எப்படி வந்தது இந்தப் பெயர்?

பட்டுக்கோட்டைpattukottai_1813413g

பட்டு மழவராயர் என்ற சிற்றரசர் கோட்டை கட்டி அரசாட்சி புரிந்த ஊர் பட்டுக் [மழவராயர்] கோட்டை ஆனது இதை  நிரூபிக்கும் வகையில் இவ்வூரில் கோட்டைக்குளம் கோட்டை சிவன் கோயில் கோட்டைப்பெருமாள் கோயில் என்ற இடங்களும் அருகில் மழவராயன் கோட்டை என்ற கிராமமும் உள்ளன.

திருநெல்வேலிTamil-Daily-News-Paper_90108454228

ஒரு சிவபக்தர் இறைவனது நிவேதனத்திற்காக வெயிலில் நெல் உலர்த்தி இருந்தார். அப்போது மழை பெய்ய ஆரம்பிக்க இறைவன் அந்த நெல் நனையாமல் இருக்க அந்த இடத்திற்கு மட்டும் வேலி அமைத்ததால் அந்த நெல்வேலியாகி பிறகு திரு என்ற அடைமொழி சேர்த்து திரு நெல்வேலி ஆகியது.

மயிலாடுதுறை019pzz000000760u00000000svc2

உமை பார்வதி மயில் உருவம் எடுத்து ஆடி இறைவன் கரம் பற்றிய ஊர் மயிலாடுதுறை. வட மொழியில் மயூரம் என்று பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வரும் இவ்வூர் மாயவரம் என்றும் வழங்கப்படுகிறது.

கும்பகோணம்  குடவாசல்_13606666990

தேவர்கள் கடைந்த அமிர்தம் நிறைந்த கும்பம்  [ கலசம் ] பிரளயத்தில் அடித்து செல்லப்பட்டு அதன் உடைந்த மூக்குப் பகுதி ஒதுங்கிய இடம் குடமூக்கு என்ற கும்பகோணம். குடத்தின் வாய் பகுதி சேர்ந்த இடம் குடவாயில். தற்போது குடவாசல் என்று அழைக்கப்படுகிறது.

பொள்ளாச்சிtblelectionnews_15976679326

பொருள் அதாவது தனம் ஆட்சி செய்ததால் பெரும் தனவந்தர்கள் வாழ்ந்ததால் பொருளாட்சி ஆகி பின்பு பொள்ளாச்சி ஆனது.

மும்பைdownload

இந்த ஊரின் செழிப்பிற்கு காரணமான மும்பா தேவி இங்கு குடிகொண்டிருப்பதால் இவ்வூர் முதலில் பம்பாய்  என்று அழைக்கப்பட்டு தற்போது மும்பை ஆகியுள்ளது.

மூணாறுmunnar

கேரள மானிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பிரபலமான சுற்றுலாத்தலம். இங்கு முதிராப்புழா நல்லதண்ணி  குண்டலி என்ற மூன்று ஆறுகள் ஓடுவதால் மூணு + ஆறு    மூணாறு என்று வழங்கப்படுகிறது.

நன்றி     வெ  சியாமளா ரமணி    செகந்திரபாத்

Advertisements

One thought on “எப்படி வந்தது இந்தப் பெயர்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s