ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துவது ஏன்?

lord-hanuman-hdஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்தும் வழிமுறைக்கு ஓர் புராண சம்பவம் சொல்லப்படுகிறது.  அதாவது ஒரு சமயம் ஆஞ்சனேயர் சிறு குழந்தையாக இருந்தபோது சூரியனைப் பழமெனக்கருதி பிடித்து சாப்பிட ஆகாயத்தில் பறந்து சென்றார். அப்போது சூரியனை ராகு பிடிக்க வேண்டிய சூரிய கிரஹண சமயம் என்பதால் ராகு கிரகமும் ஆகாயத்தில் பறந்து வந்து சூரியனைப் பிடிக்க முற்பட்டது. ஒரே சமயத்தில் ஆஞ்சனேயரும் ராகுவும் சூரியனை  நெருங்க முற்பட்டதால் இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் ராகு கிரகம் தோல்வியடைந்து தேவேந்திரனிடம் முறையிட தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தால் ஆஞ்சனேயரின் கன்னத்தில் தாடை பகுதியில் லேசாக தட்டினான். அதனால் ஆஞ்சனேயரின் தாடைப் பகுதி உப்பிக்கொண்டது.

அது முதல் ஹனு என்னும் தாடைப்பகுதி உப்பியதால் ஹனுமான் என ஆஞ்சனேயருக்கு காரணப்பெயர் ஏற்பட்டது. தனது புத்ரரான ஆஞ்சனேயரை அடித்ததால் கோபமடைந்த ஆஞ்சனேயரின் தந்தையான வாயுபகவான் தன்னை அடக்கிக்கொண்டு குகைக்குள் இருந்து வெளியில் சஞ்சாரம் செய்ய மறுத்துவிட்டார். உலகில் வாயு சஞ்சாரம் இல்லாததால் மக்கள் துன்பம் அடைந்தனர்.hanuman_vadai_maalai_2

தேவேந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் வாயு பகவானிடம் பிரார்த்தித்து இனி எப்போதும் ஆஞ்சனேயருக்கு தங்கள் ஆயுதங்களால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது என உறுதியளிக்க வாயுவும் மறுபடி உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தார். அதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள் என்பது புராண வரலாறு.

அதே சமயம் ராகு கிரகமும் ஆஞ்சனேயரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டதுடன் “ இனி நான் உன்னை மட்டுமல்ல உனது பக்தர்களையும் துன்புறுத்த மாட்டேன் குறிப்பாக எனக்குப் பிடித்த உளுந்து தானியத்தால் யார் ஹனுமானாகிய உன்னை வழிபடுகிறார்களோ அவர்களை  நான் ஒருபோதும் துன்புறுத்தமாட்டேன் “ என்று வாக்குறுதியளித்தார்.  இந்த சம்பவத்தை ஒட்டியே ஜாதகத்தில் ராகு தோஷம் சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ராகுவுக்கு பிரியமான கறுப்பு உளுந்தால் நல்லெண்ணெயில் வடையாகச் செய்து அந்த வடைகளை பாம்பு போல் மாலையாகக் கட்டி ஆஞ்சனேயருக்கு வடைமாலையாக அணிவிக்கிறார்கள்.JILEBI

பாரதத்தின் வட மானிலங்களில் இந்த வடை மாலை வழிபாட்டையே தித்திப்பு கலந்து ஜாங்கிரியாக செய்து மாலையாகக் கட்டி ஆஞ்சனேயருக்கு அணிவிக்கிறார்கள். இந்த வழிபாடு பல காலமாக பல்வேறு பக்தர்களால் செய்யப்பட்டு வரும் வழிபாட்டு முறை. ஆகவே ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்துவதால் ராகு தோஷம் விலகுவதுடன் வடையை நல்லெண்ணெயில் தயாரிப்பதால் சனி கிரஹத்தால் ஏற்படும் ஏழரைச் சனி ஜன்மச்சனி போன்ற தோஷமும் விலகும் எனத் தோன்றுகிறது.

நன்றி    ஸ்ரீ வி  ராஜகோபால கனபாடிகள்.

2 thoughts on “ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாத்துவது ஏன்?

  1. அருமையான வரலாற்றுச் செய்தி
    சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s