நியூ[ஸ்]மார்ட்

Baumstein-1_3333217b

அமெரிக்காவை சேர்ந்தவர் 30 வயது சோனியா பாம்ஸ்டெய்ன். நவீன படகில் தனியாக 6000 மைல் தூரத்தை கடலில் கடந்து சாதனை செய்வதற்காக கிளம்பியிருக்கிறார். தினமும் 14-16 மணி நேரம் துடுப்புப் போடுவார். சிறிது ஓய்வெடுத்துவிட்டு துடுப்புப் போட ஆரம்பித்துவிடுவார். இதுவரை 16 பேர் இந்தச் சாதனை முயற்சிய்ல் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் இரண்டு ஆண்கள் மட்டுமே இதுவரை பசிபிக் கடலைக் கடந்து சாதனை செய்திருக்கிறார்கள். செப்டம்பர் மாதம் அட்லாண்டிக்கை கடந்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.6533940-3x2-940x627

ஜெர்மனியை சேர்ந்த மருத்துவரான மூதாட்டி தனது 102 வயதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இன்கேபேர்க் சிலம் ரோபோ பார்ட் என்று அந்தப் பெண்மணி 77 ஆண்டுகளுகு முன்பு ஜெர்மனியில் தொண்டையடைப்பான் நோய் குறித்து தனது ஆய்வுக்கட்டுரையை டாக்டர் பட்டத்துக்குக்கான இறுதித் தேர்வில் சமர்ப்பித்திருந்தார். தாய் யூதர் என்பதால் நாஜிக்களால் இறுதித்தேர்வில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டார். அப்போதிருந்த சட்டங்களின்படி வாய்வழித் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தத் தவறை சரி செய்ய தற்போது ஹாம்பர்க் பல்கலைகழகம் தீர்மானித்து கடந்த வாரம் பல்கலைகழத்தின் மருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள் பெர்லினிலுள்ள  இன்கேபேர்க்கின் வீட்டுக்குச் சென்று ஆய்வுக் கட்டுரை குறித்து சில கேள்விகளை கேட்டனர். அவருடைய பதில்களால் திருப்தியடைந்து அவருக்கு முனைவர் பட்டம் வழங்க பரிந்துரைத்தனர். இப்போது டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.comet_2508026k

வால் நட்சத்திரத்திலுள்ள  பனித் திட்டுக்களையும் பாறைகளையும் ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட ஃபிலே என்ற முதல் ஆய்வுக்கலன் வால் நட்சத்திரத்தின் செங்குத்துப்பாறை மீதி இறங்கிய பின் கடந்த 7 மாத காலமாக பூமியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்து தற்போது மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு உள்ளது. ஃபிலே  நல்ல முறையில் இயங்குவதாகவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூரியனுக்கு அருகில் சென்றதும் அதன் சோலார் தகடுகள் சக்தியை உருவாக்கத் தொடங்கியுள்ளன. பூமியில் உயிர் வாழ்க்கைக்குத் தேவையான அம்சங்களில் ஒன்றான தண்ணீரைக் கொண்டு வருவதில் வால் நட்சத்திரங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

INDIA - SEPTEMBER 01:  In the footsteps of Mother Teresa In Calcutta, India In September, 2003 - Mother House, sister Nirmala, Mother Teresa's successor as Superior General of the Missionaries of the Charity.  (Photo by Jean-Michel TURPIN/Gamma-Rapho via Getty Images)

அன்னை தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சேரிடி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிஸ்டர் நிர்மலா ஜோஷி அண்மையில் தனது 80 வது வயதில் உடல் நலக் குறைவினால் காலமானார். அன்னை தெரசாவால் 1950ல் மிஷனரீஸ் ஆஃப் சேரிடி நிறுவப்பட்டு பல நாடுகளில் இயங்கி வருகிறது.  அன்னை தெரசாவுக்குப் பின் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நடத்தியவர் நிர்மலா. தாய்லாந்து  ஆப்கானிஸ்தான் இஸ்ரேல் உட்பட 145 நாடுகளில் இந்த நிறுவனத்தின் பணிகளை விரிவுப்படுத்தினார் சகோதரி நிர்மலா. நலிவுற்றோருக்கான இல்லங்களின் எண்ணிக்கையை 720 ஆக உயர்த்தினார்.

ராஞ்சியில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பிராமணக் குடும்பத்தில் பத்து குழந்தைகளுக்கு மூத்தவராக பிறந்தவர் இவர். இவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். நிர்மலா படித்ததெல்லாம் கிறிஸ்துவ மிஷன் பள்ளியில்  அன்னை தெரசாவின் சமூகப்பணிகளால் ஈர்க்கப்பட்டு தனது 24வது வயதில் கிறித்துவ மதத்துக்கு மாறினார். மிஷனரீஸ் ஆஃப் சேரிடியில் இணைந்தார். பொலிடிகல் சயன்ஸ் படிப்பில் முதுகலைப் பட்டமும் சட்ட்ப்படிப்பில் பட்டமும் பெற்றார்.  பனாமாவுக்கு இந்த தொண்டு நிறுவனத்தின் பணிகளுக்காக முதன் முதலில் சென்ற குழுவில் இடம்பெற்றார். 1997ல் அன்னை தெரசாவின் மறைவுக்குப் பின்னர் சுப்பீரியர் ஜெனரல் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை மதர் என்றழைக்க வேண்டும் என்று சிலர் சொன்னபோது அந்தப் பெயர் அன்னை தெராசாவுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறி இறுதிவரி சிஸ்டராகவே இருந்தார். இரண்டு முறை மதர் சுப்பீரியர் ஆக இருந்த பின்னர் மூன்றாவது முறையும் தேர்வானபோது உடல் நிலை சரியில்லாததால் அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. 2009ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவில் விருதான பத்மவிபூஷன் வழங்கப்பட்டது.

Advertisements

2 thoughts on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s