பெத்தம்மா

DSC07548

ஆந்திர மானிலம் ஹைதிராபாத் மற்றும் செகந்திராபாத் நகரங்களுக்கிடையே உள்ளது ஜூபிளி ஹில்ஸ். இங்கு பக்தர்களுக்கு காவல் தெய்வமாக அருள் பாலித்து வருகிறாள் பெத்தம்மா தேவி. பெத்தம்மா என்றால் பெரிய அம்மா. அதாவது தாய்க்கெல்லாம் தாய் இவளே ஆதிபராசக்தி.

சுமார் 150 வருடங்களுக்கு மேலாக இந்தக் கோயில் இங்கு இருக்கிறது. என்று சொல்கிறார்கள் இதைப் பற்றி தீபம் இதழில் படித்தேன். இதே ஊரிலேயே இருந்து கொண்டு இன்றுவரை இதைப் பார்க்கவில்லையே என நேற்று மாலை நானும்  என் பிள்ளையும்  காரில் கிளம்பினோம். என் வீட்டிலிருந்து 15 கிமீ தூரத்தில் இது உள்ளது.  மதியம் 3 மணியிலிருந்து நல்ல மழைபெய்து ஓய்ந்திருந்தது.  நல்ல குளிர்ச்சியான மாலை நேரம். 45 நிமிட பயணத்தில் கோயிலை அடைந்தோம். மிகப் பெரிய கோயில் உள்ளூர் வாசிகள். 1993ல் தமிழ் நாட்டு பாணியில் ஒரு ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.Peddamma-Talli-Hyderabad-Junilee-Hills

துர்கா என்ற சொல்லுக்கு எளிதில் நெருங்க  முடியாதவள்  ஒரு வடிவத்துக்குள் அடக்கிப் பார்க்க முடியாதவள் என்று பொருள். இங்கு கருவறையில் பெத்தம்மாவின் உருட்டி விழிக்கும் கண்களிலும் சாந்தம் தெரிகிறது.  எட்டு கரங்களுடன் புலி வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் தேவி அருட்கடாட்சம் பொழிகிறாள். சாதாரணமாக பக்கவாட்டில் வாகனம் நிற்கும்  அதன்மேல்  நேர் வடிவாக அர்ச்சாவதாரங்கள் காட்சி தருவார்கள் ஆனால் இங்கு வித்தியாசமாக புலி நேராக வருவதைப்போல் நிற்கிறது. அதன் மேல்  இருபுறமும் கால்களைப் போட்டுக்கொண்டு  நேர்வடிவமாக தேவி. சிவனின் திரிசூலம் குமரப்பெருமானின் வேல்  பிரம்மாவின் வில் விஷ்ணுவின் சக்கரம் என அனைத்து தெய்வங்களின் பலத்தையும் பெற்று  மகிஷனை வதைத்த தேவி கருவறையில் சுதை வடிவமாக ஸ்தாபிக்கப்பட்டு இருக்கிறாள்.

பயக்ருத்  பய நாசினி இரண்டும் லலிதா சகஸ்ர நாமத்தில் வர்ணிக்கப்படும் தேவியின் இரண்டு நாமங்கள். பயக்ருத் என்றால் பயத்தை ஏற்படுத்துபவள்  பய நாசினி என்றால் பயத்தைப் போக்குபவள் தீயவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவளாகவும்  நீயே எனக்கு காப்பு என்று சரணாகதி அடைபவர்களுக்கு பயத்தை போக்குபவளாகவும் தேவி விளங்குகிறாள்.DSC07554

கயிலை நாதனின் நெற்றி கண்ணின் நெருப்புக்கும் அடங்காத மஹிஷாசூரனை வதம் செய்ய துர்கா தேவி அவதரிக்கிறாள். பிரம்மாவின் மூச்சிலிருந்து கிளம்பி அன்னவாகனத்ஹ்டில் அம்புடன் பிராஹ்மி விஷ்ணுவிடமிருந்து கருடவாகனத்தில் சக்கரத்துடன் வைஷ்ணவி சிவனிடமிருந்து காளை வாகனத்தில் திரிசூலத்துடன் மாகேஸ்வரி  குமரனிடமிருந்து மயில் வாகனத்தின் வேலுடன் கௌமாரி போன்றவர்கள் தோன்றி எல்லோரும் பெரிய போர் முழக்கத்துடன் வானில் உயர்ந்து ஒன்று சேர்ந்து கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்திலிருந்து சிம்ஹ வாகனத்தில் துர்கா தேவி ஆவிர்பவித்தாள். பராசக்தியின் ஆயுதங்கள் அசுரனிடம் பயனளிக்கவில்லை. கீழே இறங்கி வந்த பஞ்சினும் மெல்லடியாள் தனது பூப்பாதங்களால் மஹிஷனை உதைத்தாள். சக்தி தேவியின் கால் ஸ்பரிசம் கிடைத்தவுடன் உய்வு பெற்றான் அசுரன்  மந்தகாச வெற்றிப்புன்னகையுடன் இங்கு காட்சி தருகிறாள் பெத்தம்மா தேவி.

இந்தக் கோயிலில் கொடிமரம் உண்டு. நவராத்திரி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  இங்கு போனாலு உற்சவம் பிரசித்தி பெற்றது.  HY30BONALU--KAR_HY_1974989f

போனாலு  போனம் என்றால் போஜனம்  உணவு என்று பொருள். ஜூபிலி ஹில்ஸ் பகுதி பெத்தம்மா தேவியின் தாய்வீடு என்றும் அவள் பிறந்த வீட்டுக்கு வரும்போது மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி ஆடிப்பாடி சிறந்த ஆடை அணிமணிகளுடன் தேவிக்கு திருவிழா எடுக்கிறார்கள். தங்கள் ஊருக்கு வரும் துர்கா தேவிக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக சென்று சமர்ப்பிக்கிறார்கள்.

மண் அல்லது பித்தளை குடங்களை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் சந்தனம் பூமாலைகள் வேப்பிலை கொத்துக்கள் கொண்டு அலங்கரிக்கிறார்கள். அதன் உள்ளே அரிசி வெல்லம் பால் அல்லது மோர் நெய் தேன் என்று வைத்து தலைமேல் வைத்துக்கொண்டும் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாய் ஊர்வலமாக செல்கின்றனர். தாள கதிக்கு ஏற்ப போனாலு சுமக்கும் பெண்கள் ஆடிப்பாடுவது மிகவும் அழகிய காட்சி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி ஊர்வலமாக செல்கின்றனர்.potharaju

போதிராஜூ என்பவர் பெத்தம்மாவின் தமையன். நல்ல வாட்டசாட்டமாக உள்ள ஆண்கள் போதிராஜூ போல் மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணிந்து மஞ்சள் குங்குமம் தடவி மாலைகள் தரித்து கால்களில் சதங்கை கட்டி வாள் சாட்டை போன்றவற்றுடன் தாளத்துக்கு ஏற்ப ஆடுவது பார்க்க கண்கொள்ளாக் காட்சி  மிகவும் நீண்ட வரிசையாக ஊர்வலம் செல்லும் சிலருக்கு சாமி அருள் கிடைத்து  ஆடுகிறார்கள். அவர்கள் மேல் மஞ்சள் நீர் ஊற்றப்படுகிறது இந்த ஊர்வலத்தை பாலாஹாரம் பண்டி என்கின்றனர்.02hymsr01-Rangam_GB_155775e

ஒரு சிறிய செப்புக் குடத்தை பெத்தம்மா தேவியாக பாவித்து அழகாக ஆடை அணிமணிகள் கொண்டு அலங்கரித்து ஊர்வலத்தின் ஆரம்பத்தில் பூசாரிகள் சுமந்து வருகிறார்கள். இந்த போனாலு உற்சவம் மிகவும் விசேஷம்  இப்போது இங்கு உள்ளூர் விடுமுறை அளீக்கப்படுகிறது. இதற்கு மறு நாள் ரங்கம் என்ற நிகழ்வு  வயதான பெண்மணிகளுக்கு சாமி வந்து குறி சொல்லுகிறார்கள். வேறுபாடுகளைக் கடந்து எல்லோரும் வந்து ரங்கத்தில் குறி கேட்கிறார்கள்.DSC07542

தேவி மஹோத்சவம் ரதோத்சவம் போன்றவை பிப்ரவரியில் நடைபெறுகின்றன. ஆனால் இந்தக் கோயிலில் தினமும் திருவிழாதான். பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு வித்தியாசமான வழிபாடும் இங்கு நடைபெறுகிறது.

கொடி மரத்தைச் சுற்றி பளிக்கு கல் பதித்த தளம்  நிறைய பக்தர்கள் அதில் அமர்ந்து தேவியைத் துதித்தபடி ஒரு ரூபாய் நாணயத்தை நேராக நிற்க வைக்க முயல்கிறார்கள் காசு நேராக நின்றுவிட்டால் தமது எண்ணம் நிறைவேறும் என்பது இவர்களின் நம்பிக்கை. மிகவும் முனைப்புடன் மனதை சிதறவிடாமல் வயது வித்தியாசமின்றி பக்தர்கள் காசை நிறுத்த முயற்சிக்கின்றனர். செவ்வாய் வெள்ளி மாலை ஆரத்தி சமயம் அதிக பக்தர்கள் இப்படி செய்கிறார்கள் பல காசுகள் நின்றும் படுத்தும் அங்கு கிடக்கின்றன.  என் பிள்ளையும் இரண்டு காசுகளை சரியாக நிற்க வைத்தான்.  நான் முயன்றேன் முடியவில்லை. DSC07581

அங்கிருந்து கிளம்பி சுமார் 5 கிமீ தொலைவில் உள்ள ஜெகன்னாத கோயிலையும் தரிசித்துக்கொண்டு [ இது பூரி ஜெகன்னாத் கோவில் மாதிரியே கட்டியிருக்கிறார்கள் ]  வசந்த பவனில் இரவு உணவை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது மணி இரவு 9.30 ஆகிவிட்டது.  அம்மனை தரிசித்த திருப்தியுடம் உறங்கப்போனோம்.

Advertisements

3 thoughts on “பெத்தம்மா

  1. Nandraga ezhudhirkirai thaye:) Photogal rombo nandraga ullana. Thayaar Mugam karunai pozhigiradhu.. blog padipavar Ku kovil pona anubhavam kidaikum. Kindly ignore if any Tamil grammatical mistakes are there.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s