பூதனை

mystery_sculpture_from_madurai

இளமை அழகு இவற்றைக் குறித்த பெருமிதம் பெரிய ஆபத்தைத் தரும். அதற்காகத்தான் அவை நிலையற்றது என்று வலுயுறுத்தினார்கள் பெரியோர்கள். அதைத்ஹ்டான் ரிஷி பத்தினியாக ஏற்றம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பெண் சாபப் பெற்று ராட்சசியாகப் பிறந்தாள் என்கிற உருவகமாக சொல்கிறது இந்தக் கதை.

சரஸ்வதி நதி தீரத்தில் கக்ஷீவான் என்ற இளம் துறவி வாழ்ந்தார். அவர் பாடம் போதிக்கும் விதமும் நேர்மையான நடத்தையும் பூஜா முறைகளும் அனைவரையும் ஆதர்ஷித்தன. பலர் அவரிடம் விளக்கம் கேட்க வந்தனர். அப்படி வந்தவர்களில் ஒருவர் காலபீரு முனிவர் அவர் தாயில்லாத தன் மகளையும் கூடவே அழைத்து வந்திருந்தார். காலபீருவின் புதல்வி சாருமதி பேரழையாயிருந்தாள். அவளைக் கண்டு கக்ஷீவானின் சித்தம் சலனமுற்றது. தனக்கு இவளை மணம் செய்து கொடுக்குமாறு காலபீருவிடம் வேண்டினார்.

ஐந்து வயதில் பெற்றோரை இழந்த நீங்கள் ஆசிரமவாசிகளால் வளர்க்கப்பட்டவர். பிரம்மச்சரியத்தைக் கடுமையாய் கடைப்பிடித்தவர். ஒரே நாளில் இல்லறத்துள் புகத் தீர்மானித்து விட்டீர். அதேபோல் ஏதோ ஒரு காரணத்தால் துறவறம் புகமாட்டீர் என்பது என்ன நிச்சயம்? அதோடு வேறு பெண்மீது மோகம் கொண்டு என் புதல்வியைக் கைவிடக்கூடாது இதற்கு ஒப்புக்கொண்டால் எனக்கு சம்மதம் என்றார் காலபீரு.

கக்ஷீவான் இதற்கு ஒப்புக்கொள்ள திருமணம் சிறப்பாக நடந்தது. சில தினங்களில் காலபீரு தீர்த்த யாத்திரை சென்றுவிட்டார். கக்ஷீவான் சாருமதி மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.  கக்ஷீவானை வடக்கத்திய ராஜா ஒருவர் அஸ்வமேத யாகம் செய்ய அழைத்தார்.  அழகிய மனைவியைப் புது இடத்துக்கு அழைத்துப்போனால் பாதுகாப்பு இராது என்று மற்ற ஆசிரமவாசிகள் எச்சரிக்க அவர்கள் பாதுகாப்பில் விட்டுச்சென்றார் கக்ஷீவான். சாருமதியும் நேர்மையாகவே வாழ்ந்து வந்தாள். சாருமதியிடம் மோகம் கொண்ட ஒருவனும்  அந்த இடத்தில் இருந்தான். அவளை அடைய நரிபோல் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். பூஜைக்கு மலர் பறிக்கும்போது அவள் பின்னே சென்று சௌந்தர்யவதியே உனக்கு ஈடாக எந்த அப்சரஸை சொல்லமுடியும்? சன்யாசிக்கு உன் அருமை தெரியவில்லை. தாடியை வளர்த்துக்கொண்டு தியானத்தில் கழிக்கிறான். என்று அவளை பலவாறு புகழ்ந்தான்.

ஆரம்பத்தில் இந்தப் பேச்சுக்களை சாரு புறக்கணித்தாள். ஆனால் அவன் அவள் அழகைப் புகழப் புகழ அவளுக்குப் பெருமையாக இருந்தது. முதலில் அதை ரசித்தவள் பின் அவனை ரசித்தாள். இளமையும் தனிமையும் அவளை அவனோடு சேர வைத்தது.

srikrishnaகக்ஷீவான் யாகம் முடிந்து கங்கையில் நீராடி ஆசிரமம் வந்தார். சாருமதியின் கண்களில் இருந்த மமதையைக் கண்டார்.  நடந்ததை ஞான திருஷ்டியில் பார்த்தார். ஒழுக்கம் தவறிய நீ ராட்சசியாய் பிறந்து உழல்வாயாக  என சபித்துவிட்டு க்ஷேத்திராடனம் சென்றுவிட்டார்.  கணவர் சாபப்படி பூதனையாய்ப் பிறந்த சாருமதி கம்சன் ஏவ கண்ணனுக்குப் பால் கொடுக்க வந்தாள். ஸ்ரீகிருஷ்ணர் அவள் பாபத்தையும் உறிஞ்சி அவளுக்கு மோட்சமளித்தார்.

Advertisements

One thought on “பூதனை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s