திரிபுர சுந்தரி

Tripura_Sundri_1553

திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு பகுதியில் இருக்கும் மானிலங்களுள் ஒன்று. இயற்கை எழில் தெய்வீகம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் தலை நகர் அகர்தாலா. இதற்கு முன்னால் தலை நகராக இருந்த இடம் உதய்பூர். முக்கியமான கோயில்கள் அனைத்தும் இங்குதான் உள்ளன. நிறைய குளங்களும் உள்ளதால் ஊரே பசுமையாக உள்ளது.

kalyansagar-lake-tripura-sundari-templeஉதய்பூர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திரிபுராவின் தலை நகராக இருந்தது.  ஆனால் சுமார் இரண்டரை  நூற்றாண்டுகளுக்கு முன்னால் இதன் தலை நகரம் அகர்தாலாவுக்கு மாற்றப்பட்டது. இதனால் உதய்பூரின் முக்கியத்துவம் குறைந்தது  இந்த ஊரின் பழைய பெயர் ரங்கமதி. உதய் மாணிக்ய என்ற அரசர்தான் இதன் பெயரை உதய்பூர் என்று மாற்றினார். தலை நகராக இருந்ததாலோ என்னவோ பல கோயில்கள் மாடங்கள் குளங்கள் என்று கட்டப்பட்டுள்ளன. அவற்றின் பொலிவு இன்னும் குறையவில்லை.

downloadஇந்த ஊரின் மிக முக்கியமான தலம் திரிபுரசுந்தரி அல்லது மாதா பாரி கோயில். பிரதானமான கோயிலும் அதுதான்.  இதன் முக்கியத்துவம் மதச் சார்புடையதும் வரலாற்றுப் புகழ் பெற்றதுமாகும். இந்த மானிலத்துக்கு பெயர் வரக் காரணமாகவும் இந்தக் கோயில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இது புனித தலமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இங்கு குடியிருக்கும் தெய்வம் காளி. இத்தலம்  51 சக்தி பீடங்களுள் ஒன்றாக வழிபடப்படுகிறது. திரிபுர சுந்தரி என்று பெயர் பெற்றிருக்கிறாள். புராணங்களின்படி சதி தேவியின் வலது கால் இங்கே விழுந்ததாம். ராஜா தன்ய மாணிக்யா என்பவர் கி பி 1501 ல் இந்தக் கோயிலைக் கட்டினார்.

tripura-sundari-templeகோயில் குளம் கல்யாண் சாகர் கோயிலின் பின்புறம் உள்ளது. உயரமான இடத்தில்தான் ஆலயம் அமைந்துள்ளது. படிகள் ஏறிச் செல்லவேண்டும். மேற்கு முகமாக அமைந்துள்ளது கோயில். பிரதான வாயில் மேற்கு எனினும் வடக்கு புறத்தில் சிறிய வாசல் உள்ளது. கோயில் சிவப்பு நிறத்தில் கும்பாச்சியாக ஏதோ பெரிய கேக் போல தோன்றுகிறது. கருவறை சதுர வடிவில் வங்காள பாணியில் கட்டப்பட்ட குடிலை ஒத்துள்ளது.

00P1zlYwகோயிலின் வெளிப்புற பரிமாணம் நாற்கோணமாக அமைந்து ஆமையைப் போலுள்ளது. அதனால் இந்தக் கோயிலை கூர்மபீடம் என்றும் அழைப்பதுண்டு. உள்ளே இருக்கும் கருவறை வட்ட வடிவமாக கூரையை போலவே உள்ளது. இதைப்போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது அரிது. கீழே வங்காள பாணியில் இருந்தாலும் மேலே குவி மாடம் புத்தர் ஸ்தூபியை ஒத்துள்ளது. கோயிலின் பழைய ஓவியங்களின் மூலம் முன் காலத்தில் கருவறையின் முன் நாட்டிய மண்டபம் அல்லது பிரார்த்தனை மண்டபம் அமைந்திருந்தது. பின் அது இடிக்கப்பட்டு 1903-04 ஆண்டுகளின்போது இப்போதிருக்கும் மண்டபம் நிறுவப்பட்டது. இதில் ஒரியா பாணியின் கட்டுமானம் மிகுதியாகத் தென்படுகிறது. ஒரு ஓரத்தில் மேடை போன்ற அமைப்பு அதுதான் பலி பீடம். பெரிய விழா சமயங்களில் ஆடு போன்ற மிருகங்கள் பலியிடப்படும் என்கிறார்கள்.

deity-maa-kali-tripura-sundari-templeஅம்மன் விக்ரகம் நாக்கை துருத்திக்கொண்டு நிற்கிறது. உரை கல்லினாலான இந்தச் சிலை கருஞ்சிவப்பு நிறத்திலுள்ளது.  இது ஒரு கல்லினாலான மேடையின் மேல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள வலது கை வர முத்திரையையும் கீழே உள்ள வலது கை அபய முத்திரையையும் காண்பிக்கிறது.

மேலே உள்ள இடது கை ஆயுதத்தையும் கீழே உள்ள கை அரக்கனின் தலையையும் தாங்கியுள்ளது. தேவி ஜடாமகுடம் கொண்டிருக்கிறாள். வெட்டப்பட்ட 13 தலைகளை மாலையாக அணிந்துள்ளாள். முகம் நீள வட்டவடிவமாக சிறிய சப்பை மூக்குடன் உற்று நோக்கும் கண்களுடனும் திகழ்கிறாள். முழு தோற்றம் கொஞ்சம் அச்சுறுத்துவதாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இதன் கம்பீரமான அழகு வருணிக்க இயலாது. இந்த தேவி இந்த அவதாரத்தில் சோரோஷி [ 16 வயது மங்கை ] என்று கருதப்படுகிறாள்  பக்கத்திலேயே காளியும் சிறிய பிரதி பிம்பமும் உள்ளன. மன்னர்கள் போர் மற்றும் வேட்டைக்கு செல்லும்போது வணங்குவதற்காக கூடவே எடுத்துச் செல்வார்களாம். கோயிலின் மற்ற வாயில் வழியாக வெளியே வந்தால் தடாகம். நீரில் மீன்களும் ஆமைகளும் சுதந்திரமாக விளையாடுகின்றன.  குளுகுளுவென்ற அந்த சூழல் மனதை வருடுகிறது.

dwali210808இங்கே நடக்கும் மிகப் பெரிய வைபவம் தீபாவளிதான். அப்போது ஒரு பெரிய சந்தையும் இங்கு கூடும். கோயிலில் உற்சவங்களும் உண்டு. அதைக் காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர். தினம் அம்மனுக்கு நித்ய கால பூஜையும் ஆரத்தியும் நடைபெறுகின்றன.

செல்லும் வழி   அகர்தாலாவிலிருந்து 55 கிமீ  பேருந்து வசதி உண்டு

நன்றி    ஜி பிருந்தா   தீபம்

Advertisements

2 thoughts on “திரிபுர சுந்தரி

  1. திரிபுரா பெயர்க் காரணமும், அந்த மாநிலத்தின் பெருமைகளையும் தெரிந்து கொண்டேன். இங்கெல்லாம் போக வேண்டுமென்ற ஆவல் எழுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s