பாசியில் ஓர் ஆரோக்கிய புதையல்

spirlina_resize

ஸ்பெருலினா ஒரு நுண்ணிய நேரடியாக கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நீர்த்தாவரம். இது இயற்கையிலேயே முழுமையான போஷாக்கு நிறைந்த ஊட்டச்சத்து கொண்ட உப உணவாகும்.

இதில் உடல் வளர்ச்சிக்கு முக்கியமான புரதச்சத்து 55—65 சதவிகிதம் உள்ளது. ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது.

powder-main_3033817bஸ்பைருலினாவில் அனைத்து வகையான தாதுக்களும் அடங்கியுள்ளன. அவை உடலை சீராக இயக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. ஸ்பைருலினாவில் தாய்ப்பால் சுரப்பதற்குத் தேவையான தாது உப்புக்களாகிய மக்னீசியம்  கால்சியம் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளன.

download (1)கண் பார்வை சீராக இருப்பதற்கு வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை உண்பது அத்தியாவசியமானது. பிற உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது ஸ்பைருலினாவில் இச்சத்து அதிகம். வைட்டமின் பி6 மற்றும் பி 12 போன்றவை இதில் மிகுந்து காணப்படுவதால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையம் சீராகச் செயல்பட்டு இன்சுலினை தேவையான அளவு சுரக்கச் செய்கிறது. மற்ற உணவுப் பொருட்களைவிட ஸ்பைருலினாவில் 15 மடங்கு இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது ரத்தசோகை  நோய் வராமல் தடுக்கிறது. ஸ்பைருலினாவிலிருந்து நமது உடலுக்கு தேவையான கார்போஹைடிரேட் கிடைக்கிறது.

downloadகாமாலினோலினித் அமிலம்  [ ஜி எல் ஏ ] ஸ்பைருலினாவிலிருந்து நேரடியாக கிடைப்பதால் உடலில் கொழுப்புச்சத்து சீராக இருப்பதற்கு உதவிபுரிந்து உடல் பருமனைக் குறைக்கிறது. இதில் இருக்கும் சல்போலிப்பிட்ஸ் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக செயல்படுத்தும். ஒவ்வாமை போன்றவற்றிற்கு எதிராக மனித உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் திறன் படைத்தது. இயற்கை இரும்பும் ஃபோலிக் அமிலமும் உள்ளதால் ரத்தசோகை உள்ளவர்களும் இதை பயன்படுத்தலாம்.

நன்றி  எஸ் எஸ் ஹரிப்பிரியா   பெங்களூரு

மங்கையர்மலர்.

Advertisements

One thought on “பாசியில் ஓர் ஆரோக்கிய புதையல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s