விசாகப்பட்டினம் விஜயம்

e-simhachalam-a

அன்னவரம் வரை திரிந்த அலுப்பு தீர நன்றாகத் தூங்கி 5ம் தேதி காலை விசாகப்பட்டினத்தில் கண் விழித்தோம்.  இது ஆந்திர பிரதேசத்திலேயே மிகப் பெரிய நகரம்.  வைசாக் [vizag] என சுருக்கமாக அழைக்கப்படும்  நாங்கள் எழுந்து தயாராகி சுமார் 6.30 மணிக்கு சிம்மாச்சலம் நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.   சிம்மாச்சலம் என்பது சிங்கம் இருக்கும் குன்று என்று பொருள் பெறும்  இங்கு ஆந்திராவின் புகழ்பெற்ற  வராக நரசிம்மர் கோயில். உள்ளது.    இது வைசாகிலிருந்து  சுமார் 18 கிமீ தூரத்தில் உள்ளது.  7 மணிக்கெல்லாம் கோயிலை அடைந்தோம்.  15 நிமிடத்தில் மிகவும் அருமையான தரிசனம்.e-simhachalam

இந்தக் கோயில் ஒரியா மற்றும் சாளுக்கிய வம்சத்தினரின் கட்டடக்கலையில் உள்ளது. ஒரிசா  ஆந்திரப்பிரதேஷ் தெலுங்கானா மானிலம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மானிலங்களிலிருந்தும் பெருமளவில் பக்தர்கள் இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். இங்கு கருவறையில் மூர்த்தி
ஒரு சிவலிங்கம் முழுவதும் சந்தனத்தால் மூடப்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. .  ஹிரண்யகசிபுவை வதம் செய்து நின்ற உக்கிரமூர்த்தி  நரசிம்மரை சாந்தப்படுத்த சந்தனக்காப்பு அணிவிக்கப்பட்டது என்றும்  வருடத்தில் ஒரு முறைதான் இக்காப்பு களையப்பட்டு பக்தர்களுக்கு இந்த மூர்த்தி  காட்சி தரும் என்றும் தகவல் கூறுகிறது. இவரது பெயர் வராக நரசிம்ம மூர்த்தி  அதாவது பன்றியும் சிங்கமும் கலந்த முகமுள்ள மூர்த்தி என்று பொருள்.

முதலாம் குலோத்துங்கனால் 10ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயில்  ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் 1516 வந்து திருப்பணிகள் செய்ததுவரை கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.  கீழே நகரத்திலிருந்து  மேலே  மலை வரை வளைந்து நெளித்து செல்லும் பாதை முழுவதும் பச்சைப்பசேலென்று கண்ணுக்கும் மனதிற்கும் விருந்தாக அமைந்தது.

f-Vizag-5

நரசிம்மரின் திவ்ய தரிசனத்திற்கு பின்பு கீழே இறங்கி காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு விசாகப்பட்டினத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமான கைலாச கிரியை அடைந்தோம்.  நிஜமாகவே மானஸசரோவரில் உள்ளது போன்ற பிரமை.  பெரிய சிவன் பார்வதி சிலை.  குளு குளுவென்று DSC08056இடைவிடாத காற்று  வழியெங்கும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் பூங்காக்கள்.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிசயமாகப் பார்க்கும் பல இடங்கள். f-Vizag-6இந்த மலைப்பூங்கா கடல் மட்டத்திலிருந்து 360 அடி உயரத்தில்  380 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.  ஒரு பக்கம் வங்காள விரிகுடாக் கடல்  ஓயாது அலைகளால் நம்மை முத்தமிடுகிறது. மறுபக்கம் விசாகப்பட்டினம் நகரம்.  அந்த உயரத்திலிருந்து நகரம் முழுவதையும் தெளிவாக பார்க்க முடிகிறது.  தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல் கட்டிடங்கள்  வீடுகள் அலுவலங்கள் என மிக அழகு.

f-Vizag-7

டைட்டானிக் முனை, பூக்களால் அமைக்கப்பட்ட கடிகாரம், [FLORAL CLOCK ] சாந்தி ஆசிரமம், உணவுக்கூடங்கள்  என நிறைய இதில் அமைந்துள்ளன. இந்த பூ கடிகாரம் 10 அடி விட்டமுள்ளது. இந்தியாவிலேயே அமைந்த பெரிய கடிகாரங்களில் ஒன்று.  அங்கிருந்த சின்ன ரயிலில் [TOY TRAIN ] நாங்கள் அனைவரும் ஒரு பெரிய ரவுண்டு சுற்றி அனைத்து காட்சிகளையும் ரசித்தோம்.  இந்த கைலாசகிரிக்கு 2003ல் சிறந்த சுற்றுலாத்தலம் என்ற விருது கிடைத்துள்ளது என்பது உபரி தகவல்.

f-Vizag-9e

கைலாசகிரியை விட்டு இறங்க மனமில்லாலே இறங்கி வந்து விசாகபட்டினத்தின் கடற்கரையை கண்டு f-Vizag-9h
களித்தோம். இந்தக் கடற்கரையில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் உள்ளது. குர்சூரா என்ற இந்த நீர்மூழ்கிக்கப்பல் இந்திய கப்பற்படையின்  நாலாவது நீர்மூழ்கிக்கப்பல். இதன் ஆயுள்காலம் முடிந்ததும். ஆந்திரபிரதேஷ் அரசு  இதனை ஆகஸ்டு 24ம் தேதி 2002ல் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தது. . அந்த உலகே வேறு என அதனை சுற்றிப்பார்த்த போது தெரிந்தது.

நமது எல்லையில் ராணுவம்  நீரில்  கப்பற்படை  வானில் நமது விமானப்படை என வீரர்கள் நம்மையும் நம் நாட்டையும் காப்பதால் தான் நாம் இப்படி பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு பதிவுகள் எழுத முடிகிறது என்பதை எண்ணும்போது அவர்களின் தியாகம் எத்தனை மகத்தானது என்பது புரிகிறது.

f-Vizag-9j

அதற்குப்பிறகு கடற்கரையில் உள்ள இராமகிருஷ்ண மடத்தையும் அதன் அருகில் உள்ள ஒரு காளி கோயிலையும் தரிசித்துக்கொண்டு  நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தோம்.  கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கொண்ட பின்  மாலை இரயிலில் கிளம்பி 6ம் தேதி காலை சுமார் 7 மணிக்கு ஹைதிராபாதை வந்து சேர்ந்தோம்.

f-Vizag-9i

2 thoughts on “விசாகப்பட்டினம் விஜயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s