பத்ரி நாராயண தரிசனம்

83348017kf2

2006ம் ஆண்டு என் பெரிய மாப்பிள்ளைக்கு மதுரைக்கு மாற்றல் ஆனது. அவர் அப்போது ஐ சி ஐ சி ஐ யில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.  நானும் என் பிள்ளையும் அந்த வருடம் நவராத்திரி லீவுக்கு மதுரை சென்றோம்.  பாண்டியிலிருந்து என் தங்கையும் அவள் பிள்ளையும் கூட அங்கு வந்திருந்தார்கள்  நாங்கள் அனைவரும் சேர்ந்து  பார்த்து மகிழ்ந்த இடம் இந்த பத்ரி நாராயணர் கோயில் தீபத்தில் இந்த கோயிலைப் பற்றி படித்தபோது நாங்கள் போனது எனக்கு  ஞாபகம் வந்தது

shiva  மதுரையிலிருந்து அழகர்மலை செல்லும் வழியில் அழகர்மலைக்கு முன்பாக அமைந்துள்ளது ஸ்ரீ பத்ரி நாராயணன் கோயில். வட இந்திய பத்ரி நாத் போலவே இங்கும் அமர்ந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் பெருமாள். கருவறையில் மூலவருக்கு வலப்புறம் குபேரர் கை கூப்பியபடி காட்சியளிப்பது விசேஷம். மதுரை எஸ் என் ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எஸ் நாராயணனுக்கு பத்ரி நாத் சென்று வந்தது முதல் அதைப்போலவே இங்கும் பெருமாளுக்கு ஒர் ஆலயம் எழுப்பவேண்டும் என்ற எண்ணம்  அதன் விளைவே இக்கோயில்  அங்கே பத்ரி நாராயணன் எழுந்தருளியிருப்பது பனி படர்ந்த இமயமலை உச்சியில். இங்கு பெருமாள் அமர்ந்திருப்பதோ பசுமை படர்ந்த அழகர்மலை அடிவாரத்தில். கருவறை  விமானம் கோபுரம் ஆகியவை பத்ரி நாத் ஆலய வடிவிலேயே அமைந்திருப்பது தனிசிறப்பு.

Badhri-Narayanan-Temple-in-Madurai-4பத்ரி நாத் ஆலயக் கருவறை போலவே இங்கும் அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆச்சார்யன் சிஷ்யன்  பரிமாற்றத்தை உலகுக்கு உணர்த்த தன்னையே இருவராக்கி குரு ஸ்ரீ நாராயண ரிஷியாகவும் சிஷ்யர் ஸ்ரீ நர ரிஷியாகவும் கருவறையில் அமர்ந்து வேதங்களை வழங்குகிறார். நாரதர் கருடன் மற்ரும் உத்தவர் ஆகியோரும் கருவறையில் பஞ்சலோக விக்கிரங்களாக எழுந்தருளியுள்ளனர்.  பத்ரி நாத் திருத்தலத்தில் பெருமாள் கடும் தவத்தில் ஆழ்ந்திருப்பதை காண்ட மஹாலட்சுமி பத்ரி மரமாக [ இலந்தை மரமாக ] மாறி நிழல் கொடுத்து நின்றாள். அழகர்மலை ஸ்ரீ பத்ரி நாராயணன் கோயிலில் கருவறைக்குப் பின்புறத்தில் ஸ்தல விருட்சமாக இலந்தை மரம் வளர்ந்தோங்கியுள்ளது. ஸ்ரீ மஹாலட்சுமியாக பாவித்து பக்தர்கள் இந்த மரத்தை வலம் வந்து வணங்குகின்றனர்.

1280px-Tree_ilanthaiகருவறை வலதுபுறத்தில் ராமர் லட்சுமணர் சீதை ஆஞ்சனேயர் அரவிந்தவல்லி தாயார்  ஆகியோருக்கு வரிசையாக தனித்தனி சன்னதிகள்  தவிர ஆதிசங்கரர் இராமானுஜ தேசிகர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் இடது பிரகாரத்தில் தனி சன்னதியில் வினாயகர்.

downloadஇக்கோயிலில் சித்திரை மாதத்தில் கள்ளழகர் திருக்கண் வைகாசியில் ராதாகிருஷ்ண திருக்கல்யாணம் மார்கழியில் ஸ்ரீ நிவாசர் ஆண்டாள் திருக்கல்யாணம் மற்றும் அனுமன் ஜெயந்தி பங்குனியில் ஸ்ரீ ராம நவமி ஆகிய உற்சவங்கள் விசேஷம். அழகர் கோயிலுக்கு சுற்றுலா வரும் பக்தர்கள் பத்ரி நாராயணரையும் வழிபட்டு செல்கின்றனர்.

செல்லும் வழி    மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அழகர்மலை நகர்ப்பேருந்து வசதி உண்டு. பாலிடெக்னிக் காலேஜ் பேருந்து நிலையத்தில் இறங்கவும்.

Advertisements

2 thoughts on “பத்ரி நாராயண தரிசனம்

  1. அடுத்த முறை அழகர் கோயில் போகும்போது அவசியம் பார்த்துவிடவேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s