சாவி கொத்துடன் லட்சுமி

தல வரலாறுDD20-1

மேதாவி மகரிஷி மஹாலட்சுமியை தன் மகளாகப் பிறக்க விரும்பினார். வஞ்சள மரத்தின் கீழ் தவம் இருந்தார். மகிழ்ந்த லட்சுமியும் அவரது மகளாகப் பிறந்தாள். அவளுக்கு வஞ்சுளவல்லி எனப்பெயரிட்டு வளர்த்தார். அவள் தந்தையின் ஆசிரமத்தில் சேவை செய்து வந்தாள். இதையடுத்து பெருமாள் மகரிஷியிடம் வஞ்சுளவல்லியைப் பெண் கேட்டு வந்தார்.

DD-0“ என் மகளை திருமணம் செய்வதாக இருந்தால் அவளது சொல்லையே நீங்கள் கேட்க வேண்டும்  வீட்டின் உரிமை வரவு செலவு எல்லாம் அவளுடையதே. அதில் நீங்கள் தலையிடக்கூடாது அவள் சொல் கேட்டே நடக்க வேண்டும் “ என நிபந்தனை விதித்தார் மகரிஷி. பெருமாளும் அதை ஏற்றுக்கொண்டு மணம் புரிந்தார். தாயார் பெயரில் இவ்வூர் நாச்சியார் கோயில் என்றும் பெருமாளுக்கு திரு நறையூர் நம்பி என்றும் பெயர் வழங்கப்படுகிறது.

இடுப்பில் சாவி1652669784uraiyoor

இங்கு தாயாரை மையப்படுத்தி கருவறை அமைந்துள்ளது. வீதியுலா செல்லும்போதும் தாயார் முன் செல்ல பெருமாள் பின்னாலேயே செல்வார். முதல் அபிஷேகமும் தாயாருக்கே. உற்சவ தாயார் கிளி ஏந்தி இடுப்பில் சாவிகொத்து வைத்திருக்கிறாள்.

ஆழ்வாரின் குரு நாதர்large_025534869

குறு நில மன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் பெருமாள் மீதுள்ள பக்தியால் தன் பணத்தை இறைப்பணிக்கே செலவிட்டார். வைணவர் அல்லாத அவரை யாரும் ஏற்கவில்லை. மனம் கலங்கிய அவர் இங்கு வந்து பெருமாளிடம் தன்னை ஏற்கும்படி வேண்டினார். பெருமாளும் ஆச்சார்யனாக வந்து முத்ராதானம் செய்து வைத்தார். [ முத்ராதானம் என்பது வைணவர்களின் கைகளில் சங்கு சக்கர முத்திரை பதிப்பது ]

கல் கருட சேவைGarudasevai18a

இங்குள்ள கருடாழ்வார் கல் கருடனுக்கு ஆறு காலமும் மோதக நைவேத்யம் படைக்கப்பட்டு பூஜை நடக்கும். கல் சிலையாக இருக்கும் இவரே வீதியுலா செல்கிறார். கருவரையில் இருந்து  வெளியே எடுத்துவரும் போது முதலில் 4 பேர் சுமப்பர் திடீரென கருடனின் எடை கூடிக்கொண்டே இருக்கும் எனவே 8.16, 32  என அதிகமாகி இறுதியில் பலரும் சுமப்பர். மீண்டும் கருவறை திரும்பும் போது எடை குறையக் குறைய ஆள் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

இருப்பிடம்   கும்பகோணம்  திருவாரூர் சாலையில் பத்து கிமீ

Advertisements

One thought on “சாவி கொத்துடன் லட்சுமி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s