குழந்தை சிவன்

mandodari

ராவணனின் மனைவியான மண்டோதரி  திருமணத்துக்கு முன்பே சிவராத்திரி விரதத்தை தவறாது மேற்கொள்வாள். சிவன் நேரில் காட்சி அளித்து “ மண்டோதரி என்ன வரம் வேண்டும்? “ எனக்கேட்டார்.  “ சுவாமி நான் விரும்பும் நேரமெல்லாம் நீங்கள் தரிசனம் அளிக்கவேண்டும்” என்றாள். “ அப்படியே ஆகட்டும் “ என்றார் சிவன்.

மண்டோதரிக்கும் ராவணனுக்கும் திருமணம் நடந்தேறியது.  ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் தவித்த மண்டோதரி சிவ தரிசனம் பெற விரும்பினாள். சிவனும் பள்ளிக்குப்பாயம் என்னும் உடை அணிந்து காவலர் போல அவளுக்கு காட்சியளித்தார்.  “ பள்ளி குப்பாயம் “ என்பது இரவில் காவலர்கள் அணியும் உடை. சிவதரிசனம் கண்ட மண்டோதரி ராவணங்கட்டிலில் தூங்கிக்கொண்டிருப்பதையும் மறந்து சிவனைத் துதித்து பாடத் தொடங்கினாள். பாடல் கேட்ட ராவணன் தூக்கம் கலைந்தது. shiva

“யாரங்கே மண்டோதரி யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்? “ என்று கட்டிலில் இருந்து எழுந்தான். சிவபெருமானோ காவல்வீரன் கோலத்தை மறைத்து குழந்தையாக தன்னை மாற்றிக்கொண்டார். குழந்தையைக் கண்ட ராவணன்  “ யார் இந்தக் குழந்தை? இரவில் இதோடு என்ன பேசுகிறாய் மண்டோதரி “ என்று ஆச்சர்யத்துடன் கேட்டான். “ பணிப்பெண்ணின் குழந்தை இது என்னிடம் அடைக்கலமாகக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறாள்.” என்று சொல்லி ராவணனை மண்டோதரி சமாதானப்படுத்தினாள். ராவணன் தூங்க ஆரம்பித்ததும் குழந்தை சிவன் மண்டோதரியிடமிருந்து விடை பெற்று கைலாயம் புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் அடிப்படையில் திருவாசகத்தின் குயில்பத்து பாடலில் “ மண்டோதரிக்கு அருள் புரிந்த சிவபெருமானே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

One thought on “குழந்தை சிவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s