புத்தியா பொழச்சுக்கோ

download (1)

படுக்கையில் கிடந்த விவசாய் தன் சோம்பேறி மகனை அழைத்தார். “ ராமு  சொல்றதை கேளடா  என் காலத்துக்கு அப்புறமா வயலை வித்துடாதே  அங்கே புதையல் வச்சுருக்கேன் எந்த மூலையில் இருக்குன்னு ஞாபகமில்லே  ஒரு இடம் பாக்கி இல்லாம கலப்பையால் நல்லா உழுதிடு. புதையலை எடுத்து புத்தியா பொழச்சுக்கோ” என்று சொல்லி உயிர்விட்டார். மகன் இந்த ரகசியத்தை அம்மாவிடம் கூட சொல்லவில்லை.ploughing

ஒரு வாரத்தில் நல்ல மழை பெய்தது. ராமு கலப்பையுடன் வயலுக்குப் புறப்பட்டான். அவனைக் கண்ட ஊரார் அப்பன் போனதும் புள்ளைக்கு நல்ல புத்தி வந்திடுச்சு போலிருக்கு  என்று பேசிக்கொண்டனர். ஆனால் ராமுவோ புதையலைத் தேடி போகிறான் என அவர்களுக்கு தெரியாது.download

ஒரு மண் கட்டியைக் கூட விட்டு வைக்கவில்லை. மூலை முடுக்கெல்லாம் ஆழமாக உழுதுவிட்டான். புதையல் கிடைத்த பாடில்லை. அப்பா மீது கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டான். அடுத்தடுத்த வயல்களில் நெல் விதைக்கத் தொடங்கினர். உழுதது வீண் போகாமல் இருக்க தானும் விதைத்தான். விதை முளை விட்டதைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தான். ஆர்வமுடன் பயிர்களை பாதுகாத்து நீர் பாய்ச்சினான்.bullock-cart

அறுவடை நெருங்கியது   எதிர்பார்த்ததைவிட இருமடங்கு விளைச்சல் வந்தது. கிடைத்த வருமானத்தில் தங்கக்கட்டி வாங்கினான். புத்தியா பொழச்சுக்கோ ராமு என்று அப்பா சொன்னது உழைப்பின் உயர்வைக் குறிப்பிட்டுத்தான் என புரிந்துகொண்டான்.

Advertisements

One thought on “புத்தியா பொழச்சுக்கோ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s