தலக்காடு வைத்தீஸ்வரர்

அடர்ந்த காடு ஒன்றில் வேட்டையாடச் சென்றார்கள் இரு வேடர்கள். விலங்கு ஏதாவது சிக்குமா என்று கண்ணிவைத்து காத்திருந்த அவர்கள் கண்களில் பட்டது ஓர் அபூர்வ காட்சி.download

அந்த வனத்தின் நடுவே இருந்த ஒரு பெரிய மரத்தின் முன் சில யானைகள் கூடியிருந்தன. வழக்கமாக யானைகள் கூட்டமாகவே இருக்கும் என்பதால் முதலில் அதை சாதாரணமாகவே நினைத்த அவர்கள் கொஞ்ச நேரம் அதையே உற்றுப்பார்த்தபோது விஷயம் புரிந்தது. அதே யானைக்கூட்டம் அங்கே சும்மா நிற்கவில்லை. அந்த பெரிய மரத்தை வலம் வந்து வணங்கிக்கொண்டிருந்தன. பார்த்த காட்சி முதலில் பரவசத்தை ஏற்படுத்தினாலும் சற்று நேரத்திலேயே அந்த வேடர்களுக்கு வேறொரு எண்ணம் தோன்றியது.

இவ்வளவு யானைகள் சேர்ந்து வழிபடுகின்றன என்றால் அந்த மரத்தில் ஏதோ ஒரு பெரும் சக்தி இருக்கவேண்டும். அதனால் அந்த மரத்தை வேட்டி தங்கள் இருப்பிடத்திற்கு எடுத்துப்போய்விட வேண்டும். இந்த எண்ணம் வந்ததும் உடனடியாகச் சென்று அந்த மரத்தை வெட்ட முயற்சித்தனர். அப்போது அதிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கவே அதிர்ந்து போனவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அப்போது ஓர் அசரீரி எழுந்தது. சிவபெருமானின் அம்சம் அந்த மரத்தில் இருப்பதாகவும் அருகே உள்ள மூலிகையைப் பறித்து அதன் சாறைப் பிழிந்து பூசுமாறும் கூறியது. வேடர்களும் அப்படியே செய்ய குருதி வடிவது நின்றது.2601796665_cb772ecbd0_b

தனக்குத் தானே சிகிச்சை அளித்துக்கொண்ட ஈஸ்வரன் வைத்தீஸ்வரன் என்ற திரு நாமம் கொண்டு அங்கேயே கோயில் கொண்டார்.  தலக்காடு என்ற அந்த திருத்தலத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன். இத்தலத்தில் ஹொய்சாளர்களின் கட்டடக்க்லை பாணியில் விஜய நகர பேரரசின் தொடக்கக்காலத்தில் வைத்தீஸ்வரனுக்கு அமைக்கப்பட்ட ஆலயமே இப்போது நாம் தரிசிப்பது.Vaidyeshvara_Temple,_a_profile_at_Talakad

இத்தலத்தில் பிறந்த விஜய நகர பேரரசைச் சேர்ந்த அமைச்சர் மாதவர் என்பவர் 1360ல் கட்டிய ஆலயமிது. ஹொய்சாளர்களின் கோயிலைப் போன்று நட்சத்திர வடிவ பீடம் மீது கட்டப்பட்டுள்ளது. முக மண்டபத்தைக் கடந்தால் நவரங்கா சுகனாசி மற்றும் கருவறை காண்கிறோம். கருவறையில் லிங்க ரூபத்தில் வைத்தீஸ்வரர் தரிசனம் கண் குளிரக் கிடைக்கிறது. நவரங்கா மண்டபத்தின் மேற்கூரையில் மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். முக மண்டபம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சிகரம் திராவிடக் கட்டடக்கலை பாணியில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறச் சுவரில் சூரியன் பிரம்மன் லக்ஷ்மி வீரபத்ரன் சிற்பங்களைக் காணலாம். மனோன்மணித் தாயாரின் சன்னதி தனியே பிராகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பக்த கண்ணப்பன் ஆதிசங்கரரின் காலைக் கவ்விய முதலை சிற்பம்  அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தில் காணப்படும்  துவாரபாலகர்களின் சிற்பங்கள் கர்னாடகவிலேயே மிகப் பெரியது. இத்தலத்தில் கோயிலே மிகப்பெரியது.

செல்லும் வழி   மைசூரிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தலக்காடு.

நன்றி   சமாத்மிகா

Advertisements

3 thoughts on “தலக்காடு வைத்தீஸ்வரர்

  1. தலக்காடு வைத்தீஸ்வரர் கோவில் பற்றி நான் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. பயனுள்ள தகவல்.

  2. மிகவும் அழகான கோவில் இது. இங்கு ஒரு ரங்கநாதர் சந்நிதியும் இருக்கிறது. ஒருமுறை போய்வந்திருக்கிறேன். காவிரி வெகு அருகில் ஓடுகிறது. கண்ணுக்கு இனிமையான இடம் இது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s