கல்யாண சாப்பாடு போடவா?

download

பக்தி மிக்க இளைஞர் நீலோபா பண்டரிபுரம்  பாண்டுரங்கன் கோயில் அருகில் வீடு. தம்புராவும் கையுமாக பண்டரி நாதனின் பாடல்களைப் பாடியபடி இருப்பார். நல்ல குணவதி நீலோபாவுக்கு வாய்த்தாள்.  அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது பெற்றோருக்குப் பின் விவசாயத்தில் கிடைத்த சொற்ப வருமானத்தில் காலம் சென்றது.  கொடி போல பெண்ணும் வேகமாக வளர்ந்தாள். நகை ஏதும் சேர்க்கவில்லையே என  நீலோபாவின் மனைவி வருத்தப்படுவாள். எல்லாம் பாண்டுரங்கன் பார்த்துக்கொள்வான் என்பார் நம்பிக்கையுடன்.

அந்த பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளையும் அமைந்தது. முகூர்த்த நாள் குறித்தாகி விட்டது. சமையல் மேளம் பந்தல் என்று அனைவருக்கும் அச்சாரமாக முன்பணம் கொடுத்தார். உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கி விட்டனர். ஆனால் சமையற்காரர்கள் மட்டும் கடைசி நிமிடம் வரை வரவே இல்லை.  என்ன செய்வதென்று தெரியாமல்  நீலோபா திக்கு முக்காடினார். நீலோபாவும் மனைவியும் வாசலில் ஆட்களை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

“ பாண்டுரங்கா இது என்ன சோதனை  “ என்று கண் கலங்கினார் நீலோபா/  உறவினர்களை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையில் அழுகை பீறிட்டது.  அப்போது விட்டை நோக்கி யாரோ ஒருவர் வேகமாக வருவது போலிருந்தது. கலைந்த கேசம்  கசங்கிய வேட்டி  துண்டு அணிந்தபடி இளைஞன் ஒருவன் வந்து நின்றான்.  அவன் நீலோபாவிடம் “ ஐயா உங்கலைப் பார்த்தால் கல்யாண வீட்டுக்காரர்போல் இருக்கு. எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? “ என்றபடி கைகளை நீட்டினான். “ அப்பா நானே சமையற்காரரைக் காணாமல் தவிக்கிறேன் இந்த நேரத்தில் உணவு கேட்கிறாயே “ என்றார்  நீலோபா.ST_20150117171108531383

“ ஐயா நீங்கள் அனுமதித்தால் நானே விருந்து நொடியில் தயாரிப்பேன் “ என்றான் அவன். தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு கிடைத்த மரத்துண்டு  கிடைத்ததுபோல இருந்தது அவன் பேச்சு. துணிவுடன் சமைப்பதற்கு அனுமதித்தார்.

இளைஞன் ஒரு வேண்டுகோள் விடுத்தான். “ சிறிது நேரத்திற்கு யாரும் சமையல் கட்டிற்குள் வரக்கூடாது. அதற்காக உங்களுக்கு தேவையான உணவு தயாராகி விடும்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.  என்ன ஆச்சர்யம்  முகூர்த்த வேலைகள் நடந்து கொண்டிருக்க உணவும் தயாரானது. அனைவரும் வயிரார சாப்பிட்டு பாராட்டினர். திருமணச்சடங்கில் ஈடுபட்டிருந்த நீலோபா நன்றியை தெரிவிக்க இளைஞனைத் தேடினார். அவனைக் காணவில்லை. “ மாயமாக இருக்கிறதே “ என்றபடி கோயிலை நோக்கி ஓடினார்.vittala

கண்களையே நம்ப முடியவில்லை. இளைஞனின் கசங்கிய வேட்டியும் துண்டும் ரங்கனின் இடுப்பில் இருந்தது.  அங்கே வந்தது பாண்டுரங்கனே எனப்தை அறிந்து பக்தியுடன் கீர்த்தனைகள் பாடினார். பாண்டுரங்கனின் லீலையை அறிந்த அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்.

Advertisements

One thought on “கல்யாண சாப்பாடு போடவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s