விரிசலை சரி செய்யும் பயோ காங்கிரீட்

download

காங்க்ரீட் என்பது கட்டங்களின் முதுகெலும்பு. அதன் வலிமையால்தான் பெரிய கட்டடமே நிமிர்ந்து நிற்கிறது. ஒரு வேளை அந்தக் காங்க்ரீட்டில் விரிசல் ஏற்பட்டால்? பெரிய பிரச்னைதான். விரிசல் வழியே நீர் உள்ளே நுழைந்தால் கசிவு ஏற்படும். இரும்புக் கம்பிகள் துருப்பிடிக்கும். கட்டத்துக்கே ஆபத்து வரக்கூடும்.

இந்தப் பிரச்னைகளைச் சரி செய்யக்கூடிய ஒரு லேட்டஸ்ட் உத்தி பயோ காங்க்ரீட் அதாவது உயிருள்ள காங்க்ரீட். நிஜமாகவே இந்த காங்க்ரீட்டுக்கு உயிர் இருக்கிறது. வழக்கமான கட்டுமானப் பொருள்களுடன் பேசிலஸ் என்கிற பாக்டீரியாவைச் சேர்த்து இதனைச் செய்கிறார்கள் கட்டடத்தைக் கட்டுகிறார்கள்.Bio-Concrete

காங்க்ரீட் நன்கு வலுவாக உள்ளவரை இந்த பாக்டீரியா எதுவும் செய்வதில்லை. ஒருவேளை அதில் விரிசல் ஏற்பட்டு நீர் உள்ளே புகுந்தால்  பாக்டீரியா அதனைச் சரி செய்கிறது. அதாவது விரிசலை அடைக்கிறது. பாக்டீரியா எப்படி விரிசலை சரி செய்யும்/ விரிசல் விழுந்த இடத்தில் பூசுவதற்கு ஏதாவது ஒரு பொருள் வேண்டுமே?henkjonkers-grp1-beense-1212

அதையும் அந்த பாக்டீரியாவே தயாரித்துக்கொள்கிறது. இதற்காக அந்த காங்க்ரீட்டில் ஒரு வகையான வேதிப்பொருளைக் கலக்கிறார்கள். விரிசல் உண்டாகும்போது பாக்டீரியா விழித்துக்கொண்டு இந்தப் பொருளைப் பயன்படுத்தி அந்த விரிசலை அடைக்கும் பொருளைப் பயன்படுத்தி அந்த விரிசலை அடைக்கும் பொருளை உருவாக்கிறது. சில வாரங்களில் விரிசல் வந்த காங்க்ரீட் தானே ரிப்பேர் செய்துகொண்டு பழையபடி வலுவாகி விடுகிறது. இதன்மூலம் கட்டடங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை பெருமளவு தவிர்க்க இயலும்.

இதில் விசேஷம் என்னவென்றால் காங்க்ரீட் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆனபிறகும் இந்த பாக்டீரியா உயிரோடு இருக்கும் ஆகவே மிகப் பழைய கட்டடம் என்றாலும் கூட அங்குள்ள காங்க்ரீட்டில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டால் பாக்டீரியா உடனே விழித்துக்கொள்ளும். தேவையான பொருளை உற்பத்தி செய்து உடனே அடைத்துவிடும்.bio-concrete31

இந்தத் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளவர் பெயர் ஹெங்க் ஜோன்கர்ஸ். இயற்கையில் பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவற்றை நம்முடைய வழக்கமான கட்டுமானப் பொருள்களுடன் சேர்க்கும்போது இது போல் பல பிரச்னைகளை சரி செய்ய இயலும் என்கிறார் இவர்.

நன்றி     மங்கையர் மலர்

Advertisements

One thought on “விரிசலை சரி செய்யும் பயோ காங்கிரீட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s