சுருட்டப்பள்ளி

TN_111215113846000000

சிவனை நின்ற நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தான் பார்த்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை ஆந்திர மானிலம் சுருட்டப்பள்ளியில் தரிசிக்கலாம். இவரை பள்ளிகொண்டீஸ்வரர் என அழைக்கிறார்கள்.

சிவன் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடியபோது அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலங்கங்களும் நடுங்கத் தொடங்கின. பார்வதிதேவி  தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று யார் வேண்டியும் சிவன் கேட்பதாக இல்லை. சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டினார். அவரிடம் சிவன் “ நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “ என் தலையில் ஏறி ஆடுங்கள்  நான் தாங்கிக்கொள்கிறேன் “ என்று  நந்தி பதிலளித்தார். சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார். ஒருவர் எவ்வளவு பெரியவராயினும் அவர் எவ்வளவு கோபக்காரராயினும் அவரையும் கட்டுப்படுத்த ஒருவர் உலகில்  இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தைரியசாலிகளை இறைவனே விரும்புவர். அந்த வகையில் நந்தீஸ்வரன் சிவனின் அன்புக்குரியவர் ஆனார்.

சிவன் நடனமடிய அந்த நேரம் மாலைப்பொழுதாக இருந்தது. அன்று திரயோதசி திதி. அதாவது அமாவாசை அல்லது  பௌர்ணமிக்கு இரண்டு நாட்கள் முந்திய திதி. அந்த நாளிலேயே சிவலாயங்களில் பிரதோஷம் நிகழ்கிறது. பிரதோஷ தரிசனம் இங்கு சிறப்பானது. காரணம் இந்த தலம் தான் பிரதோஷம் பிறப்பதற்கே காரணமாக இருந்தது.54_big

பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள்  ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ‘ சர்வமங்களா ‘ என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள். இவளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும். சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.42

கோயில் ஆந்திராவில் இருந்தாலும் அர்ச்சகர்கள் தமிழில் பூஜை செய்கின்றனர்.  சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும்  அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.

திருவள்ளூர் திருப்பதி ரோட்டில் 60 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ளது.

Advertisements

One thought on “சுருட்டப்பள்ளி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s