பாபா சொன்ன கதை

download (2)

பக்தியை ஊட்டும் விதத்தில் சாயிபாபா பல கதைகள் சொல்வார். அதில் ஒரு கதை மிகவும் சுவாரஸ்யமானது.

கிருஷ்ணா மீது பாமா ருக்மணி இருவருக்கும் கொள்ளை ஆசை. ஆனால் பாமா அவரைத் தன்னுடன் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பா. இதற்காக நாரதரின் உதவியை நாடினாள்.

கடவுளை யாரும் தனக்குச் சொந்தமென உரிமை கொண்டாட முடியாது அவர் எல்லோருக்கும் பொதுவானவர் இது நாரதருக்கு தெரியும் இருப்பினும் பாமாவிடம் நேரில் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டாள். ஏதாவது உபாயம் செய்து புரியவைக்க வேண்டும் என முடிவு செய்தார்.

krishnaபாமா நீ கிருஷ்ணனை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும் பிறகு ஒரு தராசு தட்டில் அவரது எடைக்கு எடை தங்கம் வைக்க வேண்டும் அதைத் தானம் பெற்றவரிடம் கொடுத்து மீட்டுக்கொள்ள வேண்டும் இப்படி செய்தால் கிருஷ்ணன் எப்போதும் உன் சொந்தம் தான் என்றார் அந்த கலகக்கார முனிவர்.

பாமாவும் அதை நம்பி தங்கத்தை கொண்டு வந்து கொட்டினாள். உஹூம் தராசு முள் அசையவே இல்லை. நேராக ருக்மணியின் அறைக்கு ஓடினாள்  நிலைமையைச் சொன்னாள்  ருக்மணி அங்கு வந்து நாரதரிடம்  கிருஷ்ணனை பணத்தால் வாங்க முடியாது  ஒரே ஒரு முறை கிருஷ்ணா என பக்தியுடன் சொல்லி ஒரு இலையோ பழமோ  எடுத்து அவனுக்கு படைத்தால் போதும் தராசு சரியாகி விடும்  அவனது திரு நாமம் தான் அவனது எடைக்கு நிகரானது என்றாள்.  நாரதர் சிரித்தார்.

sri-krishnar-2b1உருவமுள்ள இறைவனுக்கு உருவமற்ற ஒரு பெயர் எப்படி சமமாக முடியும்? இதெல்லாம் நடக்கப் போவதில்லை. இருந்தாலும் முயன்றுபார் என்றார். ருக்மணி தான் சொன்னபடியே கிருஷ்ணா என மனதார சொல்லிக்கொண்டு ஒரே ஒரு துளசி இலையை எடுத்து வைத்தாள்  ருக்மணியின் அன்பு பக்தி தூய மனம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டார் கிருஷ்ணர். எடை சமமாகி விட்டது.

இந்தக் கதையை சொன்ன சாயிபாபா தூய பக்தியே ஆன்மிகத்தின் ஆணிவேர் ஆன்மிகவாதிகளுக்கு தானே உயர்ந்த பக்தியுடையவன் என்ற ஆணவம் கூடாது  எளிமையும் அடக்கமும் இறைவன் அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும் என்றார்.   நிஜம்தானே?

Advertisements

2 thoughts on “பாபா சொன்ன கதை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s