நியூ[ஸ்]மார்ட்

feature25-570x290

மிமிக்ரி என்ற பல குரல் கலை மனிதனுக்கு மட்டுமே சொந்தமில்லை. ஆஸ்திரேலியாவில் காணப்படும் தார்ன்பில் பறவை உருவத்தில் மிக சிறியது. ஆனால் தன்னுடைய குஞ்சுகளையும் கூட்டையும் பாதுகாப்பதற்கு ஒரு புதிய உத்தியை பயன்படுத்துகிறது. ஆம் பல குரல்களில் மிமிக்ரி செய்யும் திறன் கொண்டது இது. எனவே தன்னையும் தன் குஞ்சுகளையும் வேட்டையாட வரும் பறவைகளை விரட்ட மற்ற பெரிய பறவைகளைப் போல ஒலி எழுப்பி அச்சுறுத்துகிறது. இதனால் அவை ஓடிவிடுகின்றன.

jobsஆப்பிள் கம்ப்யூட்டர்  நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் தனது நண்பர்களுடன் இணைந்து 1976ல் ஆப்பிள் ஒன் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை கைகளால் இணைத்தே உருவாக்கினார். இந்த வகை கம்ப்யூட்டர்கள் மொத்தம் 200 மட்டுமே செய்யப்பட்டதால் இப்போது அரிய வகை பொருட்களில் ஒன்றாக கருதபடுகின்றன. இதன் மதிப்பு கோடி ரூபாய்களுக்கு மேல். இந்த கம்ப்யூட்டரை அதன் இப்போதைய மதிப்பு தெரியாமல் ஒரு பெண் பழைய மின்னணு பொருட்களை எடைபோட்டு வாங்கும் கடையில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அமெரிக்க சட்டப்படி இதுபோன்ர தொன்மை வாய்ந்த பொருட்கள் தவறுதலாக கிடைத்தால் அதன் உரிமையாளருக்கு பாதி தொகையை வழங்கவேண்டும்  அந்தப் பெண் முகவரி எதுவும் தராததால் அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

215373_first_skull_and_scalp_transplantஉலகிலேயே மண்டையோடு  தலையின் மேல்தோல் இவற்றுக்கான மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நபர் என்று பெயரை ஜேம்ஸ் பாய்சென் என்ற 55 வயது அமெரிக்க மென் பொறியாளர் பெற்றுள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சிகிச்சை அளித்ததில் மண்டையோட்டில் காயம் ஏற்பட்டு பெரிதானது. இதை தொடர்ந்து மண்டையோட்டை தானமாகப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய எம் டி ஆண்டர்சன் புற்று நோய் மையம் மற்றும் ஹூஸ்டன் மெதாடிஸ்ட் மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர்.  15 மணி நேரம் நடந்த இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சையில் பழுதடைந்த மண்டையோட்டு எலும்பு மற்றும் தலையின் மேல் தோல் ஆகியவற்றை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியுள்ளனர். வெறும் திசுக்களை மட்டுமன்றி நியூட்ரியன்ட் ரத்தக்குழாய்களுடன் சேர்த்து மேல் தோலையும் பொருத்தியிருக்கிறார்கள்.

downloadமுன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு வங்க தேசம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. அண்மையில் வங்கதேசம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி வாஜ்பாய் சார்பில் விருதினைப் பெற்றுக்கொண்டார். 1971ம் ஆண்டு  பாகிஸ்தானிடமிருந்து விடுதலை அடைவதற்கு வங்க தேசம் போராடியபோது அந்த போராட்டத்துக்கு அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த வாஜ்பய் ஆதரவு அளித்ததால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ameenah-gurib-fakim-lமொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக அமீனா குரிப் பாகிம் தேர்ந்தெடுப்பட்டுள்ளார். மொரீஷியஸின் அதிபராக இருந்த கைலாஷ் புர்யாக் அண்மையில் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து  புதிய அதிபராக உயிரியல் விஞ்ஞானி அமீனா குரிப் பாகிமினை பிரதமர் சர் அனிருத் ஜெகனாத் அறிவித்தார்.  அவரது நியமனம் தொடர்பாக மொரீஷியஸ் நாடாளுமன்றத்ஹ்டில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அமீனா குரிப் பாகிமினுக்கு ஆதரவாக பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்ததால் அவர் முறைப்படி பதவியேற்றார்.

Advertisements

One thought on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s