நிர்ஜலா ஏகாதசி

வட நாட்டில் பெருமாள் பக்தர்களால் மிகவும் சிரத்தையுடன் கொண்டாடப்படுவது நிர்ஜலா ஏகாதசி. இதற்கு பீஷ்ம ஏகாதசி எனவும் பெயருண்டு.images (1)

வளர்பிறையில் இந்த ஏகாதசி வருகிறது நிர்ஜலா ஏகாதசி என்றால் சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கும் ஏகாதசி எனப் பொருள்/ ஒவ்வொரு ஆண்டிலும் வரும் 24 ஏகாதசிகளுள் இது தனிச் சிறப்பானது.  பொதுவாக ஏகாதசி அன்று காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்து மாலையில் நீராடி விட்டு வீட்டில் பூஜை செய்து விரதத்தை  முடிப்பர் சிலர் கோயிலுக்கு சென்று வருவர்.

மற்ற ஏகாதசியை விட நிர்ஜலா ஏகாதசி நாளில் விரதம் மிகக் கடுமையாக இருப்பர். அன்று மிகவும் இயலாத நிலையில் ஒரு குண்டுமணியை அல்லது ஒரு மிளகை தண்ணீரால் நிரப்பினால் எவ்வளவு தண்ணீர் இருக்குமோ அவ்வளவு மட்டும் குடிக்க சாஸ்திரம் அனுமதிப்பதாக வட நாட்டு பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

அன்று தானம் செய்வது ரொம்ப விசேஷம்  பானகம் நீர்மோர் மாங்காய் வாழைப்பழம் என முடிந்ததை அன்று ஏழைகளுக்கு தானமாய் தருவர். வசதி உள்ளவர்கள் ஆடை தானம் செய்வதும் உண்டு. நிர்ஜலா ஏகாதசியன்று சில விஷ்ணுகோயில்கள் விடிய விடிய திறந்திருக்கும். பக்தர்கள் அங்கேயே உட்கார்ந்து இரவு முழுவதும் பஜைகளில் ஈடுபடுவர்.  பொதுவாக மே மாதம் கடுமையான வெய்யில் காலம்  தண்ணீர் அதிகமாக தேவைப்படும் காலம். அப்போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது கடும் விரதமாகக் கருதப்படுகிறது.  இதன் பலன் நீண்ட ஆயுளும் வைகுண்டமும்.   ஒவ்வொரு மனிதரும் செய்த நல்லது கெட்டதுகளுக்கு ஏற்பவே சொர்க்கமோ நரகமோ செல்லுவர் . நிர்ஜலா ஏகாதசி விரதம்  இருக்கும் பக்தர்களுக்கும் நேரடி பாஸ்  ஆமாம்  அன்று விஷ்ணு தூதர்கள் வந்து விரதம் கடைப்பிடித்தவரை நேராக வைகுண்டத்திற்கு அழைத்து சென்று விடுவார்களாம். இனி பீஷ்ம ஏகாதசி என அழைக்கப்படுவதன் காரணத்துக்கு வருவோம்.

downloadமகாபாரதத்தின்படி பஞ்ச பாண்டவர்கள் ஏகாதசி விரதத்தை விடாமல் கடைப்பிடித்தவர்கள் 24 ஏகாதசியும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது பீமன் விஷயத்தில் மட்டும் நடக்க இயலாமல் போனதற்குக் காரணம் அவனால் பசியை அடக்க முடியவில்லை. விரதம் இருக்க இயலவில்லை இருந்தாலும் நாம் விஷ்ணுவின் கோபத்திற்கு ஆட்ப்டுவோமோ என்ற பயம் அவனை வாட்டியது. அதனால் தன்னுடைய பயத்தை குரு துரோணரிடம் கூறினான்.

பீமன்அவர் 24 ஏகாதசியும் உன்னால் விரதம் இருக்க இயலாவிடில் பரவாயில்லை. ஆனால் நிர்ஜலா ஏகாதசியன்று எப்பாடுபட்டாவது  சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருந்துவிடு. மற்ற 23 ஏகாதசிகளிலும் விரமிருந்த பலனும் சேர்ந்து கிட்டும். அதோடு மஹாவிஷ்ணுவின் ஆசியும் கிட்டும். எனக்கூற அதன்படியே பீமனும் நிர்ஜலா ஏகாதசியை கடைப்பிடித்து மன பயத்தை அகற்றிக் கொண்டானாம்.

மார்கண்டேய புராணமும் விஷ்ணு புராணமும் ஏகாதசி விரதம் இருப்பதால் நமது பாவங்கள் அனைத்தும் 383326_517367944946600_700562807_nஅகன்றுவிடும் எனக் கூறுகின்றன. அத்துடன்  நிர்ஜலா ஏகாதசி விரதமும் இருந்துவிட்டால் விஷ்ணுவின் கடைப்பார்வை நிச்சயம் நம்மீது பட்டு மகிழ்ச்சியும் ஆனந்தமும் வாழ்க்கையில் குடியேறும் நீண்ட ஆயுளும் மோட்சமும் நிச்சயம் நிறைவேறும்.   நிர்ஜலா விரதம் இருங்கள் நீங்கள் நிம்மதியான நல்வாழ்வு வாழ மஹாவிஷ்ணு மனம் வைத்து அருள்வார்.

நன்றி    ராஜேஸ்வரி  ராதாகிருஷ்ணன்  பெங்களூரு

Advertisements

2 thoughts on “ நிர்ஜலா ஏகாதசி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s