அர்ச்சனை மூலிகை

பூஜைக்கு உகந்தவை அருகம்புல், வில்வம், துளசி,வேப்பிலை, எலுமிச்சை, நறுமணமலர்கள் மற்றும் பல.

அருகம்புல்  indian_herbal_medicine6

தேவர்களைக் காக்கும்பொருட்டு வினாயகர் பெருமான் கொடியவனாகிய அனலாகரனை விழுங்கிவிட்டதால் அவர் வயிற்றில் சூடு அதிகமாகிவிட்டது. அதனால் தேவர்கள் அனைவர் வயிற்றிலும் கடும் கொதிப்பு உண்டானது. அனலைத் தணிக்க என்ன செய்தும் பலனில்லை. அப்போது அங்கு வந்த முனிவர்கள் ஒவ்வொருவரும் 21 அருகம்புற்களை வினாயகருக்குச் சாத்தினர். உடனடியாக வினாயகரின் திருமேனி குளிர்ந்துவிட்டது. அனைவரின் வயிற்றிலும் கொதிப்பு நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டது. அன்று முதல் கால அனலப்பிரசமர் என்று பெயர் பெற்றார் வினாயகர்.

சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருப்பவர்கள் வினாயகருக்கு நறுமண திரவியங்களால் அபிஷேகித்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. ஆரோக்கியம் பெற உடல் கொதிப்பு தணிய நாமும் அருகம்புல் சாறு பருகலாம்.

வில்வம்Bel-11

சிவபெருமான் அசுரவதம் செய்ய நெற்றிக்கண்ணைத் திறந்ததால் அந்த வெப்பம் அகில உலகையும் தாக்கியது. அவரின் வெப்பத்தைத் தணிக்க குளிர்ச்சியான வில்வம் கொண்டு தேவர்கள் அர்ச்சித்தனர். சிவபெருமான் குளிர்ந்தார். வில்வம் பித்த மயக்கம் வாய் குழறுதல் போன்றவற்றை போக்கவல்லது. உடலுக்கு வலுவை தரக்கூடியது.

துளசிht1464

திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டவர். துளசியால் அர்ச்சனை செய்வதும் துளசி மாலை சாத்துவதும் திருமாலுக்கு உகந்தவை. துளசியை இரவு நேரம் செவ்வாய் வெள்ளிக்கிழமை ஏகாதசி போன்ற நாட்களில் பறிக்கக்கூடாது. துள்சியால் அர்ச்சனை செய்வது நான்கு லட்சம் நமஸ்காரம் செய்த பலனைத் தரும். ஒரு முறை அர்ச்சித்த துளசியை ஜலத்தால் அலம்பிவிட்டு அர்ச்சிக்கலாம். நிர்மால்ய தோஷம் துளசிக்குக் கிடையாது.

வேப்பிலைqb1

மாவிலை போன்றே வேப்பிலையும் சிறந்த மின்கடத்தி  வீட்டுக்கு முன் வேப்பமரம் இருந்தாலோ வேப்பிலை சொருகி வைத்தாலோ தீயகிருமிகள் உள்ளே வராமல் தடுத்துவிடும். வேப்பிலை மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. அம்மனுக்கு மிகவும் உகந்தது.

எலுமிச்சை1

தீய சக்தி  திருஷ்டி முதலியவற்றை தடுக்கும் சக்தி உடையது. எலுமிச்சை மந்திர சக்திகளை கிரகிக்கும் தன்மையுடையது. துர்கைக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பதும் எலுமிச்சை தீபத்தை ராகு காலத்தில் ஏற்றி வைத்து வழிபடுவதும் சிறந்த நற்பலன்களை அளிக்கும். நம் முன்னோர்கள் மிகச்சிறந்த ஞானிகள் அவர்களது அனுபவமே நம் அனுகூலம். அவர்கள் செய்த ஒவ்வொரு சடங்கும் சம்பிரதாயமும் விஞ்ஞானமே  கண்டு வியக்கும் மெய் ஞான ரகசியங்கள் எனவே பண்பாட்டை பாரம்பரியத்தை போற்றி பாதுகாப்போம்.

நன்றி   ப்ரவீணா அருண்.

2 thoughts on “அர்ச்சனை மூலிகை

  1. எல்லா மூலிகைகளின் அருமைகளையும் நன்றாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s