மும்மாடக்கோயில்

68_big

உலகளந்த உத்தமன் எம்பெருமான் அமர்ந்த சயன நின்ற கோலங்களில் அருள்பாலிக்கும் திருத்தலம் பரமேஸ்வர விண்ணகரம்.     மூலவர் வைகுண்ட பெருமாள் பரமபத நாதர் என்றும் தாயார் வைகுந்தவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மணல் பாறையால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில் சுவாமி கருவறை  முதல் பிரகாரம் ஆகியன குடைவறையாக உள்ளன. இக்கோயில் மும்மாடக்கோயில் எனப்படுகிறது. முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கி தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் இணைந்திருக்கும் அரசு வேம்பு மரங்களுக்கு கீழே ஆதிசேஷன் காட்சி தருகிறார்.

முற்காலத்தில் விதர்ப்ப தேசம் எனும் இப்பகுதியை விரோசனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான் இம்மன்னன் முற்பிறப்பில் பெற்ற சாபத்தினால் புத்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டு குழந்தையின்றி இருந்தான். சிவபெருமானின் தீவிர பக்தனான இவன் புத்திரபாக்கியம் வேண்டி காஞ்சி கைலாச நாதரை யாகம் செய்து வழிபட்டான். மன்னனுக்கு அருள் செய்த சிவபெருமான் மகாவிஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரையும் மகன்களாக பிறக்கும்படி அருள் செய்தார்.

இவர்கல் இருவரும் இளவரசர்களாக பிறந்து விட்டாலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி  மட்டும் மாறாமல் இருந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக பல விரதங்களைக் கடைப்பிடித்த இவ்விருவரும் விஷ்ணுவை வேண்டி இத்தலத்தில் ஒரு யாகம் செய்தனர். இவர்களது பக்தியில் மகிழ்ந்து மஹாவிஷ்ணு  ஸ்ரீ வைகுண்ட நாதனாக இத்தலத்தில் காட்சி தந்தார் என்பது தல புராணம்.

65_bigஒரு சமயம் பார்வதி லட்சுமி சரஸ்வதி ஆகியோர் ஒன்றாக பூலோகத்துக்கு வந்து தவம் செய்தனர். அவர்களுக்கு அத்திரி  பிருகு காசிபன் கவுண்டில்யன் திரியோரிஷேயன் பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர். முத்தேவியரையும் அழைத்துச் செல்ல சிவன் மஹாவிஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வர ரிஷிகளின் தவ வலிமை தேவியர்களை நெருங்க முடியாதபடி செய்தது. மூவரும் சேர்ந்து ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர்  பரத்வாஜர் அவள் மேல் மையக் கொள்ள அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

மஹாவிஷ்ணு வேடுவ வடிவெடுத்து அக்குழந்தைக்கு பரமேச்சுரவர்மன் எனப் பெயரிட்டு வளர்த்தார். திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரவர்மனுக்கு அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொடுத்தார் மஹாவிஷ்ணு. அவனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. அவனது ஆயுட்காலத்தை அதிகரிக்க விரும்பிய மஹாவிஷ்ணு எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுத்துக்கொண்டார். பொதுவாக வடக்கே தலைவைத்து படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர். மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகைக் காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிரார் என்றால் என்ன ஆகும்/

downloadஅவரது  நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி வேண்டினான். அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் எமன் விழித்தபோது தன் பக்தன் பரமேச்சுரவர்மனின் ஆயுளை நீட்டித்தால் தான் எழுந்திருப்பதாகக் கூறினார். பக்தனுக்காக இரங்கும் மஹாவிஷ்ணுவின் உயிரை எடுக்காமல் தீர்க்காயுள் கொடுத்து சென்றான். இதைக்கண்ட பரமேஸ்வரன் நமக்குத் தந்தையாக இருந்த வேடுவரை நோக்கி தாங்கள் யார் எனக் கேட்க அவர் அவனுக்கு மஹாவிஷ்ணுவாகக் காட்சிக்கொடுத்தார். மகிழ்ச்சியுற்ற அவன் இத்தலத்தில் பெருமாளின் அமர்ந்த சயன நின்ற கோலங்களை  ஒவ்வொரு நிலையில் வைத்து மும்மாடக்கோயிலாக கட்டினான் என்கின்றனர்

திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமானை மங்களாசாசனம் செய்யும்போது பல்லவர்கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரமதுவே என அனைத்து பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமைகளச் சேர்த்து பாடியுள்ளார்.

large_134458222வைகுண்டப்பெருமானை வேண்டிக்கொள்ள திருமண புத்திர பாக்கியங்கள் விரைவில் கைகூடும்  என்பதும் பாவங்களைப் போக்கி வைக்குண்ட பதவியையும் தந்தருளுவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை  நேர்த்திக்கடனாக சுவாமிக்கு சர்க்கரைபொங்கல் தயிர்சாதம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து நெய் தீபம் ஏற்றலாம்

செல்லும் வழி    காஞ்சீபுரம் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது கோயில்

நன்றி   தீபம்

Advertisements

2 thoughts on “மும்மாடக்கோயில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s