இந்து சமாஜ் மந்திர்

download

நியூ ஜெர்ஸி மாகாணத்துக்கு வடக்கே ராமபோ மலைத்தொடர் ராமபோ நதிக்கிடையே மேற்கு மாவா நகரில் உள்ள இவ்வாலயம் பார்ப்பதற்கு ஒரு வீடு போன்றே தோற்றமளிக்கிறது. இங்குள்ள மற்ற கோயில்களைப் போல் இதற்குத் தனியாக ராஜகோபுரம் கிடையாது.  கட்டத்தின் மேல் கூரையில் கூம்பு வடிவில் காங்கிரீட் கம்பங்கள் கோபுரம் மாதிரி நிறுவப்பட்டுள்ளன.

Hindu-Samaj-Temple-of-Mahwah-4பழங்குடியினரான அமெரிக்க இந்தியர் மொழியில் மாவேவே என்பதற்கு ஒன்றுகூடும் இடம் எனப் பொருள். அனைத்துத் தரப்பு மக்களும் மத வேறுபாடின்றி வந்துக் குவியும் இக்கோயிலுக்கு இது ஏற்ற பெயர்தான். வெகு சுத்தமாகப் பராமரிக்கப்படுகிற இந்த ஆலயச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும்  வண்ண மயில் ஓவியங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. சிற்ப வேலைப்பாடுகள் அவ்வளவாக ஒன்றுமில்லை.

hqdefaultநான்கு  பகுதிகளாக இக்கோயில் அமைந்துள்ளது. நுழைவாயிலுக்கு எதிரே உள்ளது. விசாலமான கருவறைக்கூடம். மேல் விதானம் நீல நிற வான்வெளியில் மேகக்கூட்டம் பரவியிருப்பது போன்று ஓவியம் தீட்டப்படிருப்பது விளக்கொளியில் பிரகாசிக்கிறது. இதன் நாற்புறமும் ராம பரிவார்  சிவன் பார்வதி வினாயகர் விஷ்ணு லக்ஷ்மி ராதா கிருஷ்ணர்  சரஸ்வதி அனுமன் பாலாஜி சாய்பாபா ஆகிய 22 தெய்வங்களின் சன்னதிகளையும் நடு நாயகமாக துர்கா தேவி வீற்றிருந்து அருளுவதையும் தரிசிக்கலாம்.

22lookஆலயத்தின் முதன்மை பண்டிதர் சந்திரசேகர சர்மாஜி கூறுகையில் “ துர்கா தேவிதான் இங்கு முக்கிய ஆராதனிக்கு உரியவள்” என்கிறார். சமண சமயத்தினர் வழிபட வர்த்தமான மஹாவீரர் சன்னதிகள் நிறுவப்பட்டுள்ளன. சிலைகள் அனைத்தும் வெண்மை நிற சலவைக்கற்களால் ஜெய்ப்பூரில் வடிக்கப்பட்டவை. தியானம் ஹோமம் செய்வதற்கும் உபன்யாசங்கள் நடக்கவும் தனியிடங்கள் உள்ளன.  இவ்விடத்துக்கு ஒற்றுமை நிலவும் கோயில் தர்பார் எனப் பெயர்.  இரண்டாவது இந்திய பாரம்பரிய மிக்க சமூக நலக் கூடம். இங்கு இயல் இசை நாடகங்கள் திருமண நிகழ்ச்சிகள் நடத்தவும் மூத்த குடிமக்களுக்கு உரிய வசதிகள் குழந்தைகளுக்கான பாலவிஹார்  யோகா வகுப்புக்கள் மேற்கொள்ளவும் இந்திய மொழிகள் கற்பிக்கவும்  பரதம் கதக் குச்சுபுடி பாங்க்ரா நாட்டியம் இந்துஸ்தானி கர்னாடா சங்கீத வகுப்புக்கள் நடத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் சமண வகுப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மூன்றாவது  அருங்காட்சியகம் பகுதி. வட இந்தியாவிலிருந்து இங்கு குடியேறியவர்களின் பின்னணி அவர்கள்  மேற்கொண்ட முயற்சிகல் முக்கிய இந்தியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு முதலியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  நான்காவது கங்கா சாகர் திட்டம். இங்குள்ள மற்ற கோயில்களுக்கு அமையாத ஒரு சிறப்பு இவ்வாலயத்துக்கு உண்டு. ஆம்   கோயிலுக்கு என்று அதையொட்டி ஒரு புனித தீர்த்தம் அமைந்துள்ளது.  இக்குளம் இயற்கையாக ஏற்பட்டதாகும். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் வானிலிருந்து விழுந்த எரி கற்களால் உண்டான பள்ளமே பின்னர் ராமபோ நதியின் வளத்தால் ஊற்றெடுத்து குளமாக மாறிவிட்டதாம். அருகில் ஓடும் நதியின் நீர் மட்டத்தைவிட இக்குளத்தின் நீர் அளவு எப்போதும் உயர்ந்தே காணப்படுவது மற்றொரு அதிசயம். இதைச் சுற்றி   நந்தவனம் திறந்தவெளி அரங்கம் சிற்பக்கலைக்கூடம்  நிறுவவும் திட்டமுள்ளது. புனித கங்கை நீரைக் கொண்டு வந்து இதில் கலக்கவும் ஒரு யோசனை இருக்கிறது என்கிறார் செயலாளர்  மோஹன் கண்ணா.

download (1)கோயிலில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் பாதாம் பருப்பு உலர்ந்த பழ வகைகளையே  கொண்டுவருமாறு அறிவுறுத்துகிறார்கள். அப்படியே பழம் தேங்காயை நிவேதனம் செய்த பிறகு அவற்றை வளாகத்தில் வேறு எவருக்கும் வினியோகிக்ககூடாது . உடல் நலம் சுகாதாரத்தை முன்னிட்டு எவரும் வாங்கிக்கொள்வதும் இல்லை.

Hindu-Samaj-Temple-of-Mahwah-3அனைத்து பண்டிகைகளும் முக்கியமாக ஹோலி  தசரா தீபாவளி கர்வா சௌத்  ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன,  செவ்வாய் மாலை அனுமான் சாலீசா  புதன் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் நடக்கிறது.  வியாழன் சாய்பாபா சாஸ்தா பூஜையும் சனிக்கிழமை காலை நவக்கிரஹ ஹோமம்  ஞாயிறு காலை காயத்ரி ஹோமமும் நடக்கின்றன.  ஒன்றிலிருந்து பதினைந்து வயது சிறார்களின் பிறந்த நாள் விழா மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தோறும் துர்கா மாதா சன்னிதியில் கோயில் செலவிலேயே நடத்தப்படுகிறது. பரிசுப்பொருட்களும் தேவஸ்தானமே தருகிறது. எவரும் குழந்தைகளுக்கு பரிசு கொண்டுவரக்கூடாது என்பது விதிமுறையாகும்.

அமைவிடம்    247 மேற்கு ராமபோ அவென்யூ  மாவா நியூ ஜெர்ஸி

நன்றி   பா   கண்ணன்  நியூ ஜெர்ஸி

Advertisements

One thought on “இந்து சமாஜ் மந்திர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s