நிலை மாறினால் குணம் மாறுமா/

large_125937185

புத்தர் ஒரு ஊருக்கு சீடர்களுடன் வந்தார். “ இன்று மாலை புத்தரின் உபதேசம் இருக்கிறது  அனைவரும் வாருங்கள் “ என சீடர்கள் மக்களிடம் அறிவித்தனர்  குடும்பத்திற்காக தியாகம் செய்த பெண்கள் உழைத்தும் பலன் பெறாத ஏழைகள்  உழைக்காமலே செல்வம் சேர்த்தவர்கள்  நோயாளிகள்  பெற்றோரைப் புறக்கணித்தவர்கல் அழகு செல்வத்தால் கர்வம் கொண்டவர்கள் என பலதரப்பினரும் ஒன்று கூடினர்.

“ உத்தமரே உங்கள் பேச்சைக் கேட்பதால் எங்களுக்கு என்ன லாபம்? நாங்கள் எத்தனையோ சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறோம்  ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் பலன் பெறும் வகையில் சிறிய மந்திரம் ஏதும் இருந்தால் சொல்லுங்கள் “ என்றனர்.

புத்தர் அவர்களிடம் இந்த நிலை மாறிவிடும் என்று அழுத்தமாக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அனைவரும் அவர் சொன்னதை மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டனர். உழைக்காமல் செல்வம் சேர்த்தவர்கள் இந்த பணம் நம்மிடமே நிலையாக இருக்காது என்றாவது வேறொருவர் கைக்கு சென்றுவிடும் அதற்குள் நாலு பேருக்காவது நல்லது செய்ய வேண்டும் என தீர்மானித்துக்கொண்டனர். நோயாளிகள் இந்த நிலை மாறி நோய் நீங்கி விரைவில் பூரண குணம் பெறுவோம் என்று எண்ணினர்.  அழகால் கர்வம் கொண்டவர்கள் இந்த இளமையும் அழகும் என்னை விட்டு ஒரு நாள் நீங்கிவிடும் இனிமேல் இது பற்றி கர்வம் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தனர்.

இப்படி ஒவ்வொருவரும் நல்ல முடிவுடன் அங்கிருந்து சென்றனர். புத்தர் சொன்ன மந்திரத்தை கல்வெட்டு போல மனதில் பதித்துக்கொண்டதால் வாழ்வில் அமைதியும் நிம்மதியும் அடைந்தனர். இந்த நிலை மாறி விடும் என்ற மந்திரம் எந்தக் காலத்திற்கும் பொருந்தும்தானே?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s