சனியன்று சமையலுக்கு விடுதலை

cane-chair

ஏதோ பேச்சுவாக்கில் நாள் முழுவதும் புழுக்கத்தில் நின்று சமைத்தால் தெரியும் என்று சொன்னதை   என் பெண்ணும் பிள்ளையும் சவாலாக எடுத்துக்கொண்டு நாளை முழுவதும் நீ சமையல் கட்டுக்கே வரவேண்டாம்  நாங்களே எல்லாம் செய்து கொள்கிறோம் என்று சொன்னது எனக்கும் நல்லதாகவே தெரிந்தது.

DSC08451

என் பெண் திருமணம் செய்து கொண்டது திருநெல்வேலி குடும்பத்தில்  அதனால் அங்கு போனபிறகு அவர்கள் சமையலை மிக நன்றாக கற்றுக்கொண்டு விட்டாள். இன்று காலை இருவரும் களம் இறங்கினார்கள்  என் பிள்ளை கறிகாய்கள் நறுக்கிக் கொடுக்க  என் பெண் சமைத்து  காலைச் சிற்றுண்டியையும் தயார் செய்தனர்.

DSC08445

காலை எட்டரை மணிக்கு சூடான  வெஜிடபல் ஊத்தப்பம்  பொடியுடன்  பரிமாறப்பட்டது.  பிறகு  காலை 10 மணிக்கு புதினா தேனீர்.   ஒரு நாள் எந்த வேலையும் செய்யாமல்  உட்கார்ந்து சாப்பிடுவது ரொம்ப சுகமாகத்தான் இருந்தது.

DSC08444

மதியம் ஒரு மணிக்கு  கோஸ் கூட்டு, தக்காளி இஞ்சி   ரசம், சேப்பங்கிழங்கு பொரியல்,  வெந்த சாறு  [ இது திரு நெல்வேலி சமையலில் கூட்டுக்கு தொட்டுக்கொள்ள செய்யப்படும் தாளித்த தயிர் பச்சடி ] என சூடாக அமர்க்களமான சாப்பாடு.

DSC08447

சாப்பாட்டுக்குப் பின் சுகமான ஒரு தூக்கம் என இன்று சமையல் கட்டுக்குள் போகாமலே காலம் கழித்தது ரொம்ப சுகமாகவே இருந்தது என்பது தான் நிசர்னமான உண்மை.

DSC08448

One thought on “சனியன்று சமையலுக்கு விடுதலை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s