆனால் ஒரே இடத்தில் நவகிரகங்களுக்கான ஆலயமாக காண்பது அஸ்ஸாமில்.Navagraha_Set.296235533-640x300

இது மட்டுமல்ல ஆலயமெங்கும் நவகிரங்களுக்கு தனி சன்னதிகள் இருப்பதும் அவற்றை வலம் வந்து வழிபடுவதும் நம் அனுபவம்  அந்தச் சன்னதியில் நவகிரக நாயகர்கள் தனித்தோ  வாகனத்துடனோ  அல்லது தம் தேவியர் சகிதமாகவோ இடங்கொண்டிருப்பார்கள். திருச்சி அருகே உள்ள திருப்பைங்கிளி என்னும் திருப்பைஞ்ஞீலியில் ஒன்பது குழிகளையே நவகிரகங்களாக வழிபடுவது வழக்கில் இருக்கிறது. சில இடங்களில் ஒரே வரிசையாக நேர்க்கோட்டில் நவகிரகங்கள் இருப்பதையும் காண்கிறோம்.Navagraha-temple-Guwahati

மாறாக நவகிரக நாயகர்களை லிங்கத் திருமேனியாக நாம் தரிசிப்பது கௌஹாத்தியில்   அஸ்ஸாம் மானிலத் தலை நகரான கௌஹாத்தியின் தென்பகுதியில் சித்ரசால் மலைத்தொடரின் உச்சியில் அமைந்துள்ளது இந்த நவகிரஹ கோயில்.Guwahati-Navagraha Temple-3

இந்தக் கோயிலில் நவகிரகங்களைக் குறிக்கும் வகையில் ஒன்பது சிவலிங்கங்கள் உள்ளன. மத்தியில் உள்ள சிவலிங்கத்தை சூரியனாகவும் மற்றும் எட்டு திசைகளில் மற்ற கிரகங்களையும் லிங்க வடிவத்திலேயே அமைத்துள்ளார்கள். இந்த ஒன்பது லிங்கங்களும்  அந்தந்த கிரகங்களுக்கு உரிய வண்ணத் துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.Chandra-lingam

நட்சத்திர லிங்கங்கள் என்ற பெயரில் தமிழ் நாட்டில் விருத்தாசலத்தில் உள்ள பழமறை நாதர் திருக்கோயிலில் 27 லிங்கத்திருமேனிகளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். ஒன்பது கிரகங்களுக்கான் லிங்கத்திருமேனிகளாக காண்கிறோம். அபூர்வமான தரிசனம் இது. இந்தக் கோயில் ராஜேஸ்வர்சிங் என்னும் அஸ்ஸாம் மன்னரால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஒரு முறை பூகம்பம் ஏற்பட்டபோது இந்தக் கோயிலின் கோபுரம் சிதிலமடைந்து விட்டது. கி பி 1923-1945 ம் ஆண்டுகளில் மீண்டும் இக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.  \மலையுச்சியில் அமைந்துள்ள இக்கோயிலிலிருந்து பார்த்தால் பிரம்மபுத்ரா நதியில் சூரியன் அஸ்தமிக்கும் காட்சியும் சுற்றியுள்ள பசுமையான மலைத்தொடர்களும் கண்ணுக்கு இனிய விருந்தாகும்  இது வானவியல் ஆராய்ச்சிக்கு உகந்த இடமாகவும் அமைந்துள்ளது.navagraha-temple

செல்லும் வழி

அஸ்ஸாமிலிருந்து தரை மார்க்கமாக செல்லலாம். அருகிலுள்ள விமான தளம் கௌஹாத்தி.  அருகிலுள்ள ரயில் நிலையம்  கௌஹாத்தி.  அக்டோபரிலிருந்து ஏப்ரல் வரையில் உள்ள காலங்களில் பனியின் சீற்றம் குறைந்து காணப்படுவதால் அப்போது செல்லலாம்.

Advertisements

One thought on “நவகிரஹ லிங்க கோயில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s