எல்லோருமே என் குழந்தைகள் தான்

mahaveer-jain

இளவரசராக இருந்த மஹாவீரர் துறவியானார். தியானத்தில் ஆழ்ந்த அவருக்கு வெயிலோ மழையோ எதுவும் தெரியவில்லை. எப்போதாவது கண் விழித்தால் இரக்கப்பட்ட சிலர் உணவளித்தனர். இதைக் கேள்விப்பட்ட மஹாவீரரின் மனைவி யசோதை மனம் வருந்தினார். தங்கள் அன்பு மகள் பிரியதர்ஷினியைப் பார்த்தால் அவரது துறவு எண்ணம் மாறும் எனக் கருதி மகளுடன் காட்டுக்கு வந்தார்.

“ சுவாமி எங்களைப் பிரிந்து  வந்தது நியாயமா? உங்களை விட்டால் வேறு யார் எங்களுக்கு இருக்கிறார்கள்?” என அழுதார். மஹாவீரரோ “ யசோதா உன்னைவிட சிறந்தவர் உலகில் யாருமில்லை. ஆனால் இப்போதுதான் ஆத்மாவை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்றார்.

“ என் மீது  அன்பு இல்லாவிட்டாலும் குழந்தைக்காகவாவது வீட்டுக்கு வாருங்கள் “ என்று கதறினார். “ யசோதா எல்லா உயிர்கல் மீதும் அன்பு கொண்டிருக்கிறேன் இந்த உலகமே இன் குடும்பம்  எல்லா குழந்தைகளும் எனக்கு பிரியதர்ஷினிகள் தான் “ என்று சாந்தமாகக் கூறினார். தன் கணவரின் உறுதியான மன நிலை யசோதைக்கு புரிந்தது. மகளுடன் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

Advertisements

2 thoughts on “எல்லோருமே என் குழந்தைகள் தான்

  1. எல்லாம் துறந்தவர் பாசத்தையும் துறந்துவிட்டார். அதனால் தானே ‘மஹா’ வீரர் ஆனார்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s