எல்லோரும் கொண்டாடுவோம்

1_311

நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்கள் ரமலான் மாதத்தை ‘ ஷஹ்ரே அஜீம் ‘ என்றும் ‘ ஷஹ்ரே முபாரத் ‘ என்றும் குறிப்பிட்டார்கள். இந்தச் சொற்களுக்கு கண்ணியம் நிறைந்த மாதம் என்று பொருள். இந்த மாதத்தின் பெருமையை அளவிட வார்த்தைகள் இல்லை. இறை நம்பிக்கையாளர்களுக்கு இனிய மாதம் இது  இந்த மாதத்தில் அருமையாக  நோன்பிருந்து அவற்றின் பலனை அறுவடை செய்யும் கட்டத்தில் இருக்கிறோம். இதன் பலன் பற்றின் அண்ணலார் அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரமலான். இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படியும் உணர்வை அளிப்பது இந்த புனிதமாதம்  இறைவனின் அருளைப் பெற வேண்டும் என்பதற்காக பசி தாங்கி இம்மாதத்தில் நோன்பிருந்தார்கள். பசியின் கொடுமையை உணர்ந்தால் தான் பிறர் பசி தீர்க்கமுடியும் என்ற எண்ணத்தை அருளும் ஒப்பரிய மாதம் இது. அத்துடன் ஏழைகளுக்கு அள்ளி வழங்க அரிய சந்தர்ப்பத்தையும் தந்தது இந்த நல்மாதம்.

downloadரமல் என்றால் கரித்தல்   ஆம்   நம் பாவங்கள் நோன்பிருந்ததன் மூலம் சுட்டுப் பொசுங்கியிருக்கும். நோன்பிருப்பவர்களின் முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்ற அண்ணலாரின் கூற்றுப்படி அதற்குரிய பலனையும் அடைந்த மகிழ்ச்சியுடன் ர்ம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுகிறோம்.

“ நோன்பு பொறுமையில் பாதி  பொறுமை இறை நம்பிக்கையில் பாதி “ என்கிறார் நபிகள் நாயகம் அவர்கள். இஸ்லாமின் பல தூண்களில் நோன்பு தனித்துவம் பெறுகிறது. ஏனெனில்  நோன்புக்கும் இறைவனுக்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. இதை நபிகள் நாயகம் அவர்கள் மூலமாக இறைவனே கூறுகிறான்.

“ நோன்பைத் தவிர்த்து மற்ற நற்செயல்கள் ஒவ்வொன்றும் பத்திலிருந்து எழுபது மடங்கு கூலி பெறும். ஆனால் நோன்பு எனக்காக நோற்கப்படுகிறது. அதற்குக் கூலி நானே கொடுப்பேன் “ என்கிறார்.

மற்ற நற்செயல்களுக்கு அளவீடு இருக்கிறது. இறைவனே கூலி தருகிறான் என்றால் அதன் அளவை எதைக்கொண்டு மதிப்பிட முடியும்  எனவே இறைவனின் கட்டளையை ஏற்று நற்சிந்தனைகளுடன் நோன்பிருப்பவர் அடையும் பலனுக்கு அளவுகோல் இல்லை.

வாயைத் திறந்தால் கெட்ட நாற்றமுள்ள காற்று வரலாம்  ஆனால் நோன்பாளிக்கு இதிலிருந்து விதிவிலக்கு தரப்பட்டிருக்கிறது. ஒரு வேளை கெட்ட காற்றே வந்தாலும் அது நறுமணம் மிக்கது எனப்தன் அடிப்படையில் “ எவன் கையில் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக  நோன்பாளியின் வாயிலிருந்து வரும் காற்று அல்லாஹ்வின் முன் நறுமணமுள்ள கஸ்தூரியைவிட அதிக வாசனையுள்ளதாகவும் அல்லாஹ்வுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும் “ என்கிறார் நபிகளார்.

Ramadan-Ramzan-Wishes-280713இறைவன் சொல்லுவதை கவனியுங்கள்  “ நோன்பாளி எனக்காக உண்பதையும் பருகுவதையும் விலக்குகிறான்  உணவாசையை அடக்குகிறான். எனவே நானே அவனுக்கு கூலி கொடுப்பேன் “ என்கிறான்  ஆம் ………………….. இந்தக் கூலியை இறைவனிடமிருந்தே பெற நாம் தயாராகிறோம். ரம்ஜான் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவோம். ஜூன் 19ம் தேதியிலிருந்து புனித ரம்ஜான் நோன்பு துவங்கிவிட்டது   ஜூலை 18ம் தேதி ரம்ஜான் பண்டிகை

நன்றி    ஆன்மீக மலர்

உலகிலுள்ள அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

Advertisements

2 thoughts on “எல்லோரும் கொண்டாடுவோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s