கூர்ம ஜெயந்தி

32

பாற்கடல் நாதனான பரந்தாமனின் தசாவதாரங்கள் பற்றி நாம் படித்திருக்கிறோம். மச்ச கூர்ம வராக நரசிம்ம வாமன பரசுராம ராம பலராம கிருஷ்ண கல்கி எனப்படும் இந்த ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு கிரகத்துக்குரியது. அதாவது சூரியன் ராமன் சந்திரன் கிருஷ்ணன் செவ்வாய் நரசிம்மன்…………… இந்த வரிசையில் சனிக்குரியவராகக் கருதப்படுபவர் கூர்மாவதார மூர்த்தி.

அவதாரமாக கூர்மத்தைப் பற்றி படித்ஹ்டிருக்கிறோம். அமிர்தம் வேண்டி  தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது மந்திரமலை சற்றே சாய்ந்தது. எல்லோரும் அச்சத்தில் பகவானை எண்ணி துதித்தார்கள். அவர் பெரும் கூர்மமாக வடிவெடுத்து மலையைத் தாங்கினார். அதன் பிறகு ஆலகால விஷமும் அதையடுத்து அமிர்தமும் வெளிப்பட்டன என்பதெல்லாம் புராணம்.  இதிலிருந்து நாம் நிறைய தெரிந்து கொள்ளலாம்

5709796எவரையும் எதிரி என்று பகைக்காதே  அலட்சியப்படுத்தாதே எவரின் உதவி என்று தேவைப்படும் என்பதை யாரும் அறிய முடியாது. வலிமை வாய்ந்த தேவர்களும் அசுரர்களின் தயவை தேட வேண்டி வந்தது என்பதை எப்போது மறக்காதே என்றொரு அறிவுரை.

நம் முயற்சியை குறைவின்றி செய்வதாலேயே அது கைகூடிவிடும் என்பது  நிச்சயமில்லை மத்தாகப் பயன்பட்ட மலையே சாய்ந்தபோது பகவான் தான் உதவ  நேரிட்டது. அதுபோல் உன்னுடைய பலமும் உதவிகளும் எவ்வளவுதான் துணை செய்தாலும் பகவானின் அருள் கண்டிப்பாகத் தேவை  எனவே எப்போதும் இறைவனிடம் உன்னை வைத்திரு  அதுதான் வெற்றி ஏற்படுத்தும்.

இறையருள் துணையிருப்பதால் எவ்விதத்திலும் கர்வம் ஏற்பட்டுவிடக்கூடாது. உன் செயலின் விளைவுக்கு முன் எதிர்பாராதவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆலகால விஷம் போல எதிரிடையான பலன்கள் ஏற்படலாம். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் இருந்தால் அதற்கும் தீர்வாக இன்னொரு வழியும் தென்படும். அமிர்தம் கிட்டியது போல காரியமும் கைகூடும். இப்படி வாழ்வியலின் எல்லாம் கூறுகளுக்குமான செய்தி இந்தப் பாற்கடல் கடைவதில் இருக்கிறதல்லவா/mqdefault

இன்னொரு விஷயமும் இதில் உண்டு. மலையை ஓர் ஆமை தாங்க முடியுமா? ஆபத்துக்காலத்தில் தன்னுடைய தலை நான்கு கால்களென ஐந்து உறுப்புக்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது ஆமை. அப்படி இவ்வுலகில் ஆசைகளில் சிக்கிக் கொள்ளாமல் புலன்களை உள்ளிழுத்துக்கொண்டால் கடினமானதாகத் தோன்றும் சம்சாரமும் உன்னால் தாங்கப்பட்டுவிடும் என்கிற சூட்சமும் அதில் இருக்கிறது.

srikakulamசிறப்புடைய கூர்ம மூர்த்திக்கான தனிக்கோயில் ஆந்திர மானிலம் ஸ்ரீகாகுளத்தில் அமைந்திருக்கிறது. புராதனப் பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது இவ்வாலயம். இர்ண்டு துவஜஸ்தம்பங்கள் தினமும் அபிஷேகம்  அஜந்தா ஓவியங்கள் போன்றே புராதனமான ஓவியங்கள்   கூர்ம புராணம் பத்ம புராணம் பிரம்மாண்ட புராணம் உள்ளிட்ட புராணங்களில் குறிப்பிடப்படுவது  கருட வாகனத்தில் அமர்ந்த கூர்ம நாயகி  சக்கரத்தால் தோற்றுவிக்கப்பட்ட ஸ்வேத புஷ்கரணி  நுண்ணிய கல்வேலைப்பாடுகள்  தூண்களின் நேர்த்தி  பிரம்மாவால் ஆராதிக்கப்பட்ட சுயம்பு கூர்ம நாதருக்கு உலகில் அமைந்த ஒரே ஆலயம். இப்படி பல்வேறு சிறப்புகள் இத்தலத்துக்கு உண்டு.

செல்லும் வழி    சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்  உள்ள ஸ்ரீகாகுளத்தில் இருந்து 12 கிமீ  பேருந்து வசதி உண்டு.

Advertisements

One thought on “கூர்ம ஜெயந்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s