ஆஹா தகவல்

poleமுதன்முதலில் தபால்களைக் குதிரைகளில் எடுத்துச் சென்று பட்டுவாடா செய்தனர். அப்படி செல்பவர்கள் வழியில் ஆங்காங்கே ஓய்வு எடுத்துக்கொண்டு சென்றார்கள். அந்த இடங்களில் கம்பங்கள் [ போஸ்ட் ] நடப்பட்டு இருக்கும். அதனாலேயே தபாலுக்கு போஸ்ட் என்ற ஆங்கிலப் பெயர் ஏற்பட்டதாம்.

download (3)மேகாலயாவில் உள்ள ஓர் அழகான சிறிய கிராமம்தான் மவுலி நாங்க்   ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமம் என்று பெயர் பெற்றுள்ளது.  ஷில்லாங்கிலிருந்து 90 கிமீ தொலைவில் இருக்கின்ற இந்த கிராமத்தில் விவசாயம்தான் [ வெற்றிலை   பாக்கு ] முக்கியத் தொழில் இந்த கிராமத்தில் கல்வியறிவு நூறு சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராமத்தை இறைவனின் தோட்டம்     God’s Own Garden  என்று சொல்வதுண்டு.download

மனிதனின் இமைகள் ஆண்டிற்கு சாராசரியாக 4200000 முறை துடிக்கின்றன. மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சராசரியாக 60000 மைல்கள் அதாவது 96540 கிமீ தூரம் பயணிக்கிறது. 24 மணி நேரத்திற்குள் மனிதன் சராசரியாக 23040 முறை  சுவாசிக்கிறான்.images

கைவிரல் நகங்கள் கால்விரல் நகங்களைவிட மிக வேகமாக வளர்கின்றன. கைவிரல் நகங்கள் வளரும் வேகத்தைப் பொருத்துத்தான் முடிவளரும்  வேகம் இருக்கும். காரணம் இரண்டும் ஒரே செல்களைக் கொண்டவை.download (1)

தீயதை பார்க்காதே  கேட்காதே பேசாதே  என்பதை காட்டும் மூன்று குரங்கு பொம்மைகளைப் பார்த்திருப்போம். அந்த குரங்குகளின் பெயர்கள் என்ன தெரியுமா?  தீயதை பார்க்காதே என்ற குரங்கின் பெயர் மிஜாரு  தீயதைக் கேட்காதே என்ற குரங்கின் பெயர் கிகஜாரு  தீயதைப் பேசாதே என்ற குரங்கின் பெயர்  இவஜாரு ஆகும்.r3

குத்துவிளக்கின் ஒவ்வொரு பாகத்திலும் இறைவடிவம்  உள்ளதாகக் குறிப்பிடுவர். குத்துவிளக்கின் தாமரை வடிவான ஆசனம் பிரம்மாவையும்  நீண்ட தண்டு திருமாலையும்  நெய் ஏந்தும் அகல் ருத்ரனையும் திரிமுனைகள் மகேஸ்வரனையும் நெய் நாதத்தையும் சுடர் திருமகளையும் பிழம்பு கலைமகளையும் ஜோதி பிரம்ம சக்தியையும் குறிக்கின்றன.download (2)

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் லவங்கப்பட்டை மருத்துவ குணம் நிறைந்தது. சளி  இருமல் உடல் பருமன் சர்க்கரை நோய் பல் வலி  மூட்டுவலி தசைவலி இரத்த அழுத்தம் புற்று  நோய் போன்ற நோய்களுக்கும் ஞாபகத்திறன் அதிகரிக்கவும் பயனளிக்கக்கூடியது. அதனால் இதனை சமையலில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.Johnamacdonaldfuneraltrain

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் மும்பையில் உள்ள போர்பந்தர் என்ற இடத்திலிருந்து கிளம்பி 34 கிமீ தொலைவில் உள்ள தானே என்ற இடத்தை 1853 ம் ஆண்டு  ஏப்ரல் 16ம் நாள் சென்றடைந்தது. இந்த ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இருந்தன. இந்த ரயிலை ஓட்ட சாஹித் சிந்த் சுல்தான் என்ற என்ஜின்கள் [ locomotives ] பயன்படுத்தப்பட்டன.muscles-in-the-human-body

சித்தர்களின் கருத்துப்படி மனித உடலில் மொத்தம் 72000 நரம்புகளும் 240 எலும்புகளும் சருமத்தில் மேற்பகுதியில் மூன்றரைக் கோடி மயிர்த்துவாரங்களும் உள்ளன. இந்த நரம்புகளில்  நம் கண்ணுக்குப் புலப்படுவது 7200 ஆகும்  இவற்றுள் மிக முக்கியமானவை வாத நாடி  பித்த நாடி  கப நாடி ஆகியவையாகும். இதைக் கொண்டுதான் அவர்கள் நோயைக் கண்டுபிடித்தார்கள்.download

நாம் கணிதத்தில் பயன்படுத்தும் = என்ற குறியீட்டை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் ரெகார்டு என்ற கணிதவியலாளர். இவர் 1557ம் ஆண்டு இந்த சமம் == எனப்படும் குறியீட்டை இவ்வளவு நீளமாக முதலில் இயற்கணிதத்தில்  [ algebra ] பயன்படுத்தினார். நீளமாக இருந்ததால் 1700 களில் இக்குறியீட்டை சிலர் .ii. இப்படி பயன்படுத்தினர். அதுவும் சிரமமாக இருந்ததால் இன்றைக்கு இருக்கும் = இந்த சிறிய வடிவத்துக்கு மாற்றியிருக்கிறார்கள்

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s