டிப்ஸ் விருந்து

download

பிரட் காய்ந்துவிட்டால் அதைத் தூக்கிப் போடாமல் தண்ணீரில் நனைத்து மாவாகப் பிசந்து வைத்துக்கொள்ளவும். இரண்டு ஸ்பூன் கடலை மாவு  ஒரு சிட்டிகை உப்பு பொடியாக நுறுக்கிய வெங்காயம்  பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றை பிரட் மாவில் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து எண்ணெயில் விட்டுப் பொரித்து எடுத்தால் சுவையான பிரட் பக்கோடா ரெடி

5069ba8774c5b64afe000229._w.1500_s.fit_ஏ சி யிலிருந்து வெளியேறும் தண்ணீரை சேகரித்து செடிகளுக்கு ஊற்றினால் நன்கு வளரும். வெள்ளைத்துணிகளை நனைத்துத் துவைத்தால் பளிச்சென்று இருக்கும் க்ளீனிங் லிக்விட் போட்டு கலந்து தரையைத் துடைத்தால் பிசுக்குப் போய் சுத்தமாகும்.

அரிசி கழுவிய நீரில் உப்பு சேர்த்து கொதிக்கவைத்து வீக்கமுள்ள இடங்களில் ஊற்றி ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் வலி குறையும். அரிசி கழுவிய நீரில் பழைய புளியை ஊற வைத்து சாம்பார் ரசம் செய்தால் புதிய புளியில் செய்தது போல நல்ல நிறமாக இருக்கும்.

download (3)இரவில் செம்பு பாத்திரத்தில் நீர் நிறைத்து துளசி இலையைப் போட்டு வைக்கவும். மறு நாள் பல் தேய்த்தவுடன் குடித்து வர ஆஸ்துமாவிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

download (4)நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் ஏற்படும் அரிப்பை போக்க துளசி இலையை தேங்காய் பால்விட்டு அரைத்து தடவினால் குணமாகும்.

ht1362அத்திக்காய் சாறை தொடர்ந்து தடவி வந்தால் கால் ஆணி மறையும்

download (3)மஞ்சள்    வாழைப்பழம் இரண்டையும் மசித்து குழைத்து கண்கள் மேல் வைத்து பத்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால் வறண்ட தன்மை நீங்கும்  சுருக்கம் வராது  அரிப்பு நீங்கும்.

downloadஎலுமிச்சையில் லிமா நாய்டு என்ற வேதிப்பொருள் இருப்பதால் பல விதங்களிலும் பயன் தருகிறது. சாறு பிழிந்த பழத்தின் தோலை குழம்பிலோ ரசத்திலோ போட்டுவிட்டால் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும். எலுமிச்சை இலைகளை பொடி செய்து சாப்பிட உடல் புத்துணர்ச்சி பெறும்.

download (1)மாங்காய் தொக்கு இஞ்சித் தொக்கு என்று எதை செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் தொக்குகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

vittala தேங்காய் சாதம் செய்ய தேங்காய்ப் பால் எடுக்கும்போது கொஞ்சம் சமையல் உப்பைச் சேர்த்தால் நிறைய பால் கிடைக்கும்.

download (2)கொத்துமல்லித்தழை  புதினா துவையல் செய்யும்போது புளிக்கு பதிலாக தக்காளி வதக்கி அரைத்தால் சுவையாக இருக்கும்.

நன்றி மங்கையர் மலர் வாசகிகள்

Advertisements

One thought on “டிப்ஸ் விருந்து

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s