மதுரையில் காமாட்சி

7e1e

மதுரை என்றதும் நினைவுக்கு வருவது அன்னை மீனாட்சிதான். ஆனால் பிரம்மனின் தரித்திரத்தைப் போக்கி மீனாட்சி அன்னையே காமாட்சியாக அருள்பாலிப்பது தெற்கு மாசி வீதியில் உள்ள காமாட்சி ஏகாம்பரஸ்வரர் கோயிலில். முன்பொரு சமயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தை மஹாவிஷ்ணு பிரம்மா ஆகியோர் நடத்தி வைத்தனர். திருமணத்தை நடத்திக்கொடுத்த பிரம்மனுக்கு தட்சணையாக என்ன வேண்டுமென சிவபெருமான் கேட்க “ என் சிருஷ்டிக்குக் கட்டுப்படாததே எனக்கு தட்சணையாக வெண்டும்” என பிரம்மா கர்வத்துடன் கேட்டார். சிவபெருமானும் “ உமது சிருஷ்டிக்குக் கட்டுப்படாத தரித்திரத்தையே உமக்கு தட்சணையாகத் தந்தோம் “ எனக்கூறி சென்றார்.download

அதிர்ச்சியடைந்த பிரம்மா அன்னை மீனாட்சியிடம் “ தாயே ஈசன் எனக்கு இப்படி ஒரு விபரீதமான தட்சணை  தந்து எனது கர்வத்தை போக்கி விட்டார். இந்த தரித்திரத்தை தீர்க்க நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும் “ என வேண்டினார்.mad

“ பிரம்மனே கலங்க வேண்டாம்  நான் இத்தலத்தில் காமாட்சியாக அமரும்போது என்னை வழிபட்டு உமது தரித்திரத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் “ என அருளினார். அப்படி பிரம்மனின் தரித்திரத்தைப் போக்கியவள் இந்தக் காமாட்சி. கோயில் கிழக்கு வடக்கு என இரு வாயில்களைக் கொண்டிருக்கிறது. ஆயினும் வடக்கு வாசலே பிரதானம்   அன்னை காமாட்சி வடக்கு நோக்கி இங்கு காட்சியளிப்பது விசேஷம்.

கோயிலில் கொடிமரம் அடுத்துள்ள மண்டபத்தில் துவாரபாலகிகள் உள்ளனர். இவர்களுக்கு இடப்புறம் கணபதி சரஸ்வதி பிரம்மாவும் காட்சியளிக்கின்றனர். அடுத்த மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜரும் பாணலிங்கமும்  அதனருகே ஆதிகாலத்து உக்கிரகாளி தற்போது சாந்த சொரூபக் காளியாக வீற்றிருக்கிறாள். மேலும் ஐந்து முகம் பத்து கைகளுடன் காயத்ரி தேவி வீற்றிருக்க அருகே ஏகாம்பரேஸ்வரர் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். கோயில் சுற்றுப்பிரகாரத்தில் இச்சா சக்தி கிரியா சக்தி ஞானசக்தி ஆஞ்சனேயர் தட்சிணா மூர்த்தி லிங்கோத்பவர் துர்கை சண்டிகேசுவரர் வீற்றிருக்கின்றனர்.kovil9

முற்காலத்தில்  மீனாட்சி கோயிலுக்கு தெற்கே இருந்த மாந்தோப்பில் வனகாளி அருள்பாலித்து வந்தாள். காளிக்கு கோயில் கட்ட அப்பகுதி மக்கள் அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்ட அங்கு சுயம்புவாக ஈசன் தோன்றினார்.  ஆம்ர என்றால் வடமொழியில் மாமரம் என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் ஈசன் ஏகாம்பரேஸ்வரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி சிவாகம விதிப்படியும் பிரம்மனுக்கு மீனாட்சி கொடுத்த வாக்கின்படியும் காமாட்சி சமேத ஏகாம்பேஸ்வரர் சன்னதியாக இக்கோயில் மாறியது.

பக்தர்கள் வறுமை குழப்பங்கள் மற்றும் தரித்திரத்தைப் போக்கிக் கொள்ள இக்கோயிலில் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் ஆராதனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நவராத்திரி  கார்த்திகை மாத சுவாமி அம்மன் திருவீதி உலா மார்கழி மாத விழா திருவாதிரை ஆருத்ரா தரிசனம் சங்கராந்தி ஆகியவை விசேஷ நாட்கள்

நன்றி   எழிலரசன்  சென்னை      தீபம்

Advertisements

3 thoughts on “மதுரையில் காமாட்சி

  1. மதுரையில் காமாட்சியா? இதுவரை அறிந்ததில்லை. அடுத்த முறை மதுரை போகும்போது தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும். தகவலுக்கு நன்றி!

  2. 2006ல் மதுரை போனபோது நான் தரிசித்துவிட்டு வந்தேன் மிக அழகு அம்பாள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s