நியூ[ஸ்]மார்ட்

29F61

இங்கிலாந்தில் வசிப்பவர் விவசாயி டேவிட் சிம்மோன்ஸ். இவர் காலிஃப்ளவர்கள் விளைவிக்கப்படுகின்றன். பாடுவதாகச் சொல்கிறார். மலைப்பாங்கான குளுமையான இடங்களில் காலிஃப்ளவர்கள் விளைவிக்கப்படுகின்றன.. ஒவ்வொரு நாளும் 3 செ மீ அளவுக்கு வளர்கின்றன. அப்படி வளரும்போது தினமும் மெல்லிய ஒலியை எழுப்புகின்றன. இப்படி சத்தம் வந்தால் காலிஃப்ளவர் வேகமாக வளர்கிறது என்று அர்த்தம் என்கிறார் டேவிட். முட்டைக்கோஸ் போன்ற தாவரங்கள் ஆபத்தைச் சந்திக்கும்போது ஒருவித வாயுவை வெளியேற்றுகின்றன. பூச்சிகள் அமரும்போது மெல்லியா ஒலியை எழுப்புகின்றன என்று ஏற்கெனவே ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்கியாளர் பான் தனது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்திருக்கிறார்.download (1)

தேன் அடைகளிலிருந்து உலக வரைபடங்களை உருவாக்கி வருகிறார் சீனாவைச் சேர்ந்த ரென்ரீ என்பவர் பல ஆண்டுகளாகத் தேனி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். ராணித் தேனியின் கட்டுப்பாட்டில்தான் மற்ற தேனீக்கள் இயங்குகின்றன. என்பதால் தேன் கூட்டைத் தனக்குத் தேவையான அளவுக்கு மாற்றி வைத்துவிடுவார். ராணித்தேனீ அந்தக் கோணத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்  போதிய அளவு கூட்டில் மெழுகு நிரப்பப்பட்ட உடன் வேறொரு கோணத்ஹ்டில் கூட்டை மாற்றி வைத்து விடுவார். மறு நாள் அந்தக் கோணத்தில் ராணித்தேனீ நகரும். இப்படி உலக வரை படத்தைத் தேன் கூட்டில் உருவாக்கி விடுகிறார் இவர். உலகிலேயே தேன் கூட்டில் உலக வரைபடங்களை வரையும் கலைஞர் ரென்ரீ மட்டுமே.

download

இந்திய புள்ளி எலி மான்கள் ஓர் அபூர்வ விலங்கினம்  டிராகுலிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த புள்ளி எலி மான்கள்  இந்தியாவில் மட்டுமே உள்ளன. இவை மேற்குத்தொடர்ச்சி மலையில் முண்டத்துறை புலிகள் சரணாலயம், இந்திராகாந்தி தேசியபூங்கா, அமைதி பள்ளத்தாக்கு, பந்திப்பூர் தேசியபூங்கா, குதிரைமூக்கு தேசியபூங்கா. மற்றும் முதுமலை புலிகள் சரணாலயத்தில் இந்தப் புள்ளி எலி மான்கள் பரவலாகக் காணப்படுகின்றன. கிழக்குத்தொடர்ச்சி மலையில் சில இடங்களில் அபூர்வமாக உள்ளன. மித வெப்ப மண்டலக் காடுகளில் 1850 மீட்டர் கடல் மட்டத்துக்கு மேல் மறைந்துகொண்டு மிகுந்த கூச்ச சுபாவத்துடன் வாழக்கூடிய இவை இரவில் மட்டுமே வெளியே நடமாடும். இனப்பெருக்க காலத்தில் மரப்பொந்துகல் பாறை இடுக்குகள் முட்புதர்களில் பதுங்கி வாழும். இவற்றை எளிதில் வேட்டையாட முடியும் என்பதால் மனிதருக்கு உணவாகிவிடுகின்றன. இப்போது புள்ளி எலி மான்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாகப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.download (2)

2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வேளாண் விருதுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர் பேராசிரியர் ஆர். பால்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேளாண்மை மற்றும் வாழ்வியல் அறிவியலுக்கான உயர்கல்வி சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு இந்த விருதினை வழங்குகிறது. பஞ்சாப் வேளான் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியிலலில் இள நிலை யுனிவர்சிட்டி ஆப் விஸ்கான்சின்  மேடிசனில் முது நிலை மிக்சிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பிஎச் டி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழத்தின் உயிரியல் வேளாண் பொறியியல் மற்றும் உணவு அறிவியல் தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார் செப் 20 அன்றுஇந்த விருது வழங்கப்பட உள்ளது.matti-makkonen

20ம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று குறுஞ்செய்தியான எஸ் எம் எஸ் தான். இதைக் கண்டுபிடித்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த மட்டி மெக்கோனன் எஸ் எம் எஸ்ஸின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 63 வயதான் இவர் உடல் நலக் குறைவால் அண்மையில் மறைந்தார். கடந்த 1994 ஆம் ஆண்டு மொபைல் போன் வாயிலாக உலகின் முதல் எஸ் எம் எஸ்  ஐ  நெய்ல்பாப் வொர்த் என்பவருக்கு அனுப்பினார் இவர்.robot-wedding

ஜப்பானில் ரோபோக்களுக்கு செய்து வைத்துள்ளனர். மய்வா டெங்கி என்ற நிறுவனம் இந்த ரோபோக்களை தயார் செய்துள்ளது. இந்த ரோபோக்களில் பெரியதாக எந்திர மனித உருவில் இருக்கும் ஆண் ரோபோவுக்கு புரோயிச் என்றும் ஜப்பான் பொம்மை வடிவத்தில் இருக்கும் பெண் ரோபோவுக்கு யுகிரின் என்றும் பெயரிட்டு உள்ளனர். பெண் ரோபோவுக்கு ஜப்பானிய மணப்பெண் போலவே பக்காவாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொண்டன. கேக் வெட்டி  ஆடல் பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.

நன்றி  பத்மினி பட்டாபிராமன்    மங்கையர் மலர்

Advertisements

One thought on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s