மொட்டை தலையரிடம் சீப்பு விற்க முடியுமா?

TN_173329000000

ஒரு முறை ஒரு குரு சில சீப்புகளைக் கொடுத்து  புத்தமடத்திற்கு சென்று அங்கு இருக்கும் பிட்சுக்களிடம் சீப்புகளை விற்றுவிட்டு வரும்படி கூறினார் தன் மூன்று சீடர்களிடம்.

புத்த பிட்சுக்கள் மொட்டைத் தலையுடன் இருப்பார்களே அவர்களிடம் இந்த சீப்புகளுக்கு என்ன வேலை? எப்படி வாங்கிக்கொள்வார்கள் என்று நினைத்தார்கள் சீடர்கள். பிறகு குரு வார்த்தையை தட்ட முடியாமல் மூன்று பேரும் புத்தமடத்திற்கு சென்று சீப்புக்களை விற்று திரும்பினார்கள். குரு அவர்களிடம் “ எப்படி சீப்புக்களை விற்றீர்கள்”? என கேட்டார். முதல் சீடன் “ நான் ஒரு புத்த பிட்சுவிடம் இரண்டு சீப்புகளை முதுகு சொறிய வைத்துக்கொள்ளுங்கள் என்று விற்றேன்” என்றான்.burmese monks

இரண்டாவது சீடன் “ நான் பத்து சீப்புகளை ஒரு பிட்சுவிடம் விற்றேன்  அவரிடம் உங்களைத் தரிசிக்க வரும் பக்தர்கள் ரொம்ப தூரத்திலிருந்து வரும்போது அவர்களின் முடி க்லைந்து இருக்கும்  அவர்கள் அப்படி இருப்பது பலருக்கு பிடிக்காது. அதனால் அவர்கள் தலைசீவி அலங்கரித்து கொள்ள இந்த சீப்புக்கள் உதவும் என்று சொல்லி விற்றேன்.” என்றான்.

மூன்றாவது சீடன் “ நான் ஆயிரம் சீப்புக்களை விற்றேன்” என்றான்.  குரு “ எப்படி அது சாத்தியமாயிற்று ?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.download

“ நான் அந்தச் சீப்புக்களில் புத்தமதக் கொள்கைகளைப் பொறித்து வைத்தேன். புத்த பிட்சுவிடம் உங்களை தரிசிக்க அநேக பக்தர்கள் நிறைய பரிசுப் பொருட்களுடன் வருவார்கள். அவர்கள் திரும்பிப் போகும்போது உங்கள் ஆசியுடன் புத்தமதக் கொள்கைகளைப் பொறித்த இந்தச் சீப்புக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பக்தரிடம் கொடுத்தால் மிகவும் சந்தோஷமடைவார்கள். இந்த புத்த மதக் கொள்கைகளைப் படித்துவிட்டு இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உங்களைத் தேடி வருவார்கள் என்று கூறி விற்றேன்.” என்று அவன் கூறினான்.

எந்தக் காரியத்தையும் முடியாது என்று நினைத்துவிட்டால் முடியாததுதான். ஆனால் நன்றாகச் சிந்தித்து செயல்பட்டால் எந்தக் காரியத்தையும் சாதனையாக செய்து முடிக்கமுடியும்/

Advertisements

One thought on “மொட்டை தலையரிடம் சீப்பு விற்க முடியுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s