கேட்ட வரம் தரும் அன்னவரம்

annavaram

நீண்ட நாட்களாக போகவேண்டுமென நினைத்து இரண்டு முறை பயணத்திற்கு பதிவு செய்தும் போகமுடியாமல் தவறிய அன்னவரம் யாத்திரைக்காக இம்மாதம் 3ம் தேதி இரவு ரயிலில் என் பெரிய பெண் ,  பிள்ளையுடன் நான் பயணமானேன்.  இரவு 9.30க்கு ரயில் சிகந்திராபாத்தை விட்டு கிளம்பியது. பக்கத்து பர்த்தில் இருந்த குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் இரவு சரியாகத் தூங்கமுடியவில்லை.

a-Bhavannarayana-Temple-1

காலை 8 மணிக்கு ரயில் காக்கினாடா ரயில் நிலையத்தை அடைந்தது. ஹோட்டல் அதிதிக்கு சென்று  தயாராகி  காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு முன்பே பதிவு செய்திருந்த காரில் எங்கள் பயணத்தைத் துவங்கினோம். அந்தக் காரின் டிரைவர் தெலுங்கு படங்களின் நகைச்சுவை நடிகரை எங்களுக்கு நினைவு படுத்தினார்.  அவரது செயல்கள் பேச்சு எல்லாம் அவரைப் போலவே இருந்தது.

a-Bhavannarayana-Temple-2

முதலில் நாங்கள் சென்ற இடம் காக்கினாடாவிலிருந்து 8 கிமீ தூரத்திலிருந்த சர்ப்பவரம் எனும் கிராமம். இதில் நாரதர் பிரதிஷ்டை செய்த பாவா நாராயண சுவாமி  கோயில் உள்ளது.  இதன் எதிரில் உள்ள குளம்  நாரதர் குண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்நானம் செய்தால் முக்கியமாக கார்த்திகை மாசி மாதங்களில் சனி ஞாயிற்றுகிழமைகளில் மிகவும் விசேஷம் என்றும் நம் பாவங்கள் அனைத்தும் போகும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். இங்கு பாவா நாராயணன் சுவாமி  லட்சுமி நீலா மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

Bhimeswara Temple

அங்கிருந்து கிளம்பி  நாங்கள் சாமல்கோட் என்ற இடத்திற்கு சென்றோம். இது புகழ்பெற்ற பஞ்சாராமங்களில் ஒன்றான ஸ்ரீ குமார ராம பீமேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ள இடம். இது சாமல்கோட் ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது. இது கிழக்கு சாளுக்கிய மன்னன் குமார ராமனால் [ சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனின் பிள்ளை ]  ஒன்பதாவது நூற்றாண்டில் கட்டப்பட்டது.  அந்தக் கட்டடக்கலை நம்மை வியக்க வைக்கிறது.  நூறு தூண்களால் தாங்கப்பட்ட ஒரு மண்டபம். தூண்களில் பல அப்சரஸ்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  சிவலிங்கத்தின் முன்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒரு நந்தி [ தஞ்சாவூரில் இருப்பதுபோல் ] அமர்ந்திருக்கிறது. படிகளேறி முதல் கட்டத்திற்கு சென்றுதான் சிவலிங்கத்தை தரிசிக்கவேண்டும்  அத்தனை பெரிய சிவலிங்கம்.  இங்கு அம்பாள் பாலதிரிபுர சுந்தரி  தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.

Shakti

அங்கிருந்து கிளம்பி சுமார் ஐந்து கிமீ தூரத்திலுள்ள பிட்டாபுரம் என்ற இடத்தை அடைந்தோம்.  இங்கு குக்குடேஷ்வர சுவாமி கோயில் உள்ளது. மொத்தம் உள்ள 51 சக்தி பீடங்களில் 18 மஹா சக்திபீடங்களாகக் கருதப்படுகிறது. இந்தப் பிட்டாபுரத்தில் உள்ள புருஹூதிகா தேவியின் சக்திபீடம் இந்த மஹா சக்தி பீடங்களில் ஒன்று. இங்கு சதியின் இடது கை விழுந்ததாக கருதப்படுகிறது.  அதனால் இங்கு தேவியின் பூஜைக்கு எல்லோரும் மஞ்சள் குங்குமம் கண்ணாடி வளையல்கள் வாங்கிக்கொடுக்கின்றனர்.  நாங்களும் கொடுத்து பூஜை செய்தோம். இதனால் சுமங்கலித்தனமும்  மழலைச் செல்வமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த புருஹூதிகா தேவி நாலு அடி உயரத்தில் கிரனைட் கல்லால் செய்யப்பட்டு  நான்கு கைகளுடன் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் தனி சன்னதியில் இருக்கிறாள்.  பட்டுப்புடவையும்  சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட நகைகள் அணிந்து அம்பாள் மிக அழகாக ஜொலிக்கிறாள். இது முதலில் இந்த தேவியின் பெயரால் புருஹூதிகாபுரம் என்றே அழைக்கப்பட்டது அந்தப் பெயர் மருவி இன்று பிட்டாபுரம் ஆகிவிட்டது. இந்த தேவியை இந்திரன் தனது சாப விமோசனத்திற்காக  வழிபட்டதாக தகவல் பலகை அறிவிக்கிறது.

c-Kukuteswara-Shaktipeetam

இங்குள்ள குளம் கோதாவரியின் ஒரு பாகம் தான். இதனை பாத கயா என அழைக்கிறார்கள். இங்கு மக்கள் ஸ்நானம் செய்வதுடன் தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் போன்ற பிதுர்காரியமும் செய்கிறார்கள். கயாசூரனின் பாதம் விழுந்த இடமானதால் இதனை பாத கயா என அழைக்கின்றனர். இங்கு கயாசூரனின் சிலையும் நீரில் மிதப்பதுபோல் வைக்கப்பட்டுள்ளது. இதனை தட்சிண காசி என்றும் சொல்கிறார்கள்.

DSC07814

பிட்டாபுரத்திலிருந்து 32 கிமீ தூரத்தில் உள்ளது வீர வெங்கட சத்திய நாராயண ஸ்வாமி கோயில் உள்ள அன்னவரம். பம்பா நதி தீரத்தில் ரத்னகிரி மலையின் மீது அமைந்துள்ளது இந்தக் கோயில் இது இரண்டு பாகங்களாகக் கட்டப்பட்டுள்ளது. கீழே யந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன  மேலே விக்ரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   நாங்கள் சிறப்பு வழியில் சென்றதால் சுமார் பதினைந்து நிமிடங்களில் எங்களுக்கு மிக அருமையான தரிசனம் கிடைத்தது. பக்கத்திலிருந்த மண்டபத்தில் பல பேர் தமபதி சமேதராக அமர்ந்து சத்ய நாராயாண விரதம் செய்துகொண்டிருந்தனர். இங்கு வருடம் முழுவதும் கோலாகலமும் கொண்டாட்டமும் தான். ஆனாலும் மே மாதம் இங்கு அனைத்து மானிலங்களிலிருந்தும் வரும் பக்தர் கூட்டம் மிக அதிகம் என அர்ச்சகர் சொன்னார். இந்த கோயிலின் உள்ளேயே சூரிய கடிகாரம் உள்ளது.  அது இந்திய நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.  நல்ல வெய்யில் நேரம்  சுமார் ஒன்றரை மணிக்கு எங்கள் தரிசனம் முடிந்து  அங்கேயே அன்னதான சத்திரத்தில் சுவாமியின் பிரசாதம் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.  ஒரே  நேரத்தில் சுமார் ஆயிரம் பேர் சாப்பிடக்கூடிய கூடத்தில்  நாங்களும் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு  அன்னவரம் ரயில் நிலையத்தை அடைந்தோம் எங்களின் அடுத்த இலக்கு விசாகப்பட்டினம். ஆனால் ஐந்து மணிக்கு வரவேண்டிய ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக ஆறு மணிக்கு வந்தது.  பயணம் தொடரும்.

DSC07901

Advertisements

One thought on “கேட்ட வரம் தரும் அன்னவரம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s