“ இந்த “ பிடிவாதம் நமக்கு வேண்டும்

download

கங்கையில் ஒரு துறவி நீராடிக்கொண்டிருந்தார். அப்போது வெள்ளத்தில்  தேள் ஒன்று தத்தளித்துக்கொண்டிருந்தது.  நீரில் மூழ்கி உயிர் போய்விடுமே என்று வருந்திய துறவி அதைக் காப்பாற்ற முயன்றார்.  அதனை தன் கையில் தூக்கினார். கொடுக்கினால் அவரது கையைப் பதம் பார்த்தது தேள். வலி தாங்காமல் அலறியதோடு தேளையும் ஆற்று வெள்ளத்திற்குள்ளேயே உதறிவிட்டார்.  ஆனாலும் அவர் மனதில் இரக்க எண்ணம் மட்டும் அகலவில்லை. மீண்டும் தேளை கையில் எடுக்கும் முயற்சியில் இறங்கி தோற்றுப்போனார்.  மீண்டும் மீண்டும் அதே நிலை தொடர்ந்தது.

கடைசி முயற்சியாக துறாவி வலியைப் பொறுத்துக்கொண்டு தேளினை தரையில் தூக்கிப்போட்டார். அது உயிர் பிழைத்து ஓடியது. அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் “ ஐயா ஜீவ காருண்யம் துறவிக்குரிய நல்ல குணம் தான் என்றாலும் உங்களுக்கே ஆபத்தான விஷயத்தில் இறங்குவது  நியாயம்தானா> “ என்று கேட்டனர்.

“ தேளின் குணம் கொட்டுவதுதானே   அற்ப ஜந்துவான தேளே தன் குணத்தில் பிடிவாதமாக இருக்கும்போது உயிர்களை எல்லாம் நேசித்து வாழவேண்டும் என்பதில் துறாவியான நானும் பிடிவாதமாக் இருப்பது சரிதானே?” என்றார். அவர் கருணை குணம் நிறைந்த அந்த துறவியின் கை பட்டதால் தேளும் மறுபிறப்பில் மனிதனாகப் பிறந்து ஞானத்தை அடைந்தது.

Advertisements

One thought on ““ இந்த “ பிடிவாதம் நமக்கு வேண்டும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s