அட்சய திரிதியை தானம்

large_104230950

தர்ம குணம் படைத்த மன்னன் போஜனிடம் விவசாயி ஒருவர் மகளின் திருமணத்திற்கான பணம் பெற தலை நகருக்கு புறப்பட்டார். வழியில் சாப்பிட ரொட்டி கட்டிக்கொண்டார். “ கடவுளே திருமணத்திற்கு வேண்டிய அளவு பணத்தை மன்னர் தர வேண்டும்” என வேண்டியபடியே சென்றார்.

வழியில் பசியெடுக்கவே ஒரு குளக்கரையில் அமர்ந்து ரொட்டியை கையில் எடுத்தார்.  மனதிற்குள் “ இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி “ என்றார். அப்போது ஒரு நாய் அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது. இரக்கப்பட்ட அவர் ஒரு ரொட்டியை வீசினார். ஒரே விழுங்கலாக உள்ளே தள்ளிய நாய் மீண்டும் ஆவலுடன் பார்த்தது. அத்தனை ரொட்டியையும் கொடுத்துவிட்டார்.

ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போயிடும்/ ராஜா அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால் பிரஜையான நாமும் முடிந்ததை செய்வது தானே முறை என தனக்குள் சொல்லிக்கொண்டார். பசியைப் பொறுத்துக்கொண்டு தலை நகரை அடைந்தார். அங்கிருந்த தர்மசத்திரத்தில் சாப்பிட்டார். மன்னனை சந்தித்து தான் வந்த விஷயத்தை தெரிவித்தார்.

போஜன் அவரிடம் “ என்னிடம் தர்மம் கேட்டு வந்துள்ளீர்களே நீங்கள் ஏதாவது தர்மம் செய்திருந்தால் சொல்லுங்கள்  அதை நிறுக்கும் தராசு என்னிடம் இருக்கிறது. அது எந்த அளவு எடை காட்டுகிறதோ அந்த அளவுக்கு தங்கம் வாங்கிக்கொள்ளலாம் “ என்றான்.

ST_20150421151806382353“ தர்மம் செய்யும் அளவு பணம் இருந்தால்  நான் ஏன் உங்களிடம் வரப் போகிறேன்? வழியில் நாய் ஒன்றுக்கு உணவு அளித்தேன். அத/ற்கு ஈடாக உங்கள்  சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டேன்  எனவே நான் எதுவும் பெரிதாக தர்மம் செய்யவில்லை “ என்று அடக்கமாக சொன்னார் விவசாயி. போஜன் தராசைக் கையில் எடுத்தான். ஒரு தட்டில் விவசாயி செய்த தர்மத்தையும் மறு தட்டில் தங்கத்தையும் வைக்கச் சொன்னான். கஜானாவில் இருந்த தங்கம் முழுவதும் வைத்தும் கூட தராசு சமமாகவில்லை. வியந்த மன்னன் என்னை சோதிக்க வந்திருக்கும் தாங்கள் யார்? என்றான்.

“ மன்னா நான் ஒரு விவசாயி என்னைப்பற்றி சொல்லுமளவு வேறு எதுவுமில்லை.” என்றார் பணிவுடன். அப்போது தர்மதேவதை அங்கு தோன்றினாள். “ மன்னா தராசில் நிறுத்துப் பார்ப்பது அல்ல தர்மம். கொடுத்தவரின் மனமே அதன் அளவுகோல். இவர் மனம் மிகவும் பெரியது அதனால் நீ எவ்வளவு பொன் வைத்தாலும் தராசு முள் அப்படியே தான் இருக்கும் அவர் என்ன கேட்டு வந்துள்ளாரோ அதைக் கொடு போதும்” என்றாள்.

இதை ஏற்ற மன்னனும் விவசாயிக்கு வேண்டிய அளவு தங்கம் கொடுத்து வழியனுப்பினான். அட்சய திரிதியை நன்னாளின் நீங்களும் முடிந்த அளவு தர்மம் செய்து தலைமுறைக்கு புண்ணியம் சேருங்கள்

நன்றி ஆன்மீக மலர்

Advertisements

One thought on “அட்சய திரிதியை தானம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s